Followers

நந்தவனம்


என் அழகிய ரோஜா
கை நழுவி நிலத்தில் விழவில்லை
நெருப்பில் விழுந்து விட்டது
எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை- சுறாவளி
என் சுகந்தமான தென்றலை இழுத்து சென்றது...

அன்று இன்பம் வீட்டினில் தவழ்ததால் துன்பம் இல்லை...
இன்று துன்பம் வீட்டில் குடி அமர்ந்ததால் இன்பத்தை நெருங்க முடியவில்லை...

அன்று என் கண் எதிரே உலவிய தெய்வம்
இன்று நிழலாய் போனதேன்?
கனவுகள் மட்டுமே என் வாழ்க்கையா?

வாழ்க்கை எனும் சுவட்டில் காலம் ஒரு தொடர் கதை
பாதி எழுதுவதற்குள் கதையின் கரு தொலைந்து விட்டது

உயிர் கொடுத்து அன்பை சமைத்து ஊட்டியவளே
நான் அம்மா சொன்ன போது என் உச்சி முகர்ந்தவளே
உன் விரல் பிடித்து நடந்த போது தேர் வடம் பிடித்த பெருமை எனக்கு
இன்று தெய்வம் இல்லா கோவில் ஆனேன்

மலரினும் மெல்லிய உன்னை தீ தான் தழுவியதோ?
அன்று நிலா காட்டி எனக்கு சோறு ஊட்டினாய்
என் பசி திரும் முன் நீ எங்கே சென்றாய்
நான் கேக்கிறேன் நிலவே என் தாய் எங்கே?
என் வாழ்வில் என்றும் அமாவாசை தானோ

என்ன தான் செய்தாலும்
இதயம் ஆற மறுக்கிறது

வாழ்கையின் கண்ணா மூச்சி விளையாட்டு இறப்பு தானே
மரண தூதன் வந்து அழைத்து விட்டான் நீயும் சென்று விட்டாய்.

அல்லல் படுகிறேன் நான் இங்கு தனியாக அம்மா
யாரிடம் ஓடுவேன் கடவுளிடம் ஒடுவேனா,
இல்லை கதறி தான் அழுவேனா என்ன செய்ய முடியும்.
உன் கருவறை மட்டும் உலகம் என கொண்டவளே இங்கு
தனியாக விட்டு எங்கே சென்றாய்.
நாட்கள் ஓடி விட்டன இப்பொழுதும் உதடுகள் கேட்கின்றன
எங்கே என் அம்மா என்று...??????

சூல் கொண்ட உன் கருவில் நான் மீண்டும் பிறப்பது எப்போது?
என் வசந்தம் திருமபுமா?
உன் கல்லறை சுமக்கும் பூக்கள் எல்லாம் எந்தன் இதய வலியே
உன் தோட்டத்தில் நான் மலர்வது எப்போது அம்மா


வலியுடன் , 

ஜெஸ்சி . . 

 

16 comments:

குறையொன்றுமில்லை. said...

அம்மாவுக்கு நெகிழ்ச்சியான அஞ்சலி

Manoj said...

wow deva super ..... room potu yosixhiya illa thaniya oru veedu katti yosichiya.... enaku yosicha quarter koli briyani thavira ethuvum vara maatidhu he he he he.... nice post jessi go ahead .....

jessi said...

அம்மா மிகவும் நன்றி

jessi said...

he he surya lol thanks mano

Anonymous said...

superb dear kiss kiss hug

Anonymous said...

உயிர் தந்த தாய்க்கு இப்போது உயிர் இல்லை என்று அருமையாக எழுதி கண்ணில் கண்ணீரை வரவைத்தாய் .... மேலும் தொடரட்டும் உன் பதிவுகள் ... வாழ்த்துக்கள் சோனியா

jessi said...

awwwww sonia thanks so much kiss kiss kiss hug

Yuresh Kumar said...

wowwwwwwww Jessi amma yendrale kavithai thaan.. avngaluku oru kavithaina realy super da...... congrtas da... flowers for u .... kalakita poooo.... teh kavithao was really super adn touching da... i expect more from u jessi... clap clap .... adutha blogukum vazthukal da.... :)

jessi said...

yuresh thanks . amma yendrale kavithai thaan romba alaga sonninga yuresh , thanks

jessi said...

jeni chellam kiss kiss thanks dear

jeru said...

அம்மாவோட இழப்பு நிச்சியமா யாரோட வாழ்கைலேயும் வரவேகூடாது....அம்மாக்களே ஒழுங்க உங்க உடல் நலனை கவனிங்க...... நாங்க படுகிற வேதனைய தயவு பண்ணி உங்க பசங்களுக்கு கொடுத்துடாதீங்க......கண்ணீருடன் ரேணு....ஜெசி ரொம்ப பீல் பண்ண வசிட்ட பா....

jessi said...

renu dear dw dw , kiss kiss hug

Anonymous said...

jessi very touchable poem super ma ...chumma kalakitey ...keep rocking ..kiss kiss

jessi said...

shakira dear thanks kiss kiss kiss

kaspandikannan said...

k







































































m







kaspandikannan said...

amma engira vanavillugu unthan aasai padi vanam thedi vittai adi

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters