Followers

எது வெற்றி?






உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.

நொறுக்ஸ்


நொறுக்ஸ்.



முதல் மொக்கை 1

என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு

பெயர் குழ்ப்பம்

ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

எதிர்பாராத காதல் . . . ( பகுதி- 2 ) :)


நாள் 1 :

பூஜா: சஞ்சய்  விண்ணை தாண்டி வருவாயா படம் நல்லா இருக்குன்னு   சொன்னாங்க நம்ம போலாமா ???

சஞ்சய் : ஆமா ப்ரிண்ட்ஸ்சும் அப்படிதான் சொன்னாங்க . இன்னைக்கே போலாமே . . 

தியேட்டர்ரை  விட்டு வெளியே வரும் போது

பூஜா : படம் ரொம்ப நல்லா இருந்தது!! இப்படி ஒரு காதலன யாரு மிஸ் பண்ணுவா சொல்லு .....??

சஞ்சய் : இப்படி ஒரு லவ் படத்துல மட்டும் தான் வரும் ... நிஜத்துல அதெல்லாம் ஒன்னும் நடக்காது ...

(அவள் மனதுக்குள் : நீ எப்போ இந்த மாதிரி ஒரு காதலன் ஆக போற டா???.... )

நாள் 4 :

சஞ்சய்  : எங்க நம்ம friends யாரையும் காணோம்?

பூஜா: அவங்க எங்க போறாங்க என்ன பண்றாங்க .. ஒன்னும் தெரியல..

சஞ்சய்  : சரி அப்போ நாம என்ன பண்ணலாம் இன்னைக்கு ?

பூஜா:  டே நாம வேணா "horror house" க்கு போலாமா ?

சஞ்சய்  : ஹ்ம்ம் ஓகே

அவளுக்கு பயமாக இருந்தது .. அவன் கைகளை பிடித்துகொள்ள நினைத்தாள் ஆனால் வேறு ஒருவர் கையை அவள் மாற்றி பிடிக்க இருவரும் சிரித்து கொண்டனர் .

இப்படி சின்ன சின்ன நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடந்தது.. அவள் அவனை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள் .. அவன் இல்லாத ஒரு வாழ்கை அவளுக்கு வேண்டாம்  என்று நினைத்தாள் .
 

நாள் 12 : 

 அவர்கள் கடற்கரை மணலில் நேரத்தை கழித்தனர் .

நாள் 15 : 

 அன்று அவர்கள் சாலையில் குறி கூறும் ஒரு பெண்ணை பார்த்தனர்... அவரவர் எதிர் காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.

அவனுக்கு அந்த பெண் "உன்னை அன்பு செய்ய .. உன் வாழ் நாள் முழுவதும் உனக்காக வாழ ஒரு பெண் வர போகிறாள்" என்று கூறினாள்.

அவளுக்கு அந்த பெண் "உன் வாழ்கை முற்றிலும் மாறுபட்டதாக அமைய போகிறது.. அது விரைவில் நடக்கும்" என்று கூறினாள்.

இருவரும் குழப்பத்துடன் அங்கிருந்து சென்றனர் .

நாள் 20 :

அன்று அவள் வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்தாள்.
இரவில் மொட்டை மாடியில் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்பொழுது அவள் அரவிந்தை கூபிட்டாள்.

பூஜா: சஞ்சய்  அங்க பாரு... 

சஞ்சய்  : அது shooting star  தானே!!!!!

பூஜா : ஹே ஆமா ... உன் விருப்பத்தை சொல்லு .. அது கண்டிப்பா ஒரு நாள் நடக்கும்..

சஞ்சய்  : சரி .. என்னை  வாழ்க்கை பூரா சந்தோசமா பார்த்துக்க  போற பொண்ண சீக்கிரம் காட்டு.

(அவள் மனதுக்குள் : நான் தான் டா அது .. இன்னுமா உனக்கு புரியல?? :( )

சஞ்சய்  : சரி இப்போ நீ உன் விருபத்த சொல்லு ..
அவள் அமைதியாக வேண்டிக்கொள்ள .. அவன் காதில் எதுவும் விழ வில்லை ..

நாள் 29:

அவள் எதிர்பார்த்த நாள் நெருங்கி விட்டது. அவர்கள் நாளை அதே பார்க்கில் சந்தித்து கொள்ள முடிவு செய்தனர் .

நாள் 30:

11:37

அவர்கள் வாழ்கை விளையாட்டை அரம்பித்த அதே இடத்தில் அமர்ந்தனர்.

சஞ்சய் : நான் போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்.

பூஜா: சரி.. அப்படியே எனக்கு ஒரு டைரி மில்க் வாங்கிட்டு வா.

11:55

ஒரு ஆள் அவளை நோக்கி ஓடி வந்து...

அந்த தம்பி உன் கூட தான் வந்ததா மா?? ……….    என்று கேட்டார்.

பூஜா : ஆமா ஏன்?  என்ன ஆச்சு??

ஒரு லாரி காரென் குடிச்சுட்டு  அந்த தம்பி மேல வண்டிய ஏத்திட்டு  போய்ட்டான் மா...!! ஹாஸ்பிடல்க்கு கொண்டு போறாங்க மா . .

அவள் அதிர்ச்சி தாங்க முடியாமல் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு ஓடினாள்.

தொடரும்……………………………


அன்புடன்
maggi 


Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters