Followers

நிலா சாப்பாடு

ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.
இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்?
அச்சா, இன்னும் 2 நாட்களிருக்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா? எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன?
அன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.
நாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா?


இந்தியன்





          இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில் ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனை தளர்த்திக்கொண்டு, காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு சேரில் சௌகரியமாகச்சாய்ந்து கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.  " சார், ஐஸ்க்ரீம், ஃப்ரூட் சாலட், கஸ்டர்ட்ஃப்ரூட் ஆரஞ்ச், லெமன் பைனாப்பில் ஜூஸ்இருக்கு, என்ன சாப்பிடரீங்க" ன்னு சர்வர் சங்கர் கேட்டான். "ஓ, கே, சர்வர், முதல்ல பட்டர்ஸ்காட்ஸ் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் கொண்டுவா" , என்ரார்கள். சங்கர் உள்ளே போய் அவர்கள் கேட்டதை கொண்டு தந்தான். சார் பிறகு, என்றான். இந்தாப்பா சர்வர் ஃப்ரூட்சாலட் ரெண்டு கொண்டுவா. என்றார்கள். அதையும் பவ்யமாக கொண்டு தந்தான்.


Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters