ஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும்
பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரும், குழந்தைகள் படிப்புச்செலவு, வீட்டுச்செலவு அதிகமா இருந்தாலும் கூட, எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தனும் என்று மாதம் 300 ரூபா செலவு செய்து, எல்லாதமிழ் புக்ஸும் வாங்கி வந்துடுவர்.லெண்டிங்க் லைப்ரரியோ, அக்கம் பக்கம் ஷேர்பண்ணிக்கும் படியோ எதுவும் சவுரியங்கள் இல்லாத கால கட்டம். அப்போ புக் படிக்க ஆரம்பித்தபழக்கம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத்தூண்டியது. எப்பபாத்தா
லும் சரஸ்வதி தேவிமாதிரி கையில் புக்கோடயே இருப்பேன். சமைக்கும்போதும் சாப்பிடும்போதும்கூட கயில் புக் இருக்கும்.
எந்தபுக் கயில எடுத்தாலும் முதல் அட்டைதொடங்கி கடைசி அட்டை வரை
படிச்சாகணும். விளம்பரங்களைக்கூட விட்டு வைக்கமாட்டேன். அப்படி ஒரு
வெறித்தனமான படிப்பு.ஒருசமயம் படிப்பு எழ்த்துன்னா என்னன்னே தெரியாம
இருததது ஒருகாலம். இப்ப இங்க பாம்பே அம்பர்னாத் வந்து21-வருஷம் ஆகுது.
அந்தபட்டிக்காட்டு ஊர்களில் கூட எல்லாபுக்சும் கிடைத்தது. இங்க வந்ததும்
நாங்க இருந்தது ஊருக்கு 5- கிலோமீட்டர் உள்ளதள்ளி இருந்தது. பக்கத்தில்
ஒருகடையோ எதுவுமோ கிடையாது. எல்லாத்துக்கும் 5 கிலோமீட்டர்தள்ளி
போகணும். நாங்க இருப்பது அம்பர் நாத் ஈஸ்ட்.
ஸ்டேஷனுக்கு மறுபுறம் வெஸ்டுன்னு சொல்வாங்க. அங்க ஒரு தமிழ்காரர்
புக் கடை வைத்திருந்தார். 6-கிலோமீட்டர் டெய்லி போயி புக் வாங்க முடியாது.
அந்தக்கடைக்காரரிடம் எங்களுக்கு தமிழ்புக்ஸ், வாராந்திரி, மாசாந்திர, 15 நாளுக்கு ஒருமுறை வரும் புக்ஸ்,என்று மாசாமாசம் நிறைய புக் வேணும்
நாங்க டெய்லி வரமுடியாது. எங்களுக்கு புக் தனியா எடுத்துவைக்கமுடியுமா?
நாங்க 10 நாளுக்கு ஒருமுறை வந்து வாங்கிண்டு போரோம்னு கேட்டோம்.
அப்படில்லாம் முடியாதுங்க யாரு முதல்ல வராங்களோ அவங்களுக்கு கொடுத்துடுவோம்.தனியாஎடுத்தெல்லாம்வைக்கமுடியாதுன்னுசொல்லிட்டார்.
நாங்கவேணா அட்வான்சா பணம் கட்டிடரோம். தமிழ்க்காரங்களே தமிழ்க்காரங்களுக்கு ஹெல்ப் பண்ணலைனா எப்படிங்க என்ரோம்.அவர் அதுக்கு சரி நீங்க தமிழ் பேப்பர் மும்பை டைம்ஸ் வாங்குங்க.அப்ப வீட்டுக்கே
புக் அனுப்பரோம் என்றார்.சரி இப்படியாவது ஒருவழி இருக்கேன்னு நினைச்சு
சரி நாளைலேந்து பேப்பர், புக்ஸ் எல்லாம் அனுப்புங்கன்னு சொன்னோம்.
அந்த தமிழ்பேப்பர் எங்களுக்குத்தேவையே இல்லை. நாலு பக்கப்பேப்பர் அது
வும் சாணிப்பேப்பர், அதுக்கு ரெண்டுரூபா ஐம்பது காசு. ஆனாலும் புக்ஸ் வீடு
தேடி வருமேன்னு சரி சொன்னோம்.
சொன்னபடி அடுத்த நாள் பேப்பர் கல்கி, விகடன் வந்தது. அப்பாடான்னு இருன்
தது.சரி இன்மேல புக் எல்லாமே வீட்டுக்கே வந்துடும்னு சந்தோஷமா இருந்தது.ஆனா, அந்தசந்தோஷத்துக்கு அற்ப ஆயுசு. ஒருவாரம் ஒழுங்கா
பேப்பர்வந்தது, பிறகு பேப்பரும் வல்லை, புக்கும் வல்லை. திரும்ப கடை படை எடுப்பு.என்ன சார் பேப்பர் புக் 10 நாளா வல்லியேன்னோம். சார் ஒரு பையன்
கூட அவ்வளவுதூரம்லாம் பேப்பர் போட வரமாட்டேங்கரான். நாங்க என்ன
செய்ய. நீங்க ஏன் அவ்வள்வு தூரமா வீடு எடுத்தீங்கன்னுஎங்களையே கேக்க
ரான். சரி இது சரி வராதுன்னு வீடு வந்து என்னபண்ணலாம்னு யோசனை.
சென்னைக்கே வர்டாந்திர சந்தா அனுப்பி புக்போஸ்ட்லவரவழைக்கலாம்ன்னு
முதலில் மங்கையர் மலருக்கு ஒருவருட சந்தா அனுப்பினோம். அடுத்தமாதம்
கரெக்டா புக் வந்தது.ரெண்டு மாதம்சரியாவந்தபுக்அடுத்தடுத்துவரவேஇல்லை.
இங்க நாங்க இருப்பது மூணாவதுமாடி. இங்க உள்ள போஸ்ட் மேன் எல்லாம்
மூனு மாடி ஏறி டோர் டெலி வரில்லாம் பண்ணமாட்டாங்களாம். கீழ உள்ள
குட்டியூண்டு திண்ணையில் புக் போஸ்ட் எல்லாம் வச்சுட்டு போயிடு வாங்க.
வெத்தலை பெட்டி சைசில் ஒரு போஸ்ட் பாக்ஸ் கீழே இருந்தது. அதில் கார்ட்
கவர்மட்டுமே போடமுடியும். புக் எல்லாம் வெளில கீழயே வச்சுடராங்க.
அதுவும் எங்கபில்டிங்க் கீழ ஆடு, மாடு, நாய் நடமாட்டம்லாம் நிரையவே
உண்டு,மாடுகளுக்கு அசை போட நம்ம புக் தான் கிடைக்கும். சுவார்சியமா
அசைபோட்டு ஒருபக்கம் கூட பாக்கி இல்லாம தின்னுடும்.அப்பரம் நமக்கு
புக் எப்படி கிடைக்கும்?வாச்மேனிடம் சொல்லி வச்சோம், போஸ்ட்மேன் வந்துட்டுபோனதுமே புக் மேல கொண்ட் தந்துடுன்னு.அவனும் காதுலயே
வாங்கமாட்டான்.வெறுத்தே போச்சு.என்னபண்ணினாலும் ரெகுலரா புக்
கிடைக்கமாட்டேங்குதே என்னதான்பண்ண என்று.
ஜபல்புர்,சந்த்ரபுரில் இருக்கும்போது எல்லாபுக்ஸும் கரெக்டா கிடைச்சதால
மங்கையர் மலர், அவள் விகடன், குமுதம் சினேகிதி,கலைமகள் எல்லா
புக்சிலும் கதைகள், கட்டுரைகள் எல்லாம் எழுதிண்டு இருந்தேன். 15-ம் தேதி
படைப்புகளை அனுப்ப கடைசி தேதின்னு கொடுத்திருப்பாங்க. அதுக்கெல்லாம் அனுப்பினேன். இங்க வந்ததிலேந்து எல்லாமே ஸ்டாப் ஆச்சு.
முலுண்ட்ல சின்னபெண் இருந்தா. அவ வேலைக்கு போகரயில்வேஸ்டேஷன்
வருவா. அப்ப அங்க உள்ள புக்ஸ்டாலில் எல்லா தமிழ் புக்கு கிடைத்தது. அவ
வாங்கி மாசா மாசம் கூரியரில் அனுப்பி தந்தா. புக் 300 ரூபான்னா கூரியர்
செலவு 150-ஆச்சு. அந்தகாசுக்கு இன்னமும் வேரபுக்ஸ் வாங்கலாமென்னு
தோணும்.
அப்பவும் ஒருமாதம் கழிச்சு புக் கிடைப்பதால் எந்தபுக்குக்கும் எதுவும் எழுதி
அனுப்பமுடியலை. அப்பரம் சின்ன பையன் தாணா என்னுமிடத்தில் இருந்து
எல்லா புக்கும் வாங்கி மூணூ மாசத்துக்கு ஒருமுறை யாரிடமாவது கொடுத்து
அனுப்புவான். புக்ஸ் லேட்டா கிடைப்பதால் புக்கு எழுதர பழக்கமே ஸ்டாப்
ஆச்சு.லேட்டா கிடைச்சாலும் புக் கிடைக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். இப்ப சமீபமா ஒருவருடமாகத்தான் கம்ப்யூட்டர் அறிமுகம்.
நெட்ல புக் படிச்சா திருதியா இருப்பதில்லை. ரொம்ப நேர ம் நெட்லலாம் உக்கார முடியாது.கையிலபுக் வச்சுண்டு சேர்லயோ, படுத்துண்டே படிச்சாதான் திருப்தி.எல்லாபுக்கும் ஃப்ரெஷ்ஷா கிடைக்காது. பரவால்லை.
கிடைக்குதே அதேபோதும்.
அன்புடன் ,
லக்ஷ்மி
2 .) தமிழ்விரும்பி
32 comments:
புத்தகம் படிப்பதை மிகவும் சிறப்ப சொல்லி இருக்கீங்க அம்மா , நான் ஒரு புத்தக விரும்பி தான் , நானும் சின்ன வயசுல நெறைய புத்தகம் படிச்சு இருக்கேன் , நீங்க சொன்னதுல நெறைய அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு , ஆனா இப்போ எல்லாம் முன்பு போல புத்தகம் படிக்க நேரமும் கிடைப்பதில்லை , புத்தகமும் கிடைப்பதில்ல .....
வணக்கம் லக்ஷ்மி அம்மா தமிழ் ராக்ஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது
புக்ஸ் படிக்க அவ்வளவு ஆர்வமா ? நானும் தங்களை போல நிறைய புக்ஸ் படிப்பேன். நான் சிறு வயதில் "கல்கண்டு" லேனா தமிழ் வாணன் மிகவும் பிடிக்கும். ஒரு வரி விடாமல் படிப்பேன். நான் தங்களை போல பணம் கொடுத்து வாங்க வில்லை. வேஸ்ட் பேப்பர் கடை கிடைக்கும் புக்ஸ் பாதி விலை கொடுத்து வாங்க்ஹி படிப்பேன். ஹி ஹி தங்கள் நிறைய எழுதுங்கள் நன்றி.
லக்ஷ்மி அம்மா உங்கள் வருகையால் தமிழ்ராக்ஸ் மகிழ்ச்சி அடைகிறது.... என்னக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது!! அனால் உங்களின் இந்த பதிவை படித்த பின் எனக்கும் புத்தகம் படிக்கணும் என்ற ஆர்வம் உண்டானது..... உங்களின் இந்த பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்
டமிழ் ராக்ஸ் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி. பஸ்தகங்கள்போன்ற சிறந்த நண்பன்
வேறெதுவுமே கிடையாது.
ஈஸ்வர், அன்பான வரவேற்ப்புக்கும் கருத்துக்கும் நன்றி.அடிக்கடி வாங்க.
யுரேஷ் குமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாரும் அடிக்கடி வாங்க.
லக்ஷ்மி அம்மா, புத்தகம் வாசிக்கிறவங்க அருமை என்று நினைத்தேன். ஆனா இல்லை என்கிற மாதிரி நீங்க எழுதி இருக்கிறது சந்தோசம். எங்களுடைய வீட்டிலேயும் சின்ன வயசிலே இருந்து அம்புலி மாமா, கண்ணன் தொடங்கி பிறகு மு. வரதராஜன், ஜெயகாந்தன், கல்கி, சாண்டில்யன் எல்லாம் வாசித்ததாக சொல்லுவார்கள். எனக்கும் அதே மாதிரி தான். அம்புலி மாமா, கோகுலம், மாயாவி கதை, மங்கையர் மலர், குமுதம், ஆனந்த விகடன் என்று நிறைய வாசிப்பேன். அது தனி ஆர்வம் தமிழ் அறிவும் வளரும் கூட. நீங்க சொன்ன மாத்ரி சாப்பிடும் போது, படுத்துக் கொண்டு வாசிப்பது போல் வராது நெட்டில் படிப்பது.
/// எப்பபாத்தா
லும் சரஸ்வதி தேவிமாதிரி கையில் புக்கோடயே இருப்பேன். / / /
ஹி ஹி ஹி இது சூப்பர் அம்மா . . .
அப்புறம் யாரு உங்களுக்கு லக்ஷ்மி ன்னு பேரு வச்ச?
உங்களுக்கு சரஸ்வதி ன்னு பேரு வச்சு இருக்கணும்
ஹி ஹி ஹி ஹ
//// நெட்ல புக் படிச்சா திருதியா இருப்பதில்லை. ரொம்ப நேர ம் நெட்லலாம் உக்கார முடியாது.கையிலபுக் வச்சுண்டு சேர்லயோ, படுத்துண்டே படிச்சாதான் திருப்தி.எல்லாபுக்கும் ஃப்ரெஷ்ஷா கிடைக்காது. / / /
இது நூற்றுக்கு நூறு உண்மை , என்னதான் இப்போ எல்லாம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் எல்லாம் வந்தாலும் , அந்த புத்தகம் படிக்குரதுகிறது ஒரு அலாதி சுகம் தான் .
முன்பு போல இப்போ புத்தகம் படிக்க முடியுறது இல்லன்குற ஒரே கவலை தான்
லக்ஷ்மி அம்மா உங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறோம். நானும் புத்தக பிரியன் தான் ஆனால் வெளிநாட்டு வேலையால் அதை தொடர முடியவில்லை. உங்கள் பதிவால் கஷ்ட பட்டாவது புத்தகம் படிக்கலாம் என்கிற எண்ணம் வருகிறது....
"அதுவும் எங்கபில்டிங்க் கீழ ஆடு, மாடு, நாய் நடமாட்டம்லாம் நிரையவே
உண்டு,மாடுகளுக்கு அசை போட நம்ம புக் தான் கிடைக்கும். சுவார்சியமா
அசைபோட்டு ஒருபக்கம் கூட பாக்கி இல்லாம தின்னுடும்" இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, உங்கள் நகைச்சுவை யும் தெளிவாக காட்டுகிறது நன்றி..........
லக்ஷ்மி அம்மா தமிழ்ராக்ஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் பதிவுகள் எங்களுக்கு மெம்மேலும் உற்சாகம் தருகின்றன.. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அம்மா நம்பளோட அன்பான பதிவுக்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்......உங்க புத்தக ஆர்வத பார்த்து எனக்கு புல்லரிக்குது அம்மா.....நா ஸ்கூல் புக்ஸ் கூட ஒழுங்க படிக்கச் மாட்டேன் sad:( ஆனா உங்களோட இந்த ப்ளோக பாத்துட்டு என்ன ஜென்மம் நானுனு தோணுது....no no அதுக்காக என்னோட புக் படிசிடுவேணு தப்பா நினைசிடாதீங்க ...நல்ல கதை புக்ஸ் ஆ வாங்கி தா படிப்பேன் ஹிஹி....வாழ்த்துகள் அம்மா....தொடரட்டும் உங்கள் எழுத்து...
ஷஹானா அம்புலிமாமா, கோகுலம் மாயாவி முத்துகாமிக்ஸ் இரும்புக்கை மாயாவி படிக்கர பாப்பாவா நீங்க. சூப்பர்.
என்ன ஆனாலும் புக் படிக்கரதை தொடர்ந்து கடைப்பிடிங்க.
Lakshmi madam,
Am really surprised to see women reading books in these days. u r welcome madam. i used to read books before siruvar malar, varamalar like ths. bt now a days i am not able to read. bur after read ur blog, am going to read books again madam. keep going all the best madam.
தமிழ் ராக்ஸ், உன்மைதாங்க எனக்கு லஷ்மிம்ம்னு பேர்வச்சதால லஷ்மி தேவி என்கிட்டவே வர பயப்படராங்க.
தமிழ்ராக்ஸ் முன்பு போல ஏன் இப்பவும் புக் படிக்கமுடியாதுன்னு சொல்ரீங்க. சொன்னா சிரிப்பீங்க எங்க வீட்டு ஆம்பிள்ளைங்க டாய்லெட் போகும்போது கூட கையில புக்கோடதான் போவாங்க.
டேவிட் என்னை அன்பாக வரவேற்றதற்கு நன்றிங்க.த்மிழ்விரும்பி, குறையொன்றுமில்லனு இன்னும் ரெண்டு ப்ளாக் எழ்திண்டு இருக்கேன் அங்கயும் வந்து பாருங்க என்னைப்பற்றி பூரா டீடெய்லும் தெரிஞ்சுக்குவீங்க. அங்க வந்து படிச்சும் உங்க கருத்துக்களைச்சொல்லுங்க.
சூசன் நன்றிங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என்னபுக் படிக்கரோம்ங்கரது பெரியவிஷயம் இல்லை ஆனா கண்டின்யூவா படிச்சிண்டே இருக்கனம்.
ச்ருதி படிப்பைப்போல நல்ல நண்பன் யாருமே இல்லைமா. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரை பண்ணு,
/// @Lakshmi said...
ஷஹானா அம்புலிமாமா, கோகுலம் மாயாவி முத்துகாமிக்ஸ் இரும்புக்கை மாயாவி படிக்கர பாப்பாவா நீங்க. சூப்பர்.
என்ன ஆனாலும் புக் படிக்கரதை தொடர்ந்து கடைப்பிடிங்க. ///
ஹி ஹி அது அப்படிதான் சஹானா ஒரு குழந்தை பொண்ணு , என்னை மாதிரி A for Apple , B for Ball ன்னு பெரிய லெவல் புக்ஸ் எல்லாம் படிக்கிற அளவுக்கு இன்னும் வளருல ஹி ஹி ஹி . . .
///@ Lakshmi said...
தமிழ்ராக்ஸ் முன்பு போல ஏன் இப்பவும் புக் படிக்கமுடியாதுன்னு சொல்ரீங்க. சொன்னா சிரிப்பீங்க எங்க வீட்டு ஆம்பிள்ளைங்க டாய்லெட் போகும்போது கூட கையில புக்கோடதான் போவாங்க. / / /
ஐயோ ஐயோ என்ன அம்மா நீங்க இதெல்லாம் பப்ளிகுட்டி பண்ணிக்கிட்டு ஹி ஹி ஹி . ..
இருந்தாலும் உங்க வீட்டுல உள்ளவங்க ஆர்வத்தை பார்த்து மெய் சிலிர்கிறேன் . . . ஹி ஹி ஹி
நான் வெளி நாட்டுல இருக்குறதுனால படிக்கனும்ன்னு நினைக்குற புக்ஸ் அவ்வுலவா கேடைக்குறது இல்ல அதான் காரணம் . .
///@ Lakshmi said...
என்னபுக் படிக்கரோம்ங்கரது பெரியவிஷயம் இல்லை ஆனா கண்டின்யூவா படிச்சிண்டே இருக்கனம். ///
நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை , அதனாலதான் பாருங்க நம்ப ஈஸ்வரும் ,டேவிட்ட்டும் இன்னைக்கு வரைக்கும் நாலாம் வாய்பாடு இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்க ஹி ஹி ஹி
இன்னும் என்னைக்கு ஐந்தாம் வாய்பாடு வந்து , ஆறு , ஏழு ன்னு போறதுன்னு தெரியல . . .
///@ டேவிட் என்னை அன்பாக வரவேற்றதற்கு நன்றிங்க.த்மிழ்விரும்பி, குறையொன்றுமில்லனு இன்னும் ரெண்டு ப்ளாக் எழ்திண்டு இருக்கேன் அங்கயும் வந்து பாருங்க என்னைப்பற்றி பூரா டீடெய்லும் தெரிஞ்சுக்குவீங்க. அங்க வந்து படிச்சும் உங்க கருத்துக்களைச்சொல்லுங்க. / / /
என்ன இப்படி சொல்லிபுட்டிங்க , இனிமே நம்ப மக்களும் அங்க வந்து அடிக்குற கும்மிய பாருங்க . .
இதனால சகலமானவருக்கு தெரிவிப்பது என்னவென்றால் , இன்று முதல் நாம எல்லாரும் லக்ஷ்மி அம்மா வலைப்பூவிலும் போய் கும்ப கும்பலாக கும்மி அடிபோமாக . . .
லக்ஷிமி அம்மா வலைப்பூ லிங்க் மேல அவருடைய பேருக்கு கீழே கொடுக்க பட்டு உள்ளது . ..
தமிழ் ராக்ஸ் என்னை ஓவராபுகழுரீங்க அதேசமயம் ஸஹானா, டேவிட் எல்லாரையும் கலாய்க்குரீங்களே ஓ, நீங்களே ஏ ஃபோர் ஆப்பில் லெவல்தானா. நீங்க எல்லாரும் என்பதிவுல வந்து கும்மி கோலாட்டம் எல்லாம் அடிக்கப்போரீங்களா? சூப்பரா ஆயிடும் என் பதிவெல்லாம். ஹா, ஹா, ஹா
\\\நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை , அதனாலதான் பாருங்க நம்ப ஈஸ்வரும் ,டேவிட்ட்டும் இன்னைக்கு வரைக்கும் நாலாம் வாய்பாடு இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்க ஹி ஹி ஹி\\
ராஜேஷ் நான் தான் நாலாம் வாய்பாடு ஈஸ்வர் இன்னும் மூணாம் வாய்பாடு தான்
அம்மா என்ன இப்படி சொல்லிடீங்க நான் இந்த அம்புலி மாமா கல்கண்டு குமுதம் எல்லாம் படிச்சதே இல்ல. சுஜாதா வோட சுஜாதாவிடம் கேளுங்கள் அக்னி சிறகுகள், முத்தாரம், ராஜேஷ் குமார் நாவல் இதெல்லாம் தான் படிப்பேன் நான் அவங்கள மாறி சின்ன பையன் இல்ல ஹி ஹி ஹி ஹி ஹி
அம்மா என்னை போய் நீங்க னு சொல்ல வேணாம் நான் உங்க கடைசி பையன் மாதிரி எனக்கு 16 வயசு தான் ஹிஹி ஹிஹி
டேவிட் என் முதல்பேரனுக்கே 20 வயசுப்பா. நீயும் என் பேரந்தான் . இது போதுமா? ஆமா உனக்கு ஸ்வீட் சிக்ஸ்டீன் வயசுன்னு நான் நம்பனுமா?:)
சின்னப்பையனே ஹாரி பாட்டர்லாம் படிச்சதில்லையா? அம்புலிமாமா, கல்கண்டெல்லாம் படிச்சிருந்தா உன் வயசு கண்டிப்பா 30+ க்கு மேலதான் இருக்கும்.
புத்தகமா???? ..... எனக்கும் புத்தகத்துக்கும் ஆகாது ...ஹி ஹி ஹி .. ஆனால் ஸ்டோரி புக்ஸ் நல்லா இருக்கும்... லக்ஷ்மி அம்மா எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இல்ல ... இனிமேல் அது முடியுமா நு தெரியல .. அதனால நீங்க எங்களுக்கு நிறைய கதை சொலுங்க .. நாங்க எல்லாரும் படிச்சி கதை ஆர்வத்த வளதுகுறோம்.. ரொம்ப அழகா உங்களோட புத்தக விருப்பதை சொல்லி இருக்கீங்க .. தமிழ் ரோக்ஸ் இல் உங்கள் பயணம் தொடரட்டும்.... அன்புடன் மேகி .. :)
maggi, உங்க எல்லாரோட அன்பான வரவேற்புக்கு நன்றிங்க. புக் படிப்பதில் இண்ட்ரெஸ்ட் இல்லைனா என் பதிவுமட்டும் எப்படிங்க படிக்கமுடியும்?
Post a Comment