Followers

Air india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது!. .

      
Air india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது!. .

         என் சோக கதைய கேளு தாய் குலமே! அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வைக்கணும்,அப்படி ஒரு சோக கதை நான் இந்த தடவை இந்தியா போன கதை. ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு Dec 1 எனக்கு லீவ், ஓகே ஆச்சுங்க. சரி இதுக்கு மேலயும் delay பண்ண வேணாம்னு அன்னைக்கே credit card ல ticket a book பண்ணேன். திருச்சி கு air india Express தான் அடிக்கடி இருக்கு. so அதுலயே டிக்கெட் புக் பண்ணேன். அப்பதான் பிரச்சனை ஆரம்பிச்சுச்சு, 6 மணிக்கு flight. 3 மணிக்கு Check in. 2.30 மணியாகியும் நான் arrange பண்ண கார் வரல சரி னு என் friend கு phone பண்ணி வர சொன்னேன் அவரும் இதோ 5 நிமிசத்துல வரேன் டா நண்பா னு சொன்னாரு. நானும் நம்பி புது t tshirt புது shoe( ஊருக்கு போறோம் ல ) போட்டுக்கிட்டு ஜம் னு wait பண்ணேன் 5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு 15 நிமிஷம் ஆச்சு, ஆள காணோம் waiting. சரி னு போன் பண்ண , நண்பா ஒரு அர்ஜென்ட் மீட்டிங் ல மாட்டிகிட்டேன் டா நீ டாக்ஸி பிடிச்சு போய்டு டா plz னு ரொம்ப பாசமா சொல்லிடாரு ( நண்பேண்டா ). நானும் டாக்ஸி பிடிச்சு ஒரு வழிய ஏர்போர்ட் கு போய் சேர்ந்தேன்.. ஷ்...... அப்பா டா னு ஒரு பெரு மூச்சு விட்டு கிட்டே உள்ள போனா அங்க என்னோட client நிக்கிறாரு. என்னை பார்த்ததும் அவருக்கு அப்படி ஒரு சந்தோசம்.. ஏன் னு கேக்றீங்கள ஏன்னா நான் அவ்ளோ நல்லவன் . இருங்க இப்பவே சிரிக்காதீங்க இன்னும் டைம் இருக்கு . இவரு ஏன் டா நம்பள பார்த்து சந்தோஷ படுறாரு னு மனசுக்குள்ள mild அ ஒரு doubt வந்துச்சு ,இருந்தாலும் நானும் சிரிச்சு கிட்டே அவரு பக்கத்துல போனா , டேவிட் எனக்கு ஒரு சின்ன உதவி னு கேட்டாரு , நானும் என்ன உதவி sir கேக்க , எனக்கு luggage ல 7kg கூடி போச்சு நீ adjust பண்ணி கொண்டு போறிய னு ஒரு குண்ட தூக்கி போட்டாரு பாருங்க நானும் இப்படி தலைய ஆட்டுனேன். இதுக்கு தான் சொன்னேன் நான் ரொம்ப நல்லவன் னு . இப்ப சிரிங்க என் luggage லாம் packed open பண்ண முடியாத நிலமை. So ஒரு carry bag வாங்கி luggage அ போடுங்க sir னு சொன்னேன். 3kg glucose biscuit, 3 kg local dates அதாங்க பேரீச்சை பழம் னு கொடுத்தாருங்க . எனக்கு வந்துச்சு பாருங்க கோவம், grrr என்ன பண்ணேன் தெரியும் ல இப்படி சிரிச்சுகிட்டே அவரு கூட போய்ட்டேன் luggage counter கு. அங்கயும் கொஞ்சம் பிரச்சனை அதையும் சமாளிச்சு ஒரு வழிய flight கு போய்ட்டேன். அழகான air hostel ( ஷகிரா வ விட கொஞ்சம் கம்மி தான் அழகுல wink) welcome னு பார்த்து சிரிக்க நான் விட்டு வழிய போய் seat அ பிடிச்சு உட்கார்ந்த்துட்டேன் . எல்லாம் நல்ல படிய முடிஞ்சு flight take off ஆச்சு. அப்படியே லைட் அ கண்ண மூடி ஒரு குட்டி தூக்கம் போட்டேன் 1sleep அப்ப தான கனவு வரும் கனவுல இந்தியா jolly ல இருக்கலாம் But பாழா போனா கனவுல கூட flight ல போற மாதிரிதான் வருது . சரி னு பக்கத்துல உள்ள ஆளு கிட்ட பேச்சை குடுத்தேன். அப்ப தாங்க திடீர்னு pilot அறிவிப்பு னு சொன்னாரு. அன்பான பயணிகளே flight ல ஒரு சின்ன technical problem அதுனால நான் flight அ திருச்சி வரைக்கும் கொண்டு போக முடியாது, நான் மும்பை ல எப்படியாவது land பண்றேன் அங்க problem solve பண்ணிட்டு நம்ம அப்பறமா திருச்சி கு போகலாம் னு cool அ சொல்றாரு. இதுல வேற யாரும் பய பட வேணாம் relax அ இருங்க னு சொல்றாரு . அவ்ளோ தாங்க அதுக்கு அப்பறம் ஒரு பய புள்ள கூட தூங்கல எல்லாம் பீதி (பேதி இல்லங்க) ஆகி கத்த ஆரம்பிச்சுடாங்க. Flight ல மூணு important passanger இருந்தாங்க
NO 1 ஒரு lady 8 month preganent இங்க மெடிக்கல் problem நாலா இந்தியா கு போறாங்க emergency la
No 2 ஒரு பையனோட அப்பா இறந்துட்டாரு, already அவனுக்கு லீவ் கிடைக்கதானால ஒரு நாள் late தான் அவன் இந்தியா கு போறான்
No 3 இன்னொரு பையனுக்கு dec 3 rd marriage இன்னும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கு. இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன் பிறந்த குழந்தைய கூட பாக்க முடியாம 3 மாசம் கழிச்சு தான் இந்தியா கு போறேன் . எல்லாரும் air hostel அ பிடிச்சு என்ன ஆச்சு என்ன ஆச்சு னு கேக்க அவங்க எல்லார் கிட்டேயும் தெரியல தெரியல னு சொல்ல , பாதி பேரு போய் pilot ரூம் கதவ தட்ட ஒரே கலவரமா இருந்துச்சு flight. திரும்பவும் pilot சொன்னாரு யாரும் கவலை படாதீங்க நம்ம safe அ மும்பைக்கு போய்டலாம் னு. நாங்களும் நம்பி அமைதியா இருந்தோம் . மும்பை airport கு போனா அங்க flight கு clearance கிடைக்கல. எங்க pilot ஆளு சிங்கம் ல மேலேயே சுத்தி சுத்தி 8 லாம் போட்டு காமிச்சாரு. ஒரு வழியா ரொம்ப கஷ்டப்பட்டு land பண்ணிட்டாரு நம்ம சிங்கம் . இப்பதாங்க எல்லார்க்கும் உயிரே வந்துச்சு. இப்ப நம்ம pilot சொன்னாரு 15 min ல problem solve ஆகிடும் நம்ம போலாம் னு . ஆனா 45 min ஆச்சு ஒன்னும் நடக்கல இப்ப எல்லாரும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க . நம்ம pilot சிங்கம் திரும்பவும் இன்னும் 15 min ஆகும் wait பண்ணுங்க சொன்னாரு . அடுத்த 45 min ஆச்சு இப்பவும் ஒன்னும் நடக்கல . 1.5 hrs fight குள்ளவே இருக்கோம் A/C off, door உம் closed எல்லாருக்கும் மூச்சு விடவே கஷ்டமா போச்சு. அந்த lady வேற ரொம்ப கஷ்ட படுறாங்க . ஒரு வயசான uncle போய் ( அவர்க்கு ஒரு அழகான பொண்ணு இருந்துசுல) air hostel கிட்ட கேக்க அது “we will give some thing to eat go and eat” னு சொல்ல எல்லாரும் கோவ பட்டு அந்த air hostel ல திட்ட, அந்த air hostel அழுதுகிட்டே எல்லார் கிட்டேயும் sorry கேட்டுச்சு. 2 hrs ஆச்சு இன்னும் flight ready ஆகுற மாறி தெரியல. எல்லார்க்கும் மூச்சு விட இன்னும் கஷ்டமா போச்சு. அப்புறம் எல்லாரும் door தட்டி window வ தட்டி கலாட்ட பண்ணி பிரச்சனை பண்ணோம். கடைசியா door திறக்க வைச்சோம் . எல்லாரும் கீழ இறங்கி flight முன்னாடி போய் வருசையா உட்கார்ந்துடோம். நம்ம தான் போரட்டாதுல பெரிய ஆள் ஆச்சே. இதுல air india express ஒழிக ஒழிக னு சவுண்ட் வேற. மும்பை chief security officer வர அவர நம்ம பசங்க ஹிந்திலேயே பேசி ஓட வைச்சுட்டாங்க. ஒரு வழியா எல்லாம் சரி ஆகி எல்லா பிரச்சனயும் solve ஆகி again flight take off. Air hostel வந்து safety instruction கொடுக்க நாங்க ஜோரா அ கை தட்டுனோம் பாருங்க அந்த air hostess   தாங்க முடியாம சிரிச்சுடுச்சு அதும் என்ன பார்த்து இப்படி தாங்க நான் இந்த தடவ இந்தியா போனேன்

இதெல்லாம் கூட நான் மறந்துடேங்க ஆனா இந்தியா ல இருந்து வரப்ப நடந்துச்சு பாருங்க ஒரு மேட்டர். நானே கவலய ஏன்டா போறோம்னு சோகமா வந்தா, நம்ம ரொம்ப வேகமா போய்கிட்டு இருக்கோம் அதுனால 20 min சீகிரமவே துபாய் கு போய்டலாம் னு சொல்லி வைச்சாரு பாருங்க ஆப்பு .


அன்புடன் ,
டேவிட் . . .


Category: 9 comments

9 comments:

sruthi said...

anna nice blog. u told ur experience with comedy n make all others to laugh. really its tough job to make other laugh bt u did. veliya partha comedy ah irukum bt interior ah think panna athula unnoda feelings iruku. nice on keep going. all d best for ur future blogs.

Eswar said...

Super nanba great

maggi said...

ha ha ha ha david lolzz.... :P india pogum podhu athanai thadangal aana dubai pogum podhu sarrrruuuunuuu poita pola?? hehe...
super blog.. idhula irundhu enaku onnu mattum nalla puridhu nee india poniyo illiyo aana nalla jollu mattum vitiruka ha ha ha ha.... my wishes for u :) u always rock ;)

சிங்கக்குட்டி said...

he he he :-)

Anonymous said...

david.... neenga link koduthaalum naan sollurathu unmai...ur posts are getting better and my best wishes for your future blogs... yellam d e karunai thaan ... hehe

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, சூப்பர் அனுபவம். இன்னமும் மீதியையும் சொல்லுங்க. வெயிட்டிங்கு.

Anonymous said...

un sogathaiyum nalla sirikum padi asathala solli irukka vazhthukal david ,, really nice one ,, adu yenna shakira vida alagu kammi air hostel ,, madividurey parthiya hehe ,, keep rocking...clap clap

Sahana said...

David great

More Entertainment said...

hii.. Nice Post Great job.

Thanks for sharing.

Best Regarding.

www.ChiCha.in

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters