காதலியாய் தான் இருந்து, கட்டியவளாய் மாறி வந்து,
வாய்க்காமல் போன வாழ்வதின் அர்த்தத்தை
புத்தியில் விளங்கிடவும் செய்தாள்!
விளையாட்டு பெண்ணும் அவள் அல்ல
விலையேரபெற்ற மரகதமும் தான் என்பேன்!
பட்டினியாய் தாம் இருந்தும், பிடிப்பின்றி நான் இருந்தும்
வெட்டியாய் எண்ணவில்லை, வெறும் பயலாய் மிதிக்கவில்லை
மாறாய் மனதோடு வழக்காடி, மதியயும் ஊட்டினாள்
புற அழகும் அவள் அல்ல
புன்னகையின் தேவதையும் தான் என்பேன்!
செல்லா காசாய் நான் இருந்தும், புறம் தள்ளாது தான் இருந்து
சான்றோரின் மத்தியில் சரிக்கு சரியாய் எனை நிறுத்தி
புத்திசாலியாம் இவன் என்று புகழாரம் சூட்ட வைத்தாள்
பெண் மட்டும் அவள் அல்ல
பெண்ணினத்தின் பெருமையும் தான் என்பேன்
யாரும் இல்லாது நான் இருந்தும், உன்னவளாம்
நான் என்று முன்னின்று தான் வந்து
வாழ்வதனில் முன்னிலையில் கொண்டு சேர்த்தாள்
தாரம் மட்டும் அவள் அல்ல
தாயும் ஆனவள் தான் என்பேன்!
அன்புடன் ,
டேவிட் . . .