நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
ஹாலில் வரிசையாக அமர்வார்கள்.
ஒவ்வொருவராக சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள் .இவர் முறை வந்தது. சாமி நான் கேக்கற கேள்விகொஞ்சம் உங்களை சங்கடப்படுத்தும்.
தவறாக எண்ணக்கூடாது என்றார். சாமிகளும் என்னப்பா கேட்டுக்கோயேன்
என்றார். வந்து சாமி, இந்த காய்கறிகள், பழங்கள் ,பூக்கள்,இதுக்கெல்லாம்
உசிர் உண்டா என்றார். அதிலென்னப்பா சந்தேகம். எல்லாத்துக்குமே உசிர்
உண்டுப்பா என்றார். அப்போ சாமி, சில பேரு ஆடு, கோழி, மீன் வெட்டி சாப்பி
டராங்க இல்லியா? ஒரு உசிரைக்கொன்னுதின்னா பாவம்னு உங்களைப்போல
பெரியவங்க சொல்ராங்க.அப்ப காய்,பழம்எல்லாத்துக்குமேஉசிர்இருக்குன்னா
அதுவெட்டி சாப்பிட்டா அதுபாவமில்லையான்னு கேட்டார். சாமிகள் கொஞ்ச
நேரம் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார். என்ன சாமி பதில் சொல்ல முடியலியா? என்றார். சாமிகள் பொறுமையாக, பதில் சொல்லலாம்பா. அதை
உனக்கு புரியும்படி எப்படி சொல்வதுன்னு யோசிச்சேன், என்றார். எதானாலும்
சொல்லுங்க சாமி. என்றார்.
சரி இப்ப விஷயத்துக்கு வரலாம், ஆடு கோழி வெட்டி சாப்பிடரவங்க, அந்த
பிராணி களை வெட்டும்போது அதுகளுக்கு வலி வேதனை உண்டாகுமா இல்லியாஅந்தபிராணிகளைதிரும்பவளரவைக்கமுடியுமா.முடியாதுஇல்லியா
இப்போ காய் பழம் ஒரு மரத்லேந்து எடுக்கரோம். இதுக்கு உனக்கு புரியும்படி சொல்லணும்னா நம்ம உடம்புலயும் உசிர் இருக்கு எல்லா அவயவங்களிலும்
உசிர் இருக்கு. ஆனா மாசா மாசம் நாம முடி வெட்டிக்கரோம், நகம் வெட்டிக்கரோம். நம்ம உடம்புக்கு தேவை இல்லாததால அதை நீக்கரோம்.
முடி நிறையா வளந்தா எவ்வளவு க்ஷ்டமா இருக்கு தேவைக்கு அதிகமாகும்
பொருளை வெட்டி எறிஞ்சுடரோம். நகமாகட்டும் முடி ஆகட்டும். அப்பா முடிக்
க்கோ, நகத்துக்கோ வலியோ வேதனையோ உண்டாகுமா? இல்லைய்தானே?
நம்ம உடம்புலேந்து நீக்கின பிறகு அதுகள் வளருமோ இல்லியே. நம்ம அதை
நீக்கின பிறகு அதுக்கு எந்த சக்தியுமேஇல்லை.
அதுபோல காய் பழம் மரத்ல இருக்கும்வரையில் அதுக்கும் உசிர் இருக்கு.
மரத்துக்கு தேவைக்கு அதிகமாகி நாம பரிச்சப்பரம் அதுக்கு ஏது உசிர். தவிர
திரும்பவும் அந்தமரத்ல காய் காய்க்கும் ,பூ பூக்கும் ,பழம் பழுக்கும். நாம
மரத்தை வேரோட வெட்டிச்சாய்க்கலை. மரத்துக்கு தேவைக்கு அதிகமாக
இருப்பதை நாம எடுக்கறோம். நகதுக்கும், முடிக்கும் எப்படி வலி இருக்காதோ,
அதுபோல காய்களுக்கும் பழத்துக்கும் வலிஇருக்காது.மரத்திலேந்துபரித்ததும்
அதுகளுக்கு உசிரும் இருக்காது. அதனால இது பாவம் கிடையாது என்றார்.
சுற்றி உள்ள பக்தர்கள் சாமியின் விளக்கம் கேட்டு திருப்தியுடன் தலையை
அசைத்து ஏற்றுக்கொண்டனர். ஆனா அந்த பக்தரோ சாமி புரியுது ஆனா
புரியலை. ஒரே குழப்பமாஇருக்கேன்னே சொல்லிட்டு அங்கேந்து போனார்.
அன்புடன் ,
லக்ஷ்மி
2 .) தமிழ்விரும்பி
17 comments:
Nice post.,
நன்றி கருன்
நல்ல பதிவு வாழ்த்துக்கள் லக்ஸ்மி அம்மா. தொடருங்கள்
நன்றி தோழிபிரஷா.
லக்ஷ்மி அம்மா உங்க போஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு ..... இப்படியும் கேள்விகள் கேபாங்களா நு தோணுது.... நல்ல ஒரு பதிலும் கிடைத்தது.. உங்க கிட்ட இருந்து நிறைய கதைகள் எதிர்பாற்குறோம் ... வாழ்த்துக்கள் .. :)
Nalla story lakshmi amma.
maggi, வருகைக்கு நன்றிங்க . ஏதோ சுமாரா எழுதுவேங்க. உங்க பாராட்டுக்கள்தான் டானிக் எனக்கு.
ஈஸ்வர், நன்றிங்க.
ithe santhegam enakum irunthuchu ipothan doubt clear achu. thanks and nice post.
கார்த்திக்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ.
மகா பெரியவாளோட பதில் சரியா இருக்கும். இப்பதான் இதைப் பார்த்தேன்
கார்த்தி வருகைக்கு நன்றி.
அம்மா ரொம்ப தெளிவான பதிவு , ரெண்டு நாளாக தொடர்ந்து அலுவலக பணி காணரமாக பின்னூட்டம் எல்லாம் இட முடியல . . .
பெரியவாள் சொன்னது மிக சரியே , இப்போ பார்க்கும் போது நமக்கு சைவ உணவே ஆரோக்கியத்துக்கு நல்லது . .
Supera iruku Laskmi amma....claps...
டமில்ராக்ஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரேணு, உன்னோட க்ளாப்ஸ்
சப்தம் இங்கவரை கேக்குது.
அதனால தான் அவர் மகான்.
ஒரு வெளிநாட்டவர் நம்ம ஊர்ல சுற்று பயணம் செஞ்சு கிட்டிருக்கும் போது, மகா பெரியவர் அந்த ஊருக்கு வந்தாராம். எல்லாரும் ஜகத்குரு, ஜகத்குரு ன்னு சிலாகிச்சாங்களாம். அப்படின்னா என்னனு அங்க இருந்த ஒருத்தர வெளிநாட்டவர் கேட்டாராம். உலகத்துக்கே குரு அப்படின்னாராம். இவரை நான் இன்னைக்கு தான் பாக்கறேன். இதுக்கு முன்ன இவரை பத்தி கேள்விப் பட்டது கூட இல்லை. இன்னும் என்ன மாதிரியே இவரை தெரியாத எவ்வளவோ பேர் இந்த உலகத்துல இருக்காங்க. இவர் எப்படி ஜகத்குருவாக முடியும்? அப்படின்னு இவருக்கு தோணிச்சாம். சரி, அவர் கிட்டே கேட்டுடுவோம்ன்னு, அவர பாத்து கேட்டாராம். அதுக்கு மகா பெரியவர் சொன்னாராம்... ஜெகத்குருன்னா அதுவா அர்த்தம்? இந்த உலகத்தில இருக்கற எல்லாரையும், எல்லாத்தையும் குருவாக கொண்டவன் நான் அப்படிங்கறதால அப்படி கூப்பிடுறாங்கன்னு தானே நெனச்சேன் அப்படின்னாராம்.
அதனால தான் அவர் மகான்.
Post a Comment