நாள் 1 :
பூஜா: சஞ்சய் விண்ணை தாண்டி வருவாயா படம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க நம்ம போலாமா ???
சஞ்சய் : ஆமா ப்ரிண்ட்ஸ்சும் அப்படிதான் சொன்னாங்க . இன்னைக்கே போலாமே . .
தியேட்டர்ரை விட்டு வெளியே வரும் போது
பூஜா : படம் ரொம்ப நல்லா இருந்ததுல!! இப்படி ஒரு காதலன யாரு மிஸ் பண்ணுவா சொல்லு .....??
சஞ்சய் : இப்படி ஒரு லவ் படத்துல மட்டும் தான் வரும் ... நிஜத்துல அதெல்லாம் ஒன்னும் நடக்காது ...
(அவள் மனதுக்குள் : நீ எப்போ இந்த மாதிரி ஒரு காதலன் ஆக போற டா???.... )
நாள் 4 :
சஞ்சய் : எங்க நம்ம friends யாரையும் காணோம்?
பூஜா: அவங்க எங்க போறாங்க என்ன பண்றாங்க .. ஒன்னும் தெரியல..
சஞ்சய் : சரி அப்போ நாம என்ன பண்ணலாம் இன்னைக்கு ?
பூஜா: டே நாம வேணா "horror house" க்கு போலாமா ?
சஞ்சய் : ஹ்ம்ம் ஓகே
அவளுக்கு பயமாக இருந்தது .. அவன் கைகளை பிடித்துகொள்ள நினைத்தாள் ஆனால் வேறு ஒருவர் கையை அவள் மாற்றி பிடிக்க இருவரும் சிரித்து கொண்டனர் .
இப்படி சின்ன சின்ன நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடந்தது.. அவள் அவனை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள் .. அவன் இல்லாத ஒரு வாழ்கை அவளுக்கு வேண்டாம் என்று நினைத்தாள் .
நாள் 12 :
அவர்கள் கடற்கரை மணலில் நேரத்தை கழித்தனர் .
நாள் 15 :
அன்று அவர்கள் சாலையில் குறி கூறும் ஒரு பெண்ணை பார்த்தனர்... அவரவர் எதிர் காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.
அவனுக்கு அந்த பெண் "உன்னை அன்பு செய்ய .. உன் வாழ் நாள் முழுவதும் உனக்காக வாழ ஒரு பெண் வர போகிறாள்" என்று கூறினாள்.
அவளுக்கு அந்த பெண் "உன் வாழ்கை முற்றிலும் மாறுபட்டதாக அமைய போகிறது.. அது விரைவில் நடக்கும்" என்று கூறினாள்.
இருவரும் குழப்பத்துடன் அங்கிருந்து சென்றனர் .
நாள் 20 :
அன்று அவள் வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்தாள்.
இரவில் மொட்டை மாடியில் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்பொழுது அவள் அரவிந்தை கூபிட்டாள்.
பூஜா: சஞ்சய் அங்க பாரு...
சஞ்சய் : அது shooting star தானே!!!!!
பூஜா : ஹே ஆமா ... உன் விருப்பத்தை சொல்லு .. அது கண்டிப்பா ஒரு நாள் நடக்கும்..
சஞ்சய் : சரி .. என்னை வாழ்க்கை பூரா சந்தோசமா பார்த்துக்க போற பொண்ண சீக்கிரம் காட்டு.
(அவள் மனதுக்குள் : நான் தான் டா அது .. இன்னுமா உனக்கு புரியல?? :( )
சஞ்சய் : சரி இப்போ நீ உன் விருபத்த சொல்லு ..
அவள் அமைதியாக வேண்டிக்கொள்ள .. அவன் காதில் எதுவும் விழ வில்லை ..
நாள் 29:
அவள் எதிர்பார்த்த நாள் நெருங்கி விட்டது. அவர்கள் நாளை அதே பார்க்கில் சந்தித்து கொள்ள முடிவு செய்தனர் .
நாள் 30:
11:37
அவர்கள் வாழ்கை விளையாட்டை அரம்பித்த அதே இடத்தில் அமர்ந்தனர்.
சஞ்சய் : நான் போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்.
பூஜா: சரி.. அப்படியே எனக்கு ஒரு டைரி மில்க் வாங்கிட்டு வா.
11:55
ஒரு ஆள் அவளை நோக்கி ஓடி வந்து...
அந்த தம்பி உன் கூட தான் வந்ததா மா?? ………. என்று கேட்டார்.
பூஜா : ஆமா ஏன்? என்ன ஆச்சு??
ஒரு லாரி காரென் குடிச்சுட்டு அந்த தம்பி மேல வண்டிய ஏத்திட்டு போய்ட்டான் மா...!! ஹாஸ்பிடல்க்கு கொண்டு போறாங்க மா . .
அவள் அதிர்ச்சி தாங்க முடியாமல் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு ஓடினாள்.
தொடரும்……………………………
அன்புடன் ,
maggi