Followers

பெயர் குழ்ப்பம்

ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

7 comments:

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிப்பு நிக்கல..

மனோவி said...

தலைப்பே பாதி விஷயத்தை சொல்லுது..

குறையொன்றுமில்லை. said...

கருன் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

மனோவி நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோவி உங்க ப்லாக் வந்தேன் பின்னூட்டம் இட முடியலியே ஏன்?

வல்லிசிம்ஹன் said...

Super comedy. mrs.paatteel:)

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, நன்றிம்மா.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters