Followers

தாயுமானவள் . . .


காதலியாய் தான் இருந்து, கட்டியவளாய் மாறி வந்து,
வாய்க்காமல் போன வாழ்வதின் அர்த்தத்தை
புத்தியில் விளங்கிடவும் செய்தாள்!
விளையாட்டு பெண்ணும் அவள் அல்ல
விலையேரபெற்ற மரகதமும் தான் என்பேன்!

பட்டினியாய் தாம் இருந்தும், பிடிப்பின்றி நான் இருந்தும்
வெட்டியாய் எண்ணவில்லை, வெறும் பயலாய் மிதிக்கவில்லை
மாறாய் மனதோடு வழக்காடி, மதியயும் ஊட்டினாள்
புற அழகும் அவள் அல்ல
புன்னகையின் தேவதையும் தான் என்பேன்!

செல்லா காசாய் நான் இருந்தும், புறம் தள்ளாது தான் இருந்து
சான்றோரின் மத்தியில் சரிக்கு சரியாய் எனை நிறுத்தி
புத்திசாலியாம் இவன் என்று புகழாரம் சூட்ட வைத்தாள்
பெண் மட்டும் அவள் அல்ல
பெண்ணினத்தின் பெருமையும் தான் என்பேன்

யாரும் இல்லாது நான் இருந்தும், உன்னவளாம்
நான் என்று முன்னின்று தான் வந்து
வாழ்வதனில் முன்னிலையில் கொண்டு சேர்த்தாள்
தாரம் மட்டும் அவள் அல்ல
தாயும் ஆனவள் தான் என்பேன்!

அன்புடன் ,

டேவிட் . . .

8 comments:

குறையொன்றுமில்லை. said...

டேவிட் கவிதை நல்லா இருக்கு.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மனதை தொடும் கவிதை டேவிட் . .
நல்ல எழுதி இருக்கீங்க . .
அப்புறம் இந்த அருமையான கவிதைய , யாருக்காக எழுதுநின்களோ அவங்களுக்கு காட்டுநேன்களா? ஹி ஹி

Renu said...

டேவிட் அசத்திட போ பா.....என்ன அருமையா இருக்கு....ஆனா எனக்கு தா கொஞ்சம் புரியல 3sad....ஹிஹி....சூப்பரா இருக்கு டேவிட்....கிளாப்ஸ்...wink...

Eswar said...

Hi David super. oru ponnu eppadi irukkanum nu ne sollite. really touch kavithai. ne appadi than munnukku vanthiya. super wife ala munnukku varathe thape illa. super kiss 12kiss iloveu ukiss jkiss david wink

Anonymous said...

@ லக்ஸ்மி அம்மா .. அம்மா மிக்க நன்றி...

@ ராஜேஷ்.... அவங்க கிட்ட காமிச்சுட்டு தான் post பண்ணேன் ஹி ஹி

@ ரேணு... உனக்கு புரியலையா? நான் சொல்லி தரேன் wink shy

@ஈஸ்வர் .. நண்பா நீ தாண்ட கரெக்ட் அ புரிஞ்சு இருக்க wink

sruthi said...

david its really touching. u take a woman to a upper level bt what u said is correct. simply superb keep going

Sahana said...

awwwwwww David superb

sasi said...

awesome lines david !!! its really touching one...i think u r a lucky guy !!! all the best !!

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters