Followers

மிஸ்டர் எகஸ் - 2

                       பாட்டு பாடணும்.

     மிஸ்டர் எக்ஸுக்கு மனைவியும்,   இரண்டு வயதில் ஒரு குட்டி பையனும்
     இருந்தார்கள்.ஒரு சமயம் பக்கத்து வீட்டு குழந்தைக்கு ஒன்றாம் வயது
     பிறந்த நாள் விழாவுக்கு இவர்களையும் அழைத்திருந்தார்கள். 6  மணிக்கு
     மூவரும் கிளம்பி  போனார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து நிறைய
     குழந்தைகள் பெற்றோருடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் கலர் தொப்பி
     கலர் கண்ணாடி மாஸ்க் எல்லாம் போட்டுன்ண்டு ஒரே ஆட்டம் பாட்டம்
     கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 7- மணிக்கு கேக் வெட்டி ஹேப்பி பர்த்
     டே பாடி கேக் ,ஸ்னாக்ஸ் ஜூஸ் எல்லாம் சாப்பிட்டார்கள்.குழந்தைகள்
     ஓடிப்பிடித்து விளையாடியும், பெரியவர்கள் ஹாலில் வட்டமாக உக்காந்து
     அரட்டையிலும் மும்முரமாக இருந்தார்கள். அப்போதுபார்த்து  ஜூனியர்- எக்ஸ்
     மம்மி எனக்கு மூச்சா வரதுன்னு சத்தமாகச்சொன்னான். எல்லா குழந்தைகளும்
     கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு கேலி செய்வதுபோல சிரித்தார்கள்.

    மிஸஸ் எக்ஸ் குழந்தையை பாத்ரூம் கூட்டிப்போனாள். இங்க பாரு பேட்டா
    இதுபோல சமயத்தில் மூச்சா வரதுன்னு சொல்லக்கூடாது எல்லாரும் எப்படி
    கேலியா சிரிச்சா பாத்தியா. இனிமேல மூச்சா வரும்போதெல்லாம் மம்மி
    எனக்கு பாட்டு பாடனும்னு சொல்லனும். நான் புரிஞ்சுண்டு உன்னை பாத்ரூம்
    கூட்டிப்போவேன் சரியா என்று  சொன்னாள். ஓ, கே, மம்மி இனிமேல பாட்டு
    பாடணும்னு சொல்ரேன் சரியா என்று சமத்தாகச் சொன்னான். பார்ட்டி முடிந்து
    வீடு போனார்கள். அதுமுதல் பையன் அம்மாவிடம் பாட்டு பாடணும்னு சொல்ல
    பழகினான். மிஸஸ் எக்ஸுக்கு ரொம்ப சந்தோஷம். குழந்தை சொன்ன உடனே
    புரிஞ்சுண்டானே என்று.

    10-தினங்கள் கழிந்தபிறகு மிஸஸ் எக்ஸுக்குபக்கத்து ஊரில் இருக்கும் அவளின்
   பெற்றோரை பார்க்கப்போக வேண்டி இருந்தது. மிஸ்டர் எக்ஸுக்கு லீவு கிடைக்கலை.
   குழந்தையும் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொன்னான். சரின்னு மிஸஸ் எக்ஸ் மட்டும்
   முத நாள் இரவு 7-மணிக்கு கிளம்பி போய் மறு நாள் காலை 8-மணிக்கு திரும்ப வருவதாகச்சொல்லி  பையனிடம் மம்மி ஊருக்குபோய்ட்டு வரேன் டாடியை படுத்தாம சமத்தா
   இருக்கனும் என்று சொல்லிட்டு, மிஸ்டர் எக்ஸிடமும் குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போனா. குழந்தையும் ஜாஸ்தி தொந்திரவு கொடுக்காம டி.வி யில்
   கார்ட்டூன், போகோ எல்லாம் பாத்துட்டு சமத்தா அப்பாவும் பில்ளையும் சாப்பிட்டபிறகு 10-
   மணிக்கு படுக்கப்போனார்கள்.

   அப்பா ஸ்டோரி சொல்லுன்னான் குழந்தை. என்ன ஸ்டோரி வேணும்னுகேட்டார் அப்பா.
   அதான் பா, குருவி பாயசம் சாப்பிட்ட கதை, காக்கா தண்ணிகுடிச்ச கதை,முயல் ஆமை
   கதை இதெல்லாம் சொல்லு என்ரான். அப்பாவும் அலுக்காம ஒருமணி நேரம் கதை சொன்னார்.
   11-மணி ஆகியும் குழந்தை தூங்காம கதை கேட்டான். மிஸ்டர் எக்ஸ் சரிபேட்டா நேரம் ஆச்சு.
  இப்ப நாம தூங்கலாமான்னார். பையன் உடனே அப்பா எனக்கு பாட்டுப்பாடணும்னு சொன்னான்.
   அம்மா, பிள்ளையின் கோட் வேர்ட் அவருக்குத்தெரியாது. என்னது மணி 11 ஆகுது இப்பல்லாம்
   பாட்டு பாடக்கூடாது அக்கம் பக்கத்ல எல்லாரும் எழுந்துடுவா. நாளைக்காலேல பாட்டு பாடுவியாம்
   சரியா இப்போ சமத்தா படுத்து தூங்குவியாம் என்று சொன்னார். பையனா கேப்பான் இல்லைப்பா
   எனக்கு இப்பவே அவசரமா பாட்டு பாடியே ஆகனும்னு அடம்பிடிக்கவும் எக்ஸ்  என்ன பண்ணனு
  கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, சரி மெதுவா என்காதுல மட்டும் பாடுன்னார் பையனோ திகைத்துப்போய்
   என்னது உன் காதுலயா என்ரான் ஆமாடா சீக்கிரமா பாடு வா. எனக்கு தூக்கமாவருது என்ரார்.
  குழந்தையும் சமத்தா அப்பாகாதுல பாட்டு பாடினான்.

  ( சும்மா ஒரு ஜாலிக்கு. ஜஸ்ட் ஃபார் ஃபன்) இதெல்லாம் வெரும் சாதா தான். 




 இன்னொரு சமயமும் மிஸ்டர் எக்ஸும்  அவர் பையனு்ம் இரவு தனியாக இருக்க வேண்டி வந்தது. வழக்கம்போல டி. வி. பார்த்து சாப்பிட்டு கதை சொல்லி, எல்லாம் முடிந்து  11- மணி  ஆனதும் மகனிடம் தூங்குப்பா என்றார். அந்த வாண்டு அம்மா கொடுப்பதைக்கொடு, ஆனாதான் தூங்குவேன்
 என்ரான்.அம்மா என்ன கொடுப்பாங்க? நீ தான்
 இவ்வளவு பெரிய அப்பாவா இருக்கியே உனக்குத்தெரியாதா? சீக்கிரம் கொடு என்ரது.
எனக்குத்தெரியலை நீயே சொல்லு என்ரார்.
 அந்த வாண்டு சொல்லாமல் அடம் பிடிக்கவும் எக்ஸுக்கு கோவம்வந்து பையன்
 முதுகில் ஓங்கி நாலு அடி வைத்தார். அப்ப
அந்த வாண்டு இதைத்தான் அம்மா டெய்லி
 கொடுப்பாங்க அப்பதான் எனக்கு தூக்கமே வரும்னுசொல்லி  திரும்ப படுத்துண்டு தூங்கினான். மிஸ்டர்எக்ஸோ தலையில் கை வச்சுண்டூ கட்டில் ஓரமாக உக்காந்தார்.


அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


நந்தவனம்


என் அழகிய ரோஜா
கை நழுவி நிலத்தில் விழவில்லை
நெருப்பில் விழுந்து விட்டது
எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை- சுறாவளி
என் சுகந்தமான தென்றலை இழுத்து சென்றது...

அன்று இன்பம் வீட்டினில் தவழ்ததால் துன்பம் இல்லை...
இன்று துன்பம் வீட்டில் குடி அமர்ந்ததால் இன்பத்தை நெருங்க முடியவில்லை...

அன்று என் கண் எதிரே உலவிய தெய்வம்
இன்று நிழலாய் போனதேன்?
கனவுகள் மட்டுமே என் வாழ்க்கையா?

வாழ்க்கை எனும் சுவட்டில் காலம் ஒரு தொடர் கதை
பாதி எழுதுவதற்குள் கதையின் கரு தொலைந்து விட்டது

உயிர் கொடுத்து அன்பை சமைத்து ஊட்டியவளே
நான் அம்மா சொன்ன போது என் உச்சி முகர்ந்தவளே
உன் விரல் பிடித்து நடந்த போது தேர் வடம் பிடித்த பெருமை எனக்கு
இன்று தெய்வம் இல்லா கோவில் ஆனேன்

மலரினும் மெல்லிய உன்னை தீ தான் தழுவியதோ?
அன்று நிலா காட்டி எனக்கு சோறு ஊட்டினாய்
என் பசி திரும் முன் நீ எங்கே சென்றாய்
நான் கேக்கிறேன் நிலவே என் தாய் எங்கே?
என் வாழ்வில் என்றும் அமாவாசை தானோ

என்ன தான் செய்தாலும்
இதயம் ஆற மறுக்கிறது

வாழ்கையின் கண்ணா மூச்சி விளையாட்டு இறப்பு தானே
மரண தூதன் வந்து அழைத்து விட்டான் நீயும் சென்று விட்டாய்.

அல்லல் படுகிறேன் நான் இங்கு தனியாக அம்மா
யாரிடம் ஓடுவேன் கடவுளிடம் ஒடுவேனா,
இல்லை கதறி தான் அழுவேனா என்ன செய்ய முடியும்.
உன் கருவறை மட்டும் உலகம் என கொண்டவளே இங்கு
தனியாக விட்டு எங்கே சென்றாய்.
நாட்கள் ஓடி விட்டன இப்பொழுதும் உதடுகள் கேட்கின்றன
எங்கே என் அம்மா என்று...??????

சூல் கொண்ட உன் கருவில் நான் மீண்டும் பிறப்பது எப்போது?
என் வசந்தம் திருமபுமா?
உன் கல்லறை சுமக்கும் பூக்கள் எல்லாம் எந்தன் இதய வலியே
உன் தோட்டத்தில் நான் மலர்வது எப்போது அம்மா


வலியுடன் , 

ஜெஸ்சி . . 

 

தேவ் லாலி

 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

எதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )

         

          காலேஜ்னாலே நாலு  அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோயின் படிச்சா காலேஜ்ளையும்  ஒரு கேங் இருந்தது. அதுல சில பசங்க சில பொண்ணுங்க. அந்த கேங்ல Commit ஆகாம இருந்தது ஒரு பையனும் ஒரு பொண்ணும்தான் அவங்கதான் நம்ப கதையின் ஹீரோ,  ஹீரோயின் பூஜா மற்றும் சஞ்சய். சும்மா சொல்ல கூடாது நம்ப கேங் போட்ட ஆட்டத்துல காலேஜ் கொஞ்சம் ஆடித்தான் போச்சு . இருந்தாலும் அவங்களுக்கும் தங்களோட கல்லூரி ஆட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்தது.   அவங்களோட காலேஜ் வாழ்கை முடியபோது. அவங்க எல்லாரும் பரீட்சை முடிச்சிட்டு அவங்களோட விடுமுறைய அவங்க லவ்வர் கூட சந்தோஷமா ஸ்பென்ட் பண்றாங்க. அந்த கேங் அடிகடி வெளில ஒண்ணா சேர்ந்து  போவாங்க. அப்படி ஒரு நாள் எல்லாரும் பார்க்க்கு  போனாங்க.கொஞ்ச நேரத்துல எல்லாரும் அவங்க அவங்க லவ்வர்  கூடதனியா எஸ் ஆகா . சஞ்சய் , பூஜா  மட்டும் தனியா  இருந்தாங்க. அப்போ நம்ப சஞ்சய் , பூஜாகிட்ட பேச ஆரம்பிச்சான் .

சஞ்சய் : ஹாய் 
பூஜா : ஹாய் 
சஞ்சய்: நம்ம கேங்ல எல்லாரும் கமிடெட்நாம ரெண்டு பெற தவிர 
பூஜா : ஆமா 
சஞ்சய்: சிங்கிளா  இருக்குறது ரொம்ப போர்ல?? அதுவும் ஹோலிடேஸ்ல.
பூஜா: ஆமா நானும் அதான் நினைச்சேன். நாம தான் இந்த உலகத்துலேயே நம்ம 
வாழ்க்கைல ஸ்பெஷலா  யாரும் இல்லாம இருக்கோம் 
(பூஜாவுக்கு  அவனை ரொம்ப பிடிக்கும்.. ஆனா சஞ்சய் அவ கிட்ட காதல 
சொல்லனும்னு  அவ ஆச படுறா (என்ன பண்ணுறது எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரிதானே) )
சஞ்சய்: நாம ஏதாவது  பண்ணும்.
பூஜா: ஓ பண்ணலாமே . . .  வேணும்ன்ன பிரியாணி பண்ணலாம? ஹி ஹி

சஞ்சய்: என்ன கிண்டலா ? . ஆனா நான் அடுத்த மாசம் US போறேன் என்னோட higher studiesக்கு ... அதுக்குள்ள நான் ஒரு பொண்ணு பாக்கணும்... அவளை  லவ் பண்ண வைக்கணும் . எப்புடி ?

(சஞ்சய்  ஒரு அனாதை.. அதனால சஞ்சய் வாழ்க்கைல இந்த அளவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டான்.. அதனால அவனுக்கு லவ் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அவனும் ஒரு சராசரி பையன்தானே . அவனுக்கும் சில சாராசரி  ஆசைகள் இருக்கத்தான் செய்தது. இத்தனை  நாள்தான் அநாதை என்கிற உணர்வோட வாழ்க்கைல முன்னேறவேண்டும் அப்படிங்கிற வெறியோடு எந்தவித சராசரி கொண்டாட்டங்களும் இல்லாம வாழ்க்கை வாழ்த்துட்டான். அதனால    அவனுக்கு இருக்கிற ஒரு மாசம் ஒரு நல்ல நட்பையும் மீறி , அன்யோன்னியமாக பழகவும் , கொண்டாடவும் ஒரு நல்ல பெண் தேவை பட்டா )


பூஜா: சஞ்சய் சும்மா சொல்ல கூடாது என்ன ஒரு வாழ்க்கை லட்சியம் வச்சு இருக்க நீ , சபாஷ் .
 
சஞ்சய் :  ஏய் , நீ வேற , நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் , ஆனா உனக்கே தெரியும் எனக்குன்னு யாரும் இல்லன்னு இத்தனை  நாள் படிப்பு அது இதுன்னு இருந்துட்டேன் ஆனா , இப்போதான் ஏதோ தனிய இருக்குற மாதிரி ஒரு உணர்வு , எனக்கு ஒரு துணை தேவபடுது . பசங்கனா நிறைய பேரு இருக்காங்க , ஆனா ஒரு நல்ல பெண் தோழி , நடப்பையும் மீறி ஒரு உறவு . ஹ்ம்ம் சரி பார்க்கலாம் .

பூஜா: (பூஜா மனதுக்குள்: நான் இந்த வாய்ப்பை தவற விட கூடாது) 
டேய் நான் சும்மா கிண்டல் பண்ணினேண்டா.  சரி நான் வேன்னும்ன்ன ஒரு ஐடியா சொல்லவா ?  (தயக்கத்தோடு கேட்டாள்)
சஞ்சய்: அப்படியா??? என்ன அது???  சொல்லு 
பூஜா: நாம வேனும்னா ஒரு கேம் விளையாடலாமா?.
சஞ்சய்: என்ன சொல்ற நீ?? 
பூஜா: நீ இங்க இந்தியால இருக்கிற இந்த முப்பது நாளைக்கும்  உன் லவ்வரா நான்  இருக்கேன்,  நீ எனக்கு லவ்வரா இரு. அப்புறம் நீ சந்தோசம கிளம்பி US போய் உன்னோட படிப்ப முடிச்சுட்டு வா .
(அவ மனசுகுல்ல : .... இது தான் எனக்கு கிடைச்ச சரியான வாய்ப்பு..நான் என்னொட காதல சஞ்சய்க்கு  புரிய வைக்கணும் .. சஞ்சய் இதுவரைக்கும் பார்க்காத அன்பையும் , பாசத்தையும்  அவனுக்கு 
குடுக்கணும்.. கடவுளே சஞ்சய் இதுக்கு ஒத்துக்கணும்……….. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
 
சஞ்சய்: ஹே பூஜா இது ஏதோ கேப்ல கோல் போடுற மாதிரி இருக்கு ? ஹி ஹி ஹி 
பூஜா: அடப்பாவி உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு , ஏதோ சின்ன பையன் ஆச்சே போனா போகுது கம்பெனி குடுக்கலாம்ன்னு பார்த்த ரொம்பதான் பேசுற? ஆள விடு நீ தனியாவே ஊரை சுத்து , நான் கிளம்புறேன் . 
சஞ்சய்: ஹ ஹ ஹ , . .  ஹே சும்மா சொன்னேன் , நீ வேற கோவிச்சுகாதே.
இதுவ்வும்  நல்ல யோசனையாதான் இருக்கு.. எனக்கும் இந்த ஒரு மாசத்துல  எந்த ப்லானும் இல்ல. 
பூஜா: அப்படிங்கிற ? சரி அப்போ  நாளைல  இருந்து நாம,  நம்ம கேம்மை  ஸ்டார்ட் பண்ணலாம் . சரியா ? (நாலைல இருந்து
நீ உன்மையான அன்பை  பார்க்க  போர.. கடவுளே  இவன் 30 நாளுக்குள்ள சஞ்சய் 
காதலை  என் கிட்ட வந்து சொல்லனும்..)

சஞ்சய்: எனக்கு டபுள் ஓகே .

அப்புறம்  அவங்க அடுத்த 30 நாளைக்கும்  ப்ளான் போட்டாங்க.

நாள் 1:

தொடரும்...............

 
( இந்த கதையை முதல் முறை பதிவிட்ட போது நமது  நண்பர்கள் நிறைய,  நிறை குறைகளை அக்கறையோடு சொன்னாங்க , அதுஎல்லாம் தான் கீழ உள்ள கமெண்ட்ஸ்ல இருக்கு . நிறைவான விசியங்கள நிறைய இருந்தாலும் , குறைகள் அதைவிட கொஞ்சம் தூக்கலாய் இருந்ததால் , அதையெல்லாம் முடிந்த வரை நிவர்த்தி செய்து மீண்டும் பதிவிட்டு இருக்கேன் . இதுலயும் குறைகைகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டி காட்டுங்கள் . தங்கள் அன்பை அன்போடு எதிர் பார்கிறேன் . . . ) 

அன்புடன்
maggi 


✯ Star Fish ✯

Star Fish


 
Just to share a little story with all my loved ones…… 

Once upon a time, there was a wise man who used to go to the ocean to do his journal writing. He 

had a habit of walking on the beach before he began his work. One day he was walking along the 

shore and he saw a human figure moving like a dancer. So he began to walk faster to catch up

with the figure. As he got closer, he saw that it was a young man and the young man wasn't  

dancing, but instead he was reaching down to the shore, picking up  something and very gently 

throwing it into the ocean. As he got closer he called out, "Good morning! What are you doing?" 

The young man paused, looked up and replied, "Throwing starfish in the ocean." "I guess I should 

have asked, why are you throwing starfish in the ocean?" "The sun is up, and the tide is going out.

And if I don't throw them in they'll die." "But, young man, don't you realize that there are miles 

and miles of beach, and starfish all along it. You can't possibly make a difference!" The young man

listened politely. Then bent down, picked up another starfish and threw it into the sea, past the

breaking waves and said, "It made a difference for that one. There is something very special in

each and every one of us. We have all been gifted with the ability to make a difference. And if

we can become aware of that gift, we gain through the strength of our visions the power to shape

the future. We must each find our starfish. And if we throw our starfishes wisely and well, the world

will be blessed. God has blessed us with everything we need, but He has also created some who

don’t have a one proper meal a day.. let alone roof over the head and clothes... Be happy with what

you have for now as tomorrow is uncertain. Make others happy and you will see God

in their smile… Help the poor , feed the hungry and share your knowledge with others.


with love ,

Sonia .


Category: 18 comments

ஒருவாரம் லீவு.

                   உங்ககூடல்லாம் பேசாம ஒருவாரம் போராகும். வேர புதுஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்கதான்.
பாக்கலாம். வந்து எல்லாம் சொல்வேனே.
அதுவரை எல்லாருக்கும் கொஞ்சம் பாட்டு போட்டிருக்கேன்.
பழய பாட்டுக்கள்தான் . ஓல்ட் இச் கோல்ட் தானே. எல்லாரும் ரசிப்பீங்கன்னு நினைக்கிரேன்.
25- தேதிக்குஅப்பரமா உங்களை சந்திக்கிரேன். ஓ, கே வா? பை, பை.


டூயட்



விழியே கதை எழுது.





சத்தம் இல்லாத தனிமை


பூமாலையில் ஓர் மல்லிகை



முன்பே வா என் அன்பே வா



என்னை தாலாட்ட வரு வாளோ









அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

மிஸ்டர் எக்ஸ்


Mr. X



இது மிஸ்டர் எக்ஸ் குளுருக்கு வாங்குன டிரஸ் , ஆனா ஆபீஸ் போகும் போது வேட்டி சட்டைலதான் போவாரு, யாரும் சிரிக்க படாது . .  


                 நம்ம மிஸ்டர் எக்ஸ் இருக்காங்களே அவங்க் வேலை பார்த்த ஆபீசு
 13-வது் மாடியில் இருந்தது. அவரு எப்பவுமே நம்ம தமிழ் கலாச்சாரப்படி
வேஷ்டி சட்டை  போட்டுத்தான்  வேலைக்குப் போவார். ஒரு நாளு அ ந்த
 கட்டிடத்தில் எதிர்பாராவிதமாக நெருப்பு பிடித்துவிட்டது. உடனே தீ அணைக்கும்
 ஆபீசுக்கு போன் பண்ணி  நெருப்பணைக்கும் வண்டி எல்லாம் வந்து வேலையை
 சுறு சுறுப்பாக ஆரம்பித்தார்கள்.ஒவ்வொரு மாடியிலும் உள்ள வர்களை காப்பாற்ற
 கிழே அவர்கள் பெரிய  ஸ்பிரிங்க்வலையை  விரித்து ஒவ்வொருவரையாக மெதுவாக
 குதிக்கவைத்து காப்பாற்றினார்கள். எல்லாரும் வெளியேறிய பிறகுதான் குழாய் மூலமாக
 தண்ணீரை முழு வேகத்தில் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க வேண்டும் என்று
 நினைத்தார்கள். மிஸ்டர் எக்ஸையும் மெதுவாகக்குதியுங்க சார்னு கீழேந்து கத்தினார்கள்.
 அவருக்கோ 13-வது மாடிலேந்து குதிக்க ஒரே பயம். கீழ உள்ளவங்க பயப்படாதீங்க வலை
 இருக்கு இல்லியா ஒன்னும் ஆகாதுன்னு தைரியம் கொடுத்தாங்க. அவரும் எல்லா
  கடவுள்களையும் வேண்டிக்கொண்டு வேகமாக குதித்தார். குதித்தவேகத்திலேயே ஸ்பிரிங்க்
 வலை அவரை திரும்ப மேலே அனுப்பி 10-வது மாடியில் தூக்கி எறியப்பட்டார். ஏதுடா இது
 எல்லாரும் சரியா குதித்து பாதுகாப்பாக கீழ போயிட்டா. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு
 யோசித்து, கீழே பார்த்து சார் வலையை கெட்டியா பிடிங்க நான் இப்ப குதிக்கரேன் என்றார்.
 திரும்பவும் மிகவும் வேகமாகவே குதித்தார்.

 திரும்பவும் ஸ்பிரிங்க் வலையால் தூக்கி எறியப்பட்டு 11- வது மாடியில் போய் விழுந்தார்.
 கீழே உள்ள தீயணைப்பு படை வீரர்களும் இவரை மெதுவாக குதிக்க ச்சொன்னா கேக்காம
 வேகமா குதிக்கராரேன்னு, கீழே வலையில் பூராவும் பெவிக்காலை தாராளமாக தடவி வைத்து
 இப்ப குதிங்க என்றார்கள்.அவரும் வழக்கம்போலவே வேகமாககுதித்தார். குதித்தவேகத்தில்
 வலையில் தடவி இருந்த பெவிக்கால் உதவியால் அவரின் வேட்டிமட்டும் வலையில்
 ஒட்டிக்கொண்டது. எக்ஸ் திரும்பவும் 13-வது மாடியிலேயே போய் விழுந்தார். எல்லாருக்கும்
 ஒரே சிரிப்பு. எக்ஸோ நான் மாடி படி வழியே இறங்கி வந்துடரேன்னு மூச்சுவாங்க இறங்கி
 வந்தார். கீழே வந்தபிறகுதான் அவருக்கு இடுப்பில் வேட்டியே இல்லை என்பது தெரிய வந்தது.
  வழ்க்கம்போல தன் அசட்டுத்தனத்தால் எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி
பரிதாபமாக     திருதிரு     என்று விழித்துக்கொண்டு நின்றார்.




                      மிஸ்டர் எக்ஸுக்கு ஒருமுறை பல்லில் கூச்சம் ஏற்பட்டது. எந்த
  ஸ்வீட் சாப்பிட்டாலும், ஐஸ்தண்ணி குடித்தாலும் பல்லில் ஒரே
 கூச்சம் இருந்தது. டெண்டிஸ்ட்டிடம் போனார். அங்கு காத்துக்
  கொண்டிருக்கும்போது சுற்றி உள்ளவர்களை வேடிக்கை பார்த்துக்
  கொண்டிருந்தார். ஏ அப்பா இவ்வளவு பேருக்கா பல்லில் அவஸ்தை
 இருக்கு. பல்டாக்டர் ஒரொரு பல்லுக்கும் சார்ஜ் பண்ணிடுவாரே.32 பல்
 ட்ரீட்மெண்டுன்னா என்ன வரும்படி வரும்னுகண்டபடி யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அவரின் முறைவந்து உள்ளே போனார். டாக்டர்
 இவரிடம் என்ன ப்ராப்ளம் என்று கேட்டார். அப்போதான் எக்ஸுக்கு
 பல்கூச்சத்துக்கு இங்க்லீஷில் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலியே
 என்றொ தோன்றியது.  சட்டென்று டாக்டரிடம் மை டீத்ஸ் ஆர் ஷையிங்க்.
 என்றார்.  யாராவது கூச்ச சுபாவம் உள்ளவர்களை ஷை டைப் என்றுதானே
 சொல்வாங்கன்னு அப்படி சொன்னார். டாக்டருக்கோ அடக்கமுடியாமல் சிரிப்பு
 வந்தது.

 எப்பல்லாம் உங்க பல்லு ஷை பண்ணுதுன்னு அவரும் ஜோக்காகவே கேட்டார்.
 உடனே மிஸ்டர் எக்ஸுக்கு ஆஹா, நாம கரெக்டாதான் சொல்லி இருக்கோம்
 என்று குஷி ஆச்சு.ஸ்வீட் சாப்பிடும்போது, ஐஸ்வாட்டர்மாதிரி கூலா எதுவும்
 சாப்பிடும்போது ரொம்ப ஷை ஆகுது என்றார். டாக்டரும் தமிழில் கேட்டார்.தமிழ்ல
 சொல்லுங்க பல்லு என்ன பண்ணுது? என்றார். ரொம்ப கூசுது என்றார். ஓ, அதுக்குத்
 தான் ஷையிங்க்னு சொன்னீங்களா. அப்படி சொல்லக்கூடாது டீத்ஸ் ஆர் சென்சிடிவ்
 ஆக இருக்குனு சொல்லணும் என்று டாக்டர் சொல்லவும் பின்ன நீங்க கூட என்கிட்ட
 எப்பல்லாம் பல் ஷை பண்ணுதுன்னு ஏன் கேட்டீங்கன்னு பரிதாபமாக கேட்டார் எக்ஸ்.
 உங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி சொன்னேன் சார். டேக் இட் ஈசி என்றார்.
 எக்ஸும் வழக்கம்போல பரிதாபமாக திரு, திரு முழியுடன் வெளியேறினார்.

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters