Followers

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

நிலா சாப்பாடு

ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.
இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்?
அச்சா, இன்னும் 2 நாட்களிருக்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா? எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன?
அன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.
நாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா?


"அப்பா" - சிறுகதை

hai Friends,

                      இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச்சுட்டு உங்க மனசுல ஒரு நல்ல பாதிப்பு ஏற்பட்ட அது நம்ம சமூகத்துக்கு கிடைச்ச வெற்றியா இருக்கும் இப்ப கதைய படிங்க .


அப்பா,


                           இன்று அப்பா திருச்சி செல்வதால் கொஞ்சம் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன் வீட்டுக்கு. வீட்டுக்கு போற வரைக்கும் என் குடும்பத்த நபர்களை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன். அப்பா , 60 வயது ஆனவர். அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து போன வாரம் தான் பணி ஓய்வு பெற்றார்.வீட்டில் ராஜேஷ் தான் ( என் மகன்) அவருக்கு ரொம்ப செல்லம். அவன் கூட தான் அவர் மனசு விட்டு சிரிச்சு பேசுவார். அவர் தான் அவனுக்கு வீட்டில்குரு.அம்மா திருச்சிக்கு போன பிறகு கொஞ்சம் தடுமாறி தான் போய் விட்டார். இப்பொழுது திருச்சியில் இருக்கும் அம்மாவை பார்க்க போகிறார். அம்மா போன வருடம் சுமதியிடம் ( என் மனைவி ) ஒரு சின்ன சண்டையில் கோவப்பட்டு திருச்சிக்கு போனாங்க. நான் தான் போய் விட்டு வந்தேன்.எப்பொழுதும் பொறுமையாக போகும் அம்மா, அன்று கொஞ்சம் கோவபட்டாங்கனு தான் சொல்லணும்.சுமதி கொஞ்சம் சிடு சிடு குணம்,பொறுமை கிடையாது. வீடு வந்துடுச்சு.


                    அப்பா தயாராகி என் வருகைக்காக மெளனமாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.அப்பா இன்னைக்கே போகனுமா? என்ற என் கேள்விக்கு விரக்தியான சிரிப்புடன் அம்மாக்கு என்ன விட்ட யாரும் இல்ல நான் தான போய் பாத்துக்கணும் என்றார். அதுவும் சரி தானங்க அத்தையும் தனிய என்ன பண்ணுவாங்க, அதுவும் இல்லாம இந்த மாசத்தில் இருந்து அவர்க்கும் சம்பளம் இல்லை, இருக்குற விலை வாசிக்கு பணம் குடுக்காம இருக்க அவர்க்கும் ஒரு மாதிரியா இருக்காத? நேரம் காலம் தெரியாம சுமதி கடுகடுத்தாள்.வேறு வழி இல்லாமல் நான் மௌனமாய் நின்றேன்.அப்பா முகத்தில் மீண்டும் விரக்தி புன்னகை. அப்பா நீங்க ட்ரெயின்ல போக வேணாம், நான் கால் டாக்ஸி சொல்லி இருக்கேன். 50 நிமிசத்தில திருச்சி போய்டலாம் என்றேன். அப்பா சரிப்பா என்றார்.


                           ராஜேஷ் தான் இன்னும் சமாதனம் ஆகவில்லை. அறையில் சென்று கதவை மூடி கொண்டான். டாக்ஸி வந்துடுச்சு அப்பாவின் பொருட்களை எல்லாம் டாக்ஸி யில் ஏற்றினேன்.கடைசியாக அப்பாவும் ஏறி அமர்ந்து விட்டார்.நான் டிரைவ்ரிடம் சென்று சொன்னேன் "அண்ணே கொஞ்சம் பார்த்து பொறுமையா போங்க. கரெக்டா அன்னை முதியோர் இல்லத்துல விட்டுருங்க "


                  ராஜேஷ் சத்தமாக படித்து கொண்டிருந்தான் " தாயிற் சிறந்தொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை".


அன்புடன் ,
டேவிட் . . .
Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters