Followers

ட்சுனாமி

எந்த மொழியில் சொல்லி அழ?
என்ன சொல்ல என்ன சொல்ல
எந்த வார்த்தைகளில் சொல்ல?
ட்சுனாமி அலை பேரழிவை
எந்த மொழியில் சொல்லி அழ?

பால் குடித்த சிசு வாயை மூடுவதற்குள்
பால் தந்த அன்னை விழி இமைபதற்குள்
அத்தனையும்  அழிவாட்சே ,
அரும்புகளும் பினாமட்சே!

தென்னைமர உச்சி வரை
சீறி வந்த பேரலையால்
தெருவென்ன, ஊரென்ன
திசை எல்லாம் பினாமாட்சே !

உயிர் கொடுத்த பெற்றோர்கள்
உடன் பிறந்த சகோதரர்கள்
செய்திட்ட பாவமென்ன
சீற்றம் கொண்ட பேரலையே!

கடல் தன்னை தாயக
களம் எல்லாம் தொழுதவர்கள்
கடல் சிதைத்திட்ட சவங்கலேன
கரை ஒதுங்கி போனதென்ன?

அன்னை ஆவல் மடியாக
அரவணைத்து வளர்த்து விட்டு
ஆர்பரித்து அலை கரத்தால்
அழித்து ஏன் பெருங்கடலே?

ஜப்பானில் உயர் ஈழந்தவர்களுக்கு இதை சமர்பிகின்றேன்

கண்ணீருடன்,

யுரேஷ் !!

7 comments:

சக்தி கல்வி மையம் said...

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றிகள்..

Yuresh Kumar said...

வேடந்தாங்கல் கருண் உங்கள் கம்மேன்ட்கு மிக்க நன்றி தோழரே....

Anonymous said...

இறைவனிடம் சேர்ந்த நலடியோருக்கு பிராத்தனை செய்வோம் !!!

Anonymous said...

heartbreaking but who can avoid fate? nice post yuresh keep going...

renu said...

Super Yuresh...
சுனாமி சுனாமி, ஏழை மக்களை எல்லாம் வாரி போன சுனாமி,
நீ இன்னொரு முறை வந்தால்
என்னையும் கொஞ்சம் கண் பாரு...hehe...

குறையொன்றுமில்லை. said...

மனதை கலங்க வைத்த பகிர்வு.

கோலா பூரி. said...

இயற்கை அன்னைக்கு இப்படி ஒரு சீற்றமா?

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters