Followers

பதிவுலகில் பெண்கள் ......

பதிவுலகில் பெண்கள் ......

            Tamilrockzs  இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும் படலம் கோலாகலமாக ஆரம்பம் .

                         வாழ்கையில் எப்பவும் மனிதனுடைய போராட்டம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டிதான் . அங்கீகாரம் கிடைக்க எப்பவும் ஒரு அறிமுகம் தேவை . அதன் அடிப்படையில் உருவான எண்ணம் தான் இந்த அறிமுக படலம் .
          
                                    பொதுவாகவே எழுத்து துறையில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாவே இருக்கும் , ஆனால் பெண்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணம் தான் இந்த பதிவு . யாரை முதலில்  அறிமுகம் படுத்துவது என்ற எண்ணம் வந்த போது வழக்கம் போல் பெண்களுக்கு முதலிடம் . வலைபூ பதிவுலகில் உள்ள பெண் பதிவர்களை  அறிமுகப்படுத்த போகிறோம் . இது ஒரு ஆரம்பமே . தொடர்ந்து பல நல்ல பதிவர்களை அறிமுக படுத்த உள்ளோம் .

                                      இங்கே அறிமுக படுத்த படும் பதிவர்கள் , நமது வலைபூ தளத்திலும் எழுத அழைக்க படுகிறார்கள் .நமது இந்த வலைபூவில் எழுத விருப்ப படுபவர்கள் இந்த ஈமெயில் க்கு ஒரு விருப்பம் தெரிவித்து மெயில் அனுப்பினால் உடனே அவர்களுக்கான அனுமதி லிங்க் அனுப்ப படும் .
ஈமெயில் : tamilrockzs@gmail.com



Note : இங்கு ஒவ்வொரு அறிமுகத்திலும் குறிபிட்டுள்ள பெயரில்லும் , வலைப்பூ பெய்யரில்லும் அவர்களது வலைபூ தளங்கள் லிங்க் இணைக்க பட்டுள்ளது அதனால் அவர்களின் வலைப்பூவுக்கு( blog ) செல்ல அதன் பெயர் மீது சொடுக்கினால் (click )  போதும் அந்த தளம் திறக்கும் . நன்றி

அறிமுகம் - 1 

வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                  2 .)  தமிழ்விரும்பி

       முதல் அறிமுகமே தாயை போல இருக்கும் லக்ஷ்மி அம்மா , இவரை அம்மா என்று அழைக்கவே நான் ஆசைபடுகிறேன் . லக்ஷ்மி அம்மாவை நமது வலைப்பூவில் முதல் அறிமுகமாக அறிமுகம் படுத்துவதில் நாம் பெருமைபடுகிறோம் . 

                   லக்ஷ்மி அம்மா மிகவும் கண்ணியமான பதிவர் , நல்ல தெளிவான எழுத்துக்கள் . எனக்கு மிகவும் பிடித்த வலைபூக்கள் இவர் வலைப்பூவும் ஒன்று  . இவர் பெண் என்பதால் வெறும் பெண்மையை மட்டும் போற்றி எழுதாமல் எல்லா விஷியங்களையும் எழுத கூடியவர் .
        மிகவும் முக்கியமான ஒன்று , இவர் ஒரு சிறிய வட்டத்துக்குள் இல்லாமல் , இன்றைய இளைஞர்கள் எழுதும் பெருவாரியான  பதிவுகளை படிக்க கூடியார் , பின்னோட்டம் இட கூடியார் .

நன்றி லக்ஷ்மி அம்மா ... வாழ்த்த வயது இல்லை வணகுகிறோம் .


அறிமுகம் - 2

பெயர் : இந்திரா

                       இந்திரா , ஜனரஞ்சகமான , நகைசுவை ததும்ப எழுத கூடிய பெண் பதிவர்களில் இவர் மிக முக்கியமானவர் . இவர் பல்பு என்கிற தலைப்பில் எழுதிய பதிவுகள் கண்டிப்பாக நகைசுவைகளுக்கு பஞ்சம் இருக்காது .
இந்திரா பெருமையுடன் வாங்கிய பல்புகள் : நான் வாங்கிய பல்பு..தேடிப்போய் வாங்குன பல்பு...  ,   போன் பண்ணி பல்பு குடுக்குறானுக...
தன்னுடைய அனுபவங்களை சுவரசியமுடன் சொல்ல கூடியார் .

வாழ்த்துக்கள் இந்திரா ....

அறிமுகம் - 3  


பெயர் : Ananthi Subbiah
வலைப்பூ  :  1.) அன்புடன் ஆனந்தி
                     

       ஆனந்தி  சுப்பியா , நிறைய கவிதைகள் , அனுபவங்கள் பல , சமையல் என்று எல்லாம் எழுதும் ஒரு பெண் பதிவர் , ரொம்ப எளிமையான , எதார்த்தமான எழுத்துக்கள் . படிபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்  ஒரு வலைப்பூ . நிறைய எழுதுங்கள் ஆனந்தி ..

வாழ்த்துக்கள் ஆனந்தி ....
 



அறிமுகம் - 4

பெயர் : தோழி பிரஷா
வலைபூக்கள் :  1 .)  ரோஜாக்கள்
                                  2 .)  தகவல் தொழில்நுட்ப செய்திகள்
                                  3 .)  படத்துடன் கவிதைகள்.

         தோழி பிரஷா , வலைப்பூக்களில் கவிதை எழுதுபவர்களை பார்த்து இருக்கிறோம் ஆனால் வலைபூவையே கவிதையாய் வைத்து இருபவரை பார்த்து இருகிறோம? அதுதான் இவரின் வலைப்பூக்கள் .   இவர் கவிதை பதிவு இடுபவர் மட்டும் இல்ல இவரின் வலைபூக்கள் எல்லாமே கவிதையாகத்தான் இருக்கும் . அதிலும் இவரின் ரோஜாக்கள் வலைபூ கண்ணை பறிக்கும் ரோஜாகளினால் அலங்கரிக்க பட்டு , ஒரு ரோஜா தோட்டம் போல் ஜொலிக்கும் . மனதை வருடும் கவிதைகள் மட்டும் அல்லாது , தகவல் தொழில்நுட்பத்திலும் கலக்கும் பெண் பதிவர் .

வாழ்த்துக்கள் தோழி பிரஷா .

அறிமுகம் - 5  


பெயர் :  சக்தி ( sakthi )
வலைப்பூ  :  வீட்டுப்புறா

            சக்தி , இவரும் ஒரு கவிதை பதிவர் தான் . அருமையான கவிதைகளுக்கு தகுந்த படங்களை தேடி பிடித்து ஒவ்வொரு பதிவுவிளையும்  சேர்த்து இருப்பார் . நல்ல கவிதைகள் இவரது பதிவில் கொட்டி கிடக்கின்றன ..கண்டிப்பாக படிக்க வேண்டிய வலைபூ .

வாழ்த்துக்கள் சக்தி ...

அறிமுகம் - 6  


பெயர் : ரீனா
             ரீனா, கவிதை , தொடர் கதை , சினிமா , அனுபவம்  மற்றும் பல என்று எல்லா பக்ககளையும் தொட கூடிய பல்சுவை பெண் பதிவர் . நல்ல பொழுதுபோக்கு வலைபூ . நடுவில் கொஞ்சம் நாள் பதிவிடாம இருந்து இப்போது மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டார் . தொடர்ந்து எழுதுங்கள் ரீனா .

வாழ்த்துக்கள் ரீனா . .

அறிமுகம் - 7  

வலைபூக்கள் :  1 .)  மனச்சாரல்கள்
                                  2 .)  FOREVER LOVE


         என்றும் அன்புடன்!! , பெயர் வெளிட விரும்பாத இந்த நண்பி இந்த வருடம் தான் புதியதாக பதிவுலகிருக்கு  வந்து இருக்கிறார் , புதியவர்களை ஊக்க படுத்தினால்தான் அவர்களுக்கு ஒரு தனம்பிக்கை கிடைக்கும் அந்த வகையில் இந்த அறிமுகம் . . இன்னும் நிறைய எழுதுங்கள் .   மனச்சாரல்கள் லில் கவிதைகளும் , FOREVER LOVE  வலைப்பூவில் படங்களுக்கு அழகான வரிகளையும்  இணைத்து பதிவிடுகிறார் , தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்!! . . .



அறிமுகம் - 8  


வலைபூக்கள் :  1 .)  வாசல்
                                  2 .) மனதோடு  மட்டும் 


                கௌசல்யா  , மிகவும் திறமையான பதிவர் , வாசல் வலைபூவில் கவிதைகளையும் , மனதோடு  மட்டும்  வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளிலும் சுவாரசியமான பல பயன் உள்ள பதிவுகளை இட்டுள்ளார் .அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வலைப்பூ .

வாழ்த்துக்கள் கௌசல்யா. .
 
அறிமுகம் - 9  


வலைப்பூ :  Chitra Amma's Kitchen

                சித்ரா , பதிவுலகில் மணக்க மணக்க ஒரு வலைப்பூ , அதாங்க சமையல் ஸ்பெஷல் வலைப்பூ , Chitra Amma's Kitchen திறந்திங்கினாவே சும்மா சமையல் மணக்கும் அந்த அளவுக்கு பல்வேறு வகையான சமையல் குறிப்புகளையும் , செய்முறைகளையும் விளக்கி இருக்காங்க , சும்மா கல்யாண வீடு போல களைகட்டுது இவங்க வலைபூ .
               புதியதாய் கல்யாணம் ஆனா பெண்களுக்கும் , கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும் இனி கவலையே இல்லை , இவங்க வலைபூ வை படிச்சாலே பொது சும்மா உங்க வீட்டுல சமையல் பின்னிடலாம் ... கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டிய வலைபூ . .

நன்றி சித்ரா அம்மா , வாழ்த்துகளும் . ....


அறிமுகம் - 10  


வலைபூக்கள் :  1 .)  Geethas Womens Special
                       2 .) News
                       3 .) Tech Blog


                கீதா  அஞ்சலி , மொத்தம் மூன்று வலைபூக்கள் , மூன்றும் மூணு விதம் . அழகான template உடன் ஒரு வலைப்பூ என்றல் , நியூஸ் என்று செய்திகளை தரும் ஒரு வலைப்பூ . Tech Blog  என்று தொழிநுட்ப பல பயனுள்ள ஆலோசைனைக்களை அள்ளி வழங்குகிறார் . கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூக்கள் ...


வாழ்த்துக்கள் கீதா அஞ்சலி ...




பிரபலத்தின் வலைப்பூ -1 


                  வலைப்பூ எழுதி பிரபலம் அடைந்தவர்கள் பல பேர் உண்டு , அவர்களை பிரபல பதிவர் என்று அழைகிறார்கள் . ஆனால் பிரபலங்களும் பதிவுலகில் உண்டு அதாவது ஏற்கனவே ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருக்க கூடியவரும் இங்கு பதிவுலகத்தில் பங்களிபதுண்டு , அது போல் ஒரு பெண் பிரபலத்தின் வலைப்பூ தான் இங்கு  இப்போது  அறிமுகம் .
                
               
பிரபலத்தின் வலைப்பூ அறிமுகம்


பெயர் : கவிதாயினி தாமரை .
வலைப்பூ  :   கவிதாயினி தாமரை

                           தாமரை , திரைப்படங்களில் காதல் கவிதையால் ஏற்கனவே தமிழ் மக்களை  தாக்கிய கவிதை புயல் , ஆயிரகணக்கான ரசிக உள்ளங்களை கொள்ளை அடித்தவர் , திரைப்பட பாடல் ஆசிரியர் தமிழ் கவிஞர் தாமரை ...............
 இவரின் கவிதை தொகுபுகளைதான் இந்த வலைப்பூவில் காணலாம் . திரைப்பட பாடல்களில் நம் மனதை கொள்ளை அடித்தவர் , இங்கு பதிவுலகத்திலும் தன்னுடைய கவிதையல் நம்மை கொள்ளை அடிக்க வந்து இருக்கிறார் . இவரை பெருமையுடன் அறிமுக படுத்துகிறோம் .

நன்றி கவிஞர்  தாமரை அவர்களே ......

                     


          அறிமுக படலம் எனபது இத்துடன் முடிய போவதில்லை இது ஒரு தொடக்கமே , இனி வரும் காலங்களில்லும் குறிப்பிட்ட கால  இடைவெளியில்  அறிமுக படலலங்கள்  தொடரும் ஒவ்வொரு பிரிவின் கீழ் .

இங்கு அறிமுகபடுத்திய  அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் ...

              இங்கு நமது வலைப்பூ குழுமத்திலும் பதிவு இடும் இளம் பதிவர்களுக்கும் தங்கள் ஆதரவையும் , அங்கீகாரத்தையும்  தந்து ஊக்கம் அளிக்குமாறு வேண்டும்  அன்பு உள்ளம் ......

மீண்டும் சந்திக்கும் வரை ,

நன்றி , 

அன்புடன் ,

Admin 



http://tamilrockzs.blogspot.com/




Category: 10 comments

10 comments:

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

என்னையும் தங்கள் தளத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க :-)

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

குறையொன்றுமில்லை. said...

உங்களின் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி. நீங்க எழ்திஅறிமுகப்படுத்தியிருப்பதைப்பார்த்தபோதுதான் நானும் ஏதோ ஓரளவு எல்லாரையும் திரும்பி பார்க்கும்படி எழ்தரேன்னு தெரியவந்தது.உங்களின் இந்த சிறப்பான முயற்சிக்கு பாராட்டுக்கள். இன்னும் திறமையானவர்களை அறிமுகப்படுத்துங்க.

sasi said...

well done Rajesh!!

ippadi prabalangala innum prabala paduthy neenga prabalam ageteenga Rajesh, clap clap ...

Geetha6 said...

மிக்க நன்றி தோழரே ! என் மணம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் சேவை!!

Eswar said...

அன்புள்ள ராஜேஷ் எல்லாம் சரி நம்ப தோழி மேகி, ஷாகிரா அம்மு இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய வில்லையா. இவர்களும் எழுத்தாளர்கள் தானே ராஜேஷ். பரவா இல்லை இனி இவர்கள் நம் வலை பூ படிப்பார்கள் என்று நம்புவோமாக. (முதலில் எல்லாம் வோட்டு போடுங்க பா)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

என்னையும் தங்கள் தளத்தில் அறிமுகப் படுத்திய தங்களுக்கு நன்றி சகோ...

தொடர்ந்து உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

Chitra Amma's Kitchen said...

உங்கள் தடபுடலான அறிமுகம் கண்டு மிகவும் சந்தோஷம்.
வாழ்த்துக்கள். வணக்கங்கள்.

Kousalya Raj said...

உங்களின் இந்த அருமையான அறிமுகத்திற்கு ரொம்ப நன்றிங்க...

தாமதத்திற்கு மன்னிக்கவும்

அறிமுகங்கள் தொடர வாழ்த்துக்கிறேன்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

மிகத் தாமதமாக வந்திருக்கிறேன்.
அதற்கு நண்பரிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பதிவுகள் பற்றி இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சக பதிவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சில வேலைப்பளு காரணமாக இந்தப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது.

இனி இதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.

நண்பருக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters