Followers

இந்தியன்

          இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில் ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனை தளர்த்திக்கொண்டு, காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு சேரில் சௌகரியமாகச்சாய்ந்து கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.  " சார், ஐஸ்க்ரீம், ஃப்ரூட் சாலட், கஸ்டர்ட்ஃப்ரூட் ஆரஞ்ச், லெமன் பைனாப்பில் ஜூஸ்இருக்கு, என்ன சாப்பிடரீங்க" ன்னு சர்வர் சங்கர் கேட்டான். "ஓ, கே, சர்வர், முதல்ல பட்டர்ஸ்காட்ஸ் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் கொண்டுவா" , என்ரார்கள். சங்கர் உள்ளே போய் அவர்கள் கேட்டதை கொண்டு தந்தான். சார் பிறகு, என்றான். இந்தாப்பா சர்வர் ஃப்ரூட்சாலட் ரெண்டு கொண்டுவா. என்றார்கள். அதையும் பவ்யமாக கொண்டு தந்தான்.
அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் தள்ளிப்போயி ஸ்டூலில்உக்காந்துஏதோஒருபுக்கைஎடுத்துபடிக்கத்தொடங்கினான்.திரும்பவும் அவர்களிடமிருந்துஅழைப்பு. இந்தாப்பா சர்வர், ஒரு லெமனேட். என்றார்கள். அதையும் கொண்டு தந்தான்."சார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட், என்பேரு சங்கர், சங்கர்னே என்னை கூப்பிடலாமே, ப்ஃரெண்ட்லியா இருக்குமே", என்றான் பணிவாக.
"பண்றது என்னமோ சர்வர் வேலை, இதுல சர்வர்னு கூப்பிட்டா ரோசமோ?. உனக்கு மிஞ்சிமிஞ்சி போனா 15, 17 வயசு இருக்குமா? இந்த வயசில அமெரிக்க பையன்களெல்லாம்தன் படிப்புக்கு தேவையான பணத்தை அவங்களே சம்பாதிக்கிராங்க தெரியுமா? ஷூபாலிஷ்லேந்து ,கார் கழுவுவது, பேப்பர் போடுவது ஹோட்டலில் வேலை செய்வதுன்னு எந்தவேலைன்
னாலும் கௌரவம் பாக்காம செய்துவராங்க. நம்ம ஊர்லதான் இந்தவயசுல ஹோட்டல் வேலைகிடைச்சா மூணு வேளை சாப்பாடு கிடைச்சுடுமேன்னு இங்க சேந்துடரீங்க. போதாதற்கு கையிலஒரு சீப் நாவல் வேர. எப்படிடா நீங்கல்லாம் உருப்படுவீங்க? " ன்னு கோபமாகச்சொல்லவும்,
"சார் கொஞ்சம் நிப்பாட்டுங்க. கொஞ்சம் மறியாதையாவே பேசுங்க. அமெரிக்கக்காரன் பண்ணினா உசத்திநம்ம நாட்ல பண்ணினா கேவலமா?"

"நானும் காலேஜ் படிக்கர பையந்தான். நாளை ஃபைனல் எக்சாம் சார். நான் படிக்கர புக் என்னான்னு நீங்களே பாருங்க. கெமிஸ்ட்ரி புக். இது என் அப்பாவோட ஹோட்டல்தான். அவர் அவசர வேலையா
பக்கத்த் ஊருக்கு போயிருக்கார். நான் ஹோட்டலை கவனிச்சுண்டு, படிப்பையும் கவனிச்சுக்கரேன். நீங்க சொல்ரா மாதிரி சீப் மர்ம நாவல் படிக்கலை. எங்களைப்போன்ற இளைஞர்களால தான் நாடு
உருப்படாம ப்போகுதுன்னு சொல்லி என்னை உசுப்பிட்டிங்க. . நீங்க நினைப்பதுபொல்ல இந்தக்காலஇளைஞர்கள் இல்லை சார். அதை நல்லா புரிஞ்சுக்கோங்க.மாணவச்முதாயம் இப்பல்லாம் எவ்வ்ளவோ
முன்னேறிட்டாங்க. உங்களைப்போல உள்ளவங்கதான் அன்னிய நாட்டானை உயர்வாகவும் நம்மஆட்களை மட்டம் தட்டியே பேசிக்கிட்டு இருக்கீங்க. அது தப்பு சார். இப்பவாவது எங்களை நல்லாபுரிஞ்சுக்கோங்க. என்று சிறிது கோபமாகவே சொன்னான் சங்கர்.

              சாப்பிட வந்த இருவருமே, சங்கரின் இந்த ஆவேசமான பேச்சில் வாயடைத்து விட்டனர். ஓ, ஓ,நாமதான் தப்பு கணக்கு போட்டுட்டொம் போல இருக்கு. இவன் பேச்சைப்பார்த்தா இந்தக்காலமாணவர்கள் விவர்மானவங்க்களாகத்தான் இருப்பாங்கபோலன்னு பெருமூச்சு விட்டவாரே எழுந்துபோனார்கள்.

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

21 comments:

அம்பலத்தார் said...

இளைஞர்கள் ரொம்ப மாறிட்டுவர்ராங்க உண்மைதான்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ...

பாவம் நடிகர் விஜய்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அம்மா சூப்பர் கதை , நச்சுன்னு நெற்றி போட்டுள அடிச்சா மாதிரி இருக்கு .
நீங்க கலக்குங்க அம்மா . . .

RAMVI said...

அருமையான கதை அம்மா.
இந்த மாதிரி இளைஞர்கள் கையிலத்தான் நாளைய இந்தியாவே இருக்கு.

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

என் ராஜபாட்டை ராஜா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜா நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

jeru said...

அம்மா எப்படி இருக்கீங்க....அருமையான பதிவு...இன்றைய இளைய சமுதாயம் என்ன சும்மாவா சும்மா கலக்குவாங்க இல்லையா அம்மா ஹிஹி....Renu

Lakshmi said...

ரேனு ரொம்ப் நாளா காணோமே எங்க போனே?

jeru said...

அம்மா கொஞ்சம் பிஸி...இப்படிதா நானே சொல்லிகவேண்டியாத இருக்கு ஹிஹி....

Lakshmi said...

ok, ok renu

சந்திர வம்சம் said...

"இந்தக்காலமாணவர்கள் விவர்மானவங்க்களாகத்தான் இருப்பாங்கபோல"

உண்மை தான். ரொம்பவும் விவரமானவர்கள் தான்! பத்மாசூரி

Lakshmi said...

சந்திரவம்சம் வருகைக்கு நன்றி

roses said...

superb…
rosesandgifts.com

Anonymous said...

Simply superb………..marvelous….
bangalorewithlove.com

Anonymous said...

Informative blog…saadepunjab.com

kerala flowerplaza said...

Marvelous…..
keralaflowerplaza.com

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant | ESI & PF Consultant in Chennai | GST Consultant in Bangalore | GST Consultant in Chennai | GST Consultant in TNagar | GST Filing Consultants in Chennai | GST Monthly returns Consultant in Chennai | GST Tax Auditor in Chennai | GST Tax Auditors in Chennai | GST Tax Consultant in Bangalore | GST Tax Consultant in Chennai | GST Tax Consultant in Chennai Sales Tax | GST Tax Consultant in TNagar | GST Tax Consultants in Chennai | GST Tax Filing Auditors in Chennai | GST Tax Filing in Chennai | GST Tax returns Consultant in Bangalore | GST Tax returns Consultant in Chennai | GST Tax returns Consultant in TNagar | Import Export code registration Consultant in Chennai

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Income Tax Auditor in Chennai | Income Tax Auditors in Chennai | Income Tax Filing Consultant in Chennai | Income Tax registration in Chennai | Income Tax returns in Chennai | LLP Registration in Chennai | MSME Consultant in Chennai | One Person Company Registration | One Person Company Registration in Chennai | Partnership Firm Registration | Partnership Firm Registration in Chennai | Private limited Consultant in Chennai | Private Limited Company Registration | Private Limited Company Registration in Chennai | Proprietorship Company Registration | ROC registration Consultants in Chennai | Sales Tax Auditors in Chennai | Sales Tax Consultant in Chennai | Service Tax Consultant in Chennai | Tax Consultant in Chennai | TDS Refund Consultant in Chennai | TIN number in Chennai

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters