Followers

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

பெண் நட்பு . . .




எதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன்
நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த
பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே !

முதல் ஸ்பரிசம், காதல் .......
மழைத்துளி, கவிதை.....!
என
மோகமான உணர்வை விட

அன்பு, பாசம்.......
நட்பு, பிரிவு.....!
பரிமாற்றம் என்னும் அடைமொழிகளோடு
உன் மனம் கவர விரும்புகிறேன்
காலம் கடந்து நிற்கும்
பெண் நட்பாய்!



நட்ப்புடன் ,
ரேணு .


என் காதலி





என் காதலி
சிட்டு குருவி போல சின்ன சின்னதாய் நித்தமும்
பொக்கிஷமாய் உன் நினைவுகள்
தினம் தினம் நொடிக்கு நொடி சேர்த்து வைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து போனாலும் உன் மௌனங்கள்
கவிதை ஆகின்றன
என் காயங்கள் ஆறினாலும் உன் காலடி தடம்
காத்து நிற்கின்றேன்
நீ வருவாய் என....

கள்ளி செடி
விழிகளில் உன் பிம்பம் மூடி
இதயத்தில் விதைத்தேன்
அது காதலை வளர்ந்தது
மழைக்கு பதிலாய் என்
கண்ணீரை வர்ர்தேன்
கள்ளி செடி என வெட்டினால்
என் காதலி
மறக்க முயல்கிறேன்
சிறகுகள் இழந்தும் பறக்க துடிக்கும் பறவை போல
உன்னை மறக்க முயல்கிறேன்
அதற்காக உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன்

அன்புடன்
ஈஸ்வர்

தாயுமானவள் . . .


காதலியாய் தான் இருந்து, கட்டியவளாய் மாறி வந்து,
வாய்க்காமல் போன வாழ்வதின் அர்த்தத்தை
புத்தியில் விளங்கிடவும் செய்தாள்!
விளையாட்டு பெண்ணும் அவள் அல்ல
விலையேரபெற்ற மரகதமும் தான் என்பேன்!

பட்டினியாய் தாம் இருந்தும், பிடிப்பின்றி நான் இருந்தும்
வெட்டியாய் எண்ணவில்லை, வெறும் பயலாய் மிதிக்கவில்லை
மாறாய் மனதோடு வழக்காடி, மதியயும் ஊட்டினாள்
புற அழகும் அவள் அல்ல
புன்னகையின் தேவதையும் தான் என்பேன்!

செல்லா காசாய் நான் இருந்தும், புறம் தள்ளாது தான் இருந்து
சான்றோரின் மத்தியில் சரிக்கு சரியாய் எனை நிறுத்தி
புத்திசாலியாம் இவன் என்று புகழாரம் சூட்ட வைத்தாள்
பெண் மட்டும் அவள் அல்ல
பெண்ணினத்தின் பெருமையும் தான் என்பேன்

யாரும் இல்லாது நான் இருந்தும், உன்னவளாம்
நான் என்று முன்னின்று தான் வந்து
வாழ்வதனில் முன்னிலையில் கொண்டு சேர்த்தாள்
தாரம் மட்டும் அவள் அல்ல
தாயும் ஆனவள் தான் என்பேன்!

அன்புடன் ,

டேவிட் . . .

நந்தவனம்


என் அழகிய ரோஜா
கை நழுவி நிலத்தில் விழவில்லை
நெருப்பில் விழுந்து விட்டது
எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை- சுறாவளி
என் சுகந்தமான தென்றலை இழுத்து சென்றது...

அன்று இன்பம் வீட்டினில் தவழ்ததால் துன்பம் இல்லை...
இன்று துன்பம் வீட்டில் குடி அமர்ந்ததால் இன்பத்தை நெருங்க முடியவில்லை...

அன்று என் கண் எதிரே உலவிய தெய்வம்
இன்று நிழலாய் போனதேன்?
கனவுகள் மட்டுமே என் வாழ்க்கையா?

வாழ்க்கை எனும் சுவட்டில் காலம் ஒரு தொடர் கதை
பாதி எழுதுவதற்குள் கதையின் கரு தொலைந்து விட்டது

உயிர் கொடுத்து அன்பை சமைத்து ஊட்டியவளே
நான் அம்மா சொன்ன போது என் உச்சி முகர்ந்தவளே
உன் விரல் பிடித்து நடந்த போது தேர் வடம் பிடித்த பெருமை எனக்கு
இன்று தெய்வம் இல்லா கோவில் ஆனேன்

மலரினும் மெல்லிய உன்னை தீ தான் தழுவியதோ?
அன்று நிலா காட்டி எனக்கு சோறு ஊட்டினாய்
என் பசி திரும் முன் நீ எங்கே சென்றாய்
நான் கேக்கிறேன் நிலவே என் தாய் எங்கே?
என் வாழ்வில் என்றும் அமாவாசை தானோ

என்ன தான் செய்தாலும்
இதயம் ஆற மறுக்கிறது

வாழ்கையின் கண்ணா மூச்சி விளையாட்டு இறப்பு தானே
மரண தூதன் வந்து அழைத்து விட்டான் நீயும் சென்று விட்டாய்.

அல்லல் படுகிறேன் நான் இங்கு தனியாக அம்மா
யாரிடம் ஓடுவேன் கடவுளிடம் ஒடுவேனா,
இல்லை கதறி தான் அழுவேனா என்ன செய்ய முடியும்.
உன் கருவறை மட்டும் உலகம் என கொண்டவளே இங்கு
தனியாக விட்டு எங்கே சென்றாய்.
நாட்கள் ஓடி விட்டன இப்பொழுதும் உதடுகள் கேட்கின்றன
எங்கே என் அம்மா என்று...??????

சூல் கொண்ட உன் கருவில் நான் மீண்டும் பிறப்பது எப்போது?
என் வசந்தம் திருமபுமா?
உன் கல்லறை சுமக்கும் பூக்கள் எல்லாம் எந்தன் இதய வலியே
உன் தோட்டத்தில் நான் மலர்வது எப்போது அம்மா


வலியுடன் , 

ஜெஸ்சி . . 

 

ட்சுனாமி

எந்த மொழியில் சொல்லி அழ?
என்ன சொல்ல என்ன சொல்ல
எந்த வார்த்தைகளில் சொல்ல?
ட்சுனாமி அலை பேரழிவை
எந்த மொழியில் சொல்லி அழ?

பால் குடித்த சிசு வாயை மூடுவதற்குள்
பால் தந்த அன்னை விழி இமைபதற்குள்
அத்தனையும்  அழிவாட்சே ,
அரும்புகளும் பினாமட்சே!

தென்னைமர உச்சி வரை
சீறி வந்த பேரலையால்
தெருவென்ன, ஊரென்ன
திசை எல்லாம் பினாமாட்சே !

உயிர் கொடுத்த பெற்றோர்கள்
உடன் பிறந்த சகோதரர்கள்
செய்திட்ட பாவமென்ன
சீற்றம் கொண்ட பேரலையே!

கடல் தன்னை தாயக
களம் எல்லாம் தொழுதவர்கள்
கடல் சிதைத்திட்ட சவங்கலேன
கரை ஒதுங்கி போனதென்ன?

அன்னை ஆவல் மடியாக
அரவணைத்து வளர்த்து விட்டு
ஆர்பரித்து அலை கரத்தால்
அழித்து ஏன் பெருங்கடலே?

ஜப்பானில் உயர் ஈழந்தவர்களுக்கு இதை சமர்பிகின்றேன்

கண்ணீருடன்,

யுரேஷ் !!

அன்புத் தோழி


தேடினேன் தேடினேன் எனக்கு ஒரு தோழி
தேவதையாக நீ வந்தாயடி தோழி
உன்னுடன் சிரித்தேன் சிரித்தேன் மகிழ்ந்தேன் உறவாடி
துன்பங்கள் பல இருந்தன என்னுள் !
உன்னிடம் பகிர்ந்த போது அவை
மறைந்து இன்பமாக நின்றேன் தோழி!
என்னுள் இளம் தென்றலை வீச செய்தவள் நீ
அன்பு தோழி என் அன்பு தோழி
என் உள்ளம் உருகியது உன் அன்பில் தோழி
வேண்டும் தோழி நீ வேண்டும் தோழி
வாழ்நாள் முழுதும்!

காலம் கடந்தும் உந்தன் நெஞ்சில் நான்
காலம் எல்லாம் இருக்க வேண்டும் தோழி
நட்பானேன் தோழி நான் நட்பானேன் தோழி
வெல்வோம் தோழி நம் வெல்வோம தோழி
விதியை ஒரு நல நம் வெல்வோம் தோழி
இருப்போம் தோழி நம் இருப்போம் தோழி
ஒருவர் மனதில் ஒருவர்
உயர்ந்து நிற்போம் தோழி !


என்றும் நட்புடன்
உங்கள் அன்புத் தோழன் ,
யுரேஷ் !!!

பிரிவு...


விரல் பிடித்து "அ" எழுத
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை"  வேண்டாம் என்று
நினைத்தே!

"அம்மா"  என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம்  நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!

கேளடி என் தாயே!!!!!!!!

புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....


அன்புடன் , 
ரேணு ....

**** **** காதல் கொண்டேன்**** ****


  **** **** காதல் கொண்டேன்**** ****




என் சுவாசக்காற்றே ,,பூ எல்லாம் உன் வாசம்,,, உன்னை தேடி
வண்ணக்கிளி ,,உள்ளம் உருகுதே
, வசீகரா,,உன்னை கண் தேடுதே ,,உனக்காக
உலகம் விலை பேசவா
நீ ,, எப்படி மனசுக்குல் வந்தாய் ??
என்னை பார்!!!,என்னை தெரயுமா,,??
உன் மேல ஆசை வச்சேன் ,
உனக்கென்ன பிறந்தேன் ,,உனக்காக மட்டும்!!!!!!!

36_4_13.gif யார் நீ ?? சொல்லட்டுமா !!! 36_4_16.gif
உயிரே !!சொந்தம் ,பந்தம் _ எல்லாமே என் ராசாதான் !!
திருடன்_ "உள்ளம் கவர்ந்த கள்வன் "
மன்னன்_ 'காதல் மன்னன்' !!!!!

amour
வல்லவன்_"ஆசை மன்மதன் "
ராவணன்_ "என் இதய திருடன்" "எங்கிருந்தோ வந்தவன்
ரட்சகன் _ஆண் அழகன் !!
மச்சக்காரன் _"என்னை ஆளப்பிறந்தவன் "
amour

என் ஆசை மச்சான் _"ஆயரத்தில் ஒருவன் ,
அடடா என்ன அழகு!!!!
நாயகன் _காவிய தலைவன் !!
அரும்பு மீசை குறும்பு காரன்
amour

என்னமோ பிடிச்சிருக்கு _"அதே கண்கள்" ,"ஸ்டைல்" "",தில்"
,குறும்பு "அப்பாவி "கம்பீரம் ' சிங்கம்
ஜென்டல் மென் "வீரா" சாக்லேட் பையா
ஏன் இப்படி மயக்கினாய்????
amour

"என்னமோ நடக்குது "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
அன்புள்ள துரோகி ,எதரி , நீ வேணும்டா செல்லம்
என் அருகே நீ இருந்தால் ,, ஆனந்தம் ஆனந்தம்
என் உயிர் நீதானே , என்னை விட்டு போகாதே

amour
ஓ லா லா ,,ஒரு முறை சொல்லிவிடு ,, ஐ லவ் உ,  நேசிப்பாயா???அன்பே அன்பே !!!

நினைத்து நினைத்து பார்த்தேன் , மனம் விரும்புதே உன்னை
நான் பேச நினைப்பதெல்லாம்
அன்பே வா ,
கண்ணால் பேசவா !!
amour

amour என் உயிரும் மேலான , காதலா காதலா ,,
ஒரு வெள்ளை புறா ஒன்று ,, நீ வரும் பாதையெல்லாம்,
, ஆசை ஆசையாய்,,அன்பே உனக்காக
காலமெல்லாம் காதிருப்பேன்!

"ப்ரிண்ட்ஸ்"!
"இது எப்படி இருக்கு" !!!
"என்றும் அன்புடன்"
"அன்பு தோழி
ஷகிரா!!!!


குறிப்பு : இவை அனைத்தும் சினிமா படத்தின் பெயர்கள் !!!!!!!!
இந்த ப்ளாக்amour பிடிச்சி இருந்தா "whistle " போடுங்க wink wink amour
                                                         
Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters