உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.
நம்மை எடை போடுகிறவர்கள்,எதையெல்லாம் வெற்றி என்று நினைக்கிறார்களோஅதையெல்லாம் தான் நாம் அடைந்து காட்ட வேண்டும். அந்த வெற்றிகளில் எவற்றைநம்மால் அடைய முடியும் என்பதை நாம் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.நாம் அடைந்த வெற்றிகளை, எப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி செய்வது
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
போரிலே எதிரிகளை வீழ்த்துவதுதான் சிப்பாயின் வெற்றி. ஆர்டர்களை கொண்டுவந்துகுவிப்பதுதான் விற்பனைப்பிரதினிதியின் வெற்றி.தங்கமெடல் களைத்தட்டிக்கொண்டு வருவதுதான் ஒரு விளையாட்டு வீரனின் வெற்றி. உங்கள் துரையில் எது வெற்றி என்பதைக்கண்டு கொள்ளுங்கள். அதை அடைவதர்கான தகுதிகள் உங்களிடம் இருந்தால் அவற்றைஅடைய முயலுங்கள்.
பிரபல பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் எழுத்தாளர்களுக்கு சொல்லும் ஓர் அறிவுரை.நமக்கும் பயன்படும். கதையைச்சொல்லாதீர்கள்.கதை நிகழ்ச்சிகளைக்காட்டுங்கள்.என்பார். அதையே நாமும்கையாள வேண்டும். நம்முடைய வெற்றிகளை, திறமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் யாரும் நம்பப்போவதில்லை. செயலில் காட்டுங்கள்.
வெற்றி என்பதை நிஜமாக அடைந்துஅதை மற்றவர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.
( ஆதாரம்:- LAWRANCE. D. BRENNAN எழுதிய MAKE THE MOST OF YOUR HIDDEN MIND POWER.)
அன்புடன் ,
லக்ஷ்மி
2 .) தமிழ்விரும்பி
7 comments:
Wow Super lakshmi amma. nalla point sonninga. nan inime ithei keepup panren amma. thanku u very much
அம்மா சூப்பர் பாயிண்ட்ஸ் . நானும் அந்த புத்தகத்தை படிக்க முற்சிகிறேன் . .
உங்களுடைய நிறைய பதிவுக்கு பின்னூட்டம் போடா முடியல , காரணம் அம்மாவுக்கே தெரியும் .
இருதாலும் வருத்தம் தான்
இனி முயற்சி செய்கிறேன் அம்மா
///@Eswar said...
Wow Super lakshmi amma. nalla point sonninga. nan inime ithei keepup panren amma. thanku u very much ////
அச்சச்சோ அப்போ ஈஸ்வர் வாழ்க்கைல முன்னேரிடுவான் போல . .
வாழ்த்துக்கள் ஈஸ்வர் . . .
அம்மா உங்களோட ப்ளொக்ஸ் எல்லாமே ஒரு ஒரு வகையில்ல உபயோகமா இருக்கு....இந்த பதிவும் அருமையா இருக்கு அம்மா....
ஈஸ்வர் வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
ராஜேஷ் கிடைக்கும் நேரத்லயும் படிச்சு பின்னூட்டமும் போடுரியே. அதுவே போதும்பா. இந்தப்பதிவையும் படிச்சு யாரானும் முன்னேறி விட்டால் சந்தோஷம்தானே.
ரேணு, நன்றிம்மா.
Post a Comment