Followers

நிலா சாப்பாடு

ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.
இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்?
அச்சா, இன்னும் 2 நாட்களிருக்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா? எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன?
அன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.
நாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா?




'ஒவ்வொருவர் ஒவ்வொரு டிஷ் பண்ணிண்டு வரணும்.'
அவங்க, அவங்க வீட்ல பண்ணிட்டு வரலாமா. இல்லைனா தேவையான சாமான்களை இங்கே கொண்டு வந்து சூடு, சூடா தயார் பண்ணலாமா?
எல்லாரும் ஒரே குரலில், 'சாமான்களைக்கொண்டு வந்து இங்கியே சூடாக தயார் பண்ணலாம். அதுதான் சரியா இருக்கும்.'
சரி இப்போ யாரு, யாரு, என்ன டிஷ் பண்றீங்க? முதல்ல மிஸஸ் தார்..
"நான் காஷ்மீரி அதனால அங்க ஃபெமசான குல்கந்தும், ஆப்பில் சாக்லெட்டும் பண்ரேன்."
அடுத்து ஐயர் மாமி "நீங்க மதராசி, உங்கஃபெவரிட் இட்லி தோசை,சட்னி, சாம்பார் பண்ணிடுங்க."
நெக்ஸ்ட் பட்டாச்சரியா, "நீ பெங்காலி உன்னோட பெவரிட் என்னா? ஃப்ரட் ஃபிஷ் என்று மிஸஸ் பட்டாச்சரி ஆரம்பிக்கும்போதே ஐயர் மாமி காதுகளைப் போத்திக்கொண்டு சிவ, சிவா, பௌர்ணமியும் அதுவுமா, மீனெல்லாம் ஏண்டி சொல்ரேள். நாங்கல்லாம் சுத்தமான வெஜிடேரியன் தெரியுமோ இல்லியோ? அதுவும் தவிர எல்லாரும் சேர்ந்து சாப்பிடும்போது இந்த மீனு, முட்டை யெல்லாம் வேண்டாமே. என்று ஐயர்மாமி அழமாட்டாக் குறையாக சொல்லவும்
உங்க கூட இதுதான் மாமி ரொம்ப க‌ஷ்டம் அது சாப்பிடமாட்டோம், இது சாப்பிட மாட்டோம் என்ரெல்லாம் சொல்லி எங்க மூடையே கெடுத்துடரீங்க. சரி, சரி, நான் ரச குல்லா, கலாகந்தும் பண்றேன்.
'மிஸஸ் மல்கோத்ரா உங்க பஞ்சாபி ஃபேவரிட் என்னா?'
'ஆலு ப்ரோட்டாவும், மிக்ஸ்ட் பாஜியும் நான்பண்ரேன்.'
'மிஸஸ் கர்க் உங்க ஹிந்துஸ்தானி டிஷ் என்ன?'
'நான் பேல்பூரியும், தஹி பூரியும்.'
'ஓ.கே. இன்னும் யாரு பாக்கி. நானு மஹாராஷ்ட்ரியன் ஷீரா, புரன்போளி கொண்டு வரேன். மிஸஸ் தினேஷ் நீங்க் ஐஸ்க்ரீமும், ஃப்ரூட் சாலட்டும் மிஸஸ் டெனிஸ் நீங்க வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ். எல்லருக்கும் ஓ.கே.வா. இப்போவே நாக்கு ஊறுது.'
பேசி முடித்து அவரவர் வீடு சென்றனர்.
குறிப்பிட்ட புதன் கிழமையும் வந்தது. மதியம் ஒரு மணிக்கு அனைவரும் ஐயர் மாமி வீட்டில் கூடினர். கலகலப்பாக பேசியவாறே அனைவரும் வேலைகளைத் தொடங்கினார்கள். கிச்சனில் பாதி பேர், ஹாலில் பாதி பேர் என்று கல்யாண வீடு மாதிரி களை கட்டி இருந்தது. வித, விதமான வாசனைகள் தெருவில் போவோரைத் திரும்பி பார்க்க வைத்தது. மும்முரமாக வேலையில் ஈடு பட்டிருந்ததால் டயம் என்ன என்று கூட பார்க்கலை. 7.30. க்கு எல்லா வேலைகளும் முடிந்தன. அய்யோடா டயம் பாரு 7.30. ஆச்சு. நான் என் வீட்டுக்காரர், குழந்தகளை 8 மனிக்கெல்லாம் இங்க வரச்சொல்லி இருக்கேன்.
வாங்கோ எல்லாரும்.. நாமும் கொஞ்சம் முகம், கைகால் அலம்பி ஃப்ரெஷ் ஆகலாம்.
8 மணிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சாயங்காலமே மொட்டைமாடியை பெருக்கி சுத்தம் செய்திருந்தனர். ஆளுக்கொரு சாமானாக மாடியில் கொண்டு வைத்தனர்.
அன்றைக்கென்று பார்த்து நிலா வெளியில் தலையை காட்டவே இல்லை. ஜில் என்று குளிர்ந்த காற்று வேறு அடித்துக்கொண்டிருந்தது. ஆஹா, என்ன சூப்பர் க்ளைமேட் இல்லையா, என்று ஆரவாரமாக எல்லாரும் அரட்டையில் மூழ்கினார்கள்
எல்லாருக்குமே நல்ல பசி. ஐயர் மாமிதான், எல்லாருக்கும் சேர்ந்தாப்போல இலையைப்போடுங்கோ எல்லா ஐட்டங்களையும் பரிமாறிட்டு எல்லாருமே சேர்ந்து உக்காந்துடலாம் என்றாள்.
ஐயர் மாமா., இன்னும் நிலாவே வல்லியே, நான் கீழ போயி 100 வாட்ஸ்பல்ப் கொண்டு வரென்னு சொல்லி கொண்டு வந்து மாட்டினார். எல்லாருமே சேர்ந்து அமர்ந்தனர்.
ப்ரேயர் சொல்லிட்டு சாப்பிட துவங்கும் சமயம், பட் என கரண்ட் போச்சு. அடடா, லைட்டு போச்சே இப்போ என்ன பண்ரது. கீழ போயி கேண்டில் கொண்டுவரேன்னு கேண்டில் லைட் டின்னராக ஸ்டார்ட் பண்ணினோம். ஒருவாய் கூட சாபிட்டிருக்க மாட்டோம் சட, சட வென்று மழைத்தூறல் வேறு போட ஆரம்பித்து விட்டது. எல்லாரும் இலையை சுருட்டிண்டு கீழே ஓடினோம். கீழே வீட்டில் கேண்டில்லைட் வெளிச்சத்தில் இலையை விரித்தால் எல்லாரும் ஆசை, ஆசை யாக சமைத்திருந்த உண்வு வகைகள் எல்லாம் நாங்களும் எவ்வளவு ஒற்றுமை என்று சொல்வதுபோல ஒன்றுடன், ஒன்று கலந்து ஸ்பெஷல் ருசியுடனிருந்தது.
அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கேண்டில் லைட் டின்னர்தான் நினைவுக்கு வரும்.

16 comments:

RAMA RAVI (RAMVI) said...

//உணவு வகைகள் எல்லாம் நாங்களும் எவ்வளவு ஒற்றுமை என்று சொல்வதுபோல ஒன்றுடன், ஒன்று கலந்து ஸ்பெஷல் ருசியுடனிருந்தது.//

அருமை அம்மா.
அழகாக எழுதி இருக்கீங்க ஒற்றுமையை பற்றி.ரசித்துப்பபடித்தேன்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

அனுபவங்களே நினைவுகளாக பரிணமிக்கிறது!

தீபாவளி வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

ரமா முதல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமேஷ் நன்றி தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Learn said...

ரொம்ப அருமையான பதிவு

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று தான் இந்த தளத்திற்கு வந்து முழுமையாக படிக்கிறேன். இந்த தளமும் அருமை அம்மா! வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

kitchen queen said...

thanks for ur lovely comment.I am sorry though I am an Iyengar tamil,I don't know to read and write tamil but can only speak tamil fluently,since I studied in a convent and did not take trouble to learn tamil to read and write.
indu Srinivasan
kattameethatheeka.blogspot.com

Jayanthy Kumaran said...

thanks for stopping by mam..
you have a lovely space here..very interesting posts..
keep up the good work..:)
Tasty Appetite

radhakrishnan said...

கதை இன்றுதான் படித்தேன்.இதுவரை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
அனுபவக் களஞ்சியமாக இருக்கிறீரகள்.
இன்னும் எவ்வளவு ஸ்டாக் வைத்திருக்கிறீர்களோ? நல்ல பகிர்வு.
நன்றி அம்மா

gwl said...

Good site.........
giftwithlove.com

shirin goel said...

classic…
mumbaiflowerplaza.com

roses said...

Mindblowing…………..
rosesandgifts.com

Unknown said...

அருமை அம்மா இன்றுதான் உங்கள் பக்கம் நுளைந்தேன் ... அனுபவங்கள் வாழ்கையின் அழியா சித்திரங்கள்.

Priyarajan said...

hello sir/madam
i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

Anonymous said...

Loved the blog…
puneonnet.com

Anonymous said...

Interesting…
Gujaratonnet.com

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters