நான் சென்னை சென்றிருந்த சமயம் என் அன்பு குழந்தைகள் ரேணு, ஈஸ்வர்
விஜய் மூணு பேரும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் தங்கியிருந்த இடத்
திலிருந்து அவர்கள் எல்லாருமே ரொம்ப தள்ளி இருந்தார்கள். ஆனாலும்
என்னைப்பார்க்க வந்தார்கள். மிகவும் சந்தோஷமான நெகிழ்ச்சியான சந்திப்
பாக அமைந்தது. நான் தாம்பரத்தில் ஒரு தூரத்து சொந்தக்காரா வீட்டில் தங்கி
இருந்தேன், அவர்களு ம் இவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.யூரேஷும்
வரதா இருந்தான். உடம்பு சரி இல்லாமப்போச்சு.
ஒருவரை ஒருவர் முதல் முறையாகப்பார்ப்பதால் ஆனந்த்தக்கண்ணீர்தான்
முதலில் வந்தது. கட்டிப்பிடித்து அன்பான வரவேற்புக் கொடுத்தேன். அப்போ
நாங்க என்ன பேசினோம் என்ன செய்தோம்னே இப்ப நினைவுக்கு வரலே.
ஏதோ சொப்பன உலகத்துக்கு போயிட்டு வந்தது போல இருக்கு. ஒன்னரை
மணி நேரம் தான் இருந்தாங்க.னல்லா பேசி சிரித்து சந்தோஷத்தைக்கொண்டாடினோம். இதுவரை எழுத்துமூலமாகத்தானே
ஒவ்வொருவரும் பழக்கம். இப்ப நேரில் பார்த்ததும்கூட கனவு போலவே
இருந்தது.
அந்த வீட்டு மனிதர்களும் இவர்கள்க்கு நல்லா டிபன் காப்பி கொடுத்து, அவங்க
வீட்டையெல்லாம் சுத்தி காட்டி நல்லா பழகி பேசிக்கொண்டிருந்தாங்க.
அங்க 80+, 70+, 60+, 50+ 40+ வயதுகளில் பெண்மணிகள் இருந்தாங்க. எல்லாருமே செமை ஜாலியா அரட்டையில் கலந்துகிட்டாங்க.அவங்க வீடு
பழங்கால வீடு பின்பக்கம் கிணறு, தோட்டம்,5,6, ரூம் கள் கொண்ட விச்தாரமான வீடு பூஜாரூம் வரையிலும் எல்லாரையும் சுத்திக்காட்டினாங்க.
எல்லாருக்குமே சந்தோஷமான இனிமையான சந்திப்பாக அமைந்தது.இதுக்கெல்லாம் மூலகாரணம் நம்ம ராஜேஷுக்கு தான் நன்றி
சொல்லனும்.
எங்கெல்லாமோ இருப்பவர்களை இந்த சாட் ரும் வழியா பேச, பழக வைக்க வாய்ப்புக்கொடுத்திருப்பது ராஜேஷ்தானே. ராஜேஷ் நீ எங்கே இருக்கேன்னோ, உன்னை எப்படி காண்டாக்ட் பன்னனுனோ தெரியவே இல்லே. நீயும் அமைதி
யா இருக்கே. யேன்னு தெரியலே. நன்றி, நன்றி.
10 comments:
லக்ஷமி அம்மா பதிவுலகத்துக்கு திரும்ப வரவேற்கிறேன்.உங்க பயணம் நல்லபடியாக முடிந்ததா? பயண கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
எத்தனை பசுமையான படைப்பு அருமை . புகைப்படங்களை வித்தியாசமானக் கோணத்தில் பயன்படுத்தி இருக்கும் விதமும் சிறப்பு
ரமா னான் வந்துட்டேன். இனிமேலதாம் ப்ளாக் பக்கம் வரனும்.
சங்கர் வருகைக்கு நன்றி.
வாங்க அம்மா. படங்கள் தெரிந்தேதான் அப்படி போட்டீர்களா?__ பத்மாசூரி
santravamsam illee eppati potanumnu theriyaamaththaan potten
அம்மா நா வந்துட்டேன்.....என் வாழ்கைல மறக்கவே முடியாத ஒரு சந்திப்ப ஏற்படுத்தி கொடுத்து இருக்கீங்க அம்மா....தோழர்களே நல்லா கேட்டுகோங்க....அன்பு இல்லம்னு சும்மா வாசல போர்டு வைக்குற வீட்ல இருக்காதுங்க உண்மையான அன்பு ஆனா நம்ம அம்மா வீட்ல தாங்க உண்மையான அன்பு பாசம் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா பார்த்தேன்....எவ்வளவு அன்பா அங்க இருந்த பெரியவங்க எல்லாரும் எங்கள உபசரிசாங்க தெரியுமா அதை விவரிச்சி சொல்ல வார்த்தையே இல்ல...அம்மா நீங்க மட்டும் இல்ல அங்க இருந்த எல்லாரும் என் மிக பெரிய நன்றி உங்க எல்லாரையும் வாழ்த்த எனக்கு வயசு இல்ல அம்மா வணங்குகிறேன் என் தலை தாழ்த்தி....அம்மா உங்கள சந்திக்க இன்னொரு வாய்பு நிச்சயமா எனக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்போடு!!!! உங்கள் அன்பு ரேணு......
ரேணு எனக்கும் உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இன்னும் பலரையும் பாக்க ஆசைதான் எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு காத்துகிட்டு இருக்கேன்
ஜனவரி சிங்கப்பூர் போரேன் சோனியாவை அங்க பாக்கலாம்னு நினைக்கிரேன்
//ஒருவரை ஒருவர் முதல் முறையாகப்பார்ப்பதால் ஆனந்த்தக்கண்ணீர்தான்
முதலில் வந்தது//
அது எப்படி முதன்முறையா பார்க்கும்போது ஆனந்தக்கண்ணீர் வரும்? முதன்முறையா பார்க்கும் போது இது யாரென்ற குழப்பம்தானே வரும்..அப்படினா நீங்க இதுக்கு முன்னாடி அவங்களை பாத்ததே இல்லையா? :-)))
ரெம்ப நாள்/ரெம்ப வருஷம் கழிச்சு பார்க்கும்போதுதான் ஆனந்தக்கண்ணீர் வரும்.முதன் முறையா பாத்தா அவர்கள் அன்னியர்களாச்சே, அந்நியர்களைத்தான் முதன் முறையா பாப்போம்,
அன்புடன்
ஆஷிக்
எழுத்துமூலமாக எல்லாரையும் தெரியும்.
ஏன் உன்னையும்தானே?முதல் முறை பாக்கும்போது அப்படித்தான் இருக்கும். உனக்கும் அந்த அனுபவம் கிடைக்குபோது உனக்கும் தெரியவரும். அதுவரை வெயிட்.
Post a Comment