Followers

பிரம்மனின் படைப்பில்.

பிரம்மா ஓ பிரும்மா.

மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?

டிஸ்கி:- இதுவரை அப்படி கேள்வியே படலைன்னாகூட இப்பவாவது
தெரிஞ்சுக்கோங்க. பெரியவங்க சொல்ராங்க.


கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.

அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.

டிஸ்கி:- ஐயோ, சாமிக்கெல்லாம் கேக் பண்ண ஆசை வரலாமா?.
நீ வாயை மூடிண்டு ஒரு ஓரமா நிக்கிரியா?

மிஸ்டர் எகஸ் - 2

                       பாட்டு பாடணும்.

     மிஸ்டர் எக்ஸுக்கு மனைவியும்,   இரண்டு வயதில் ஒரு குட்டி பையனும்
     இருந்தார்கள்.ஒரு சமயம் பக்கத்து வீட்டு குழந்தைக்கு ஒன்றாம் வயது
     பிறந்த நாள் விழாவுக்கு இவர்களையும் அழைத்திருந்தார்கள். 6  மணிக்கு
     மூவரும் கிளம்பி  போனார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து நிறைய
     குழந்தைகள் பெற்றோருடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் கலர் தொப்பி
     கலர் கண்ணாடி மாஸ்க் எல்லாம் போட்டுன்ண்டு ஒரே ஆட்டம் பாட்டம்
     கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 7- மணிக்கு கேக் வெட்டி ஹேப்பி பர்த்
     டே பாடி கேக் ,ஸ்னாக்ஸ் ஜூஸ் எல்லாம் சாப்பிட்டார்கள்.குழந்தைகள்
     ஓடிப்பிடித்து விளையாடியும், பெரியவர்கள் ஹாலில் வட்டமாக உக்காந்து
     அரட்டையிலும் மும்முரமாக இருந்தார்கள். அப்போதுபார்த்து  ஜூனியர்- எக்ஸ்
     மம்மி எனக்கு மூச்சா வரதுன்னு சத்தமாகச்சொன்னான். எல்லா குழந்தைகளும்
     கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு கேலி செய்வதுபோல சிரித்தார்கள்.

    மிஸஸ் எக்ஸ் குழந்தையை பாத்ரூம் கூட்டிப்போனாள். இங்க பாரு பேட்டா
    இதுபோல சமயத்தில் மூச்சா வரதுன்னு சொல்லக்கூடாது எல்லாரும் எப்படி
    கேலியா சிரிச்சா பாத்தியா. இனிமேல மூச்சா வரும்போதெல்லாம் மம்மி
    எனக்கு பாட்டு பாடனும்னு சொல்லனும். நான் புரிஞ்சுண்டு உன்னை பாத்ரூம்
    கூட்டிப்போவேன் சரியா என்று  சொன்னாள். ஓ, கே, மம்மி இனிமேல பாட்டு
    பாடணும்னு சொல்ரேன் சரியா என்று சமத்தாகச் சொன்னான். பார்ட்டி முடிந்து
    வீடு போனார்கள். அதுமுதல் பையன் அம்மாவிடம் பாட்டு பாடணும்னு சொல்ல
    பழகினான். மிஸஸ் எக்ஸுக்கு ரொம்ப சந்தோஷம். குழந்தை சொன்ன உடனே
    புரிஞ்சுண்டானே என்று.

    10-தினங்கள் கழிந்தபிறகு மிஸஸ் எக்ஸுக்குபக்கத்து ஊரில் இருக்கும் அவளின்
   பெற்றோரை பார்க்கப்போக வேண்டி இருந்தது. மிஸ்டர் எக்ஸுக்கு லீவு கிடைக்கலை.
   குழந்தையும் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொன்னான். சரின்னு மிஸஸ் எக்ஸ் மட்டும்
   முத நாள் இரவு 7-மணிக்கு கிளம்பி போய் மறு நாள் காலை 8-மணிக்கு திரும்ப வருவதாகச்சொல்லி  பையனிடம் மம்மி ஊருக்குபோய்ட்டு வரேன் டாடியை படுத்தாம சமத்தா
   இருக்கனும் என்று சொல்லிட்டு, மிஸ்டர் எக்ஸிடமும் குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போனா. குழந்தையும் ஜாஸ்தி தொந்திரவு கொடுக்காம டி.வி யில்
   கார்ட்டூன், போகோ எல்லாம் பாத்துட்டு சமத்தா அப்பாவும் பில்ளையும் சாப்பிட்டபிறகு 10-
   மணிக்கு படுக்கப்போனார்கள்.

   அப்பா ஸ்டோரி சொல்லுன்னான் குழந்தை. என்ன ஸ்டோரி வேணும்னுகேட்டார் அப்பா.
   அதான் பா, குருவி பாயசம் சாப்பிட்ட கதை, காக்கா தண்ணிகுடிச்ச கதை,முயல் ஆமை
   கதை இதெல்லாம் சொல்லு என்ரான். அப்பாவும் அலுக்காம ஒருமணி நேரம் கதை சொன்னார்.
   11-மணி ஆகியும் குழந்தை தூங்காம கதை கேட்டான். மிஸ்டர் எக்ஸ் சரிபேட்டா நேரம் ஆச்சு.
  இப்ப நாம தூங்கலாமான்னார். பையன் உடனே அப்பா எனக்கு பாட்டுப்பாடணும்னு சொன்னான்.
   அம்மா, பிள்ளையின் கோட் வேர்ட் அவருக்குத்தெரியாது. என்னது மணி 11 ஆகுது இப்பல்லாம்
   பாட்டு பாடக்கூடாது அக்கம் பக்கத்ல எல்லாரும் எழுந்துடுவா. நாளைக்காலேல பாட்டு பாடுவியாம்
   சரியா இப்போ சமத்தா படுத்து தூங்குவியாம் என்று சொன்னார். பையனா கேப்பான் இல்லைப்பா
   எனக்கு இப்பவே அவசரமா பாட்டு பாடியே ஆகனும்னு அடம்பிடிக்கவும் எக்ஸ்  என்ன பண்ணனு
  கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, சரி மெதுவா என்காதுல மட்டும் பாடுன்னார் பையனோ திகைத்துப்போய்
   என்னது உன் காதுலயா என்ரான் ஆமாடா சீக்கிரமா பாடு வா. எனக்கு தூக்கமாவருது என்ரார்.
  குழந்தையும் சமத்தா அப்பாகாதுல பாட்டு பாடினான்.

  ( சும்மா ஒரு ஜாலிக்கு. ஜஸ்ட் ஃபார் ஃபன்) இதெல்லாம் வெரும் சாதா தான். 




 இன்னொரு சமயமும் மிஸ்டர் எக்ஸும்  அவர் பையனு்ம் இரவு தனியாக இருக்க வேண்டி வந்தது. வழக்கம்போல டி. வி. பார்த்து சாப்பிட்டு கதை சொல்லி, எல்லாம் முடிந்து  11- மணி  ஆனதும் மகனிடம் தூங்குப்பா என்றார். அந்த வாண்டு அம்மா கொடுப்பதைக்கொடு, ஆனாதான் தூங்குவேன்
 என்ரான்.அம்மா என்ன கொடுப்பாங்க? நீ தான்
 இவ்வளவு பெரிய அப்பாவா இருக்கியே உனக்குத்தெரியாதா? சீக்கிரம் கொடு என்ரது.
எனக்குத்தெரியலை நீயே சொல்லு என்ரார்.
 அந்த வாண்டு சொல்லாமல் அடம் பிடிக்கவும் எக்ஸுக்கு கோவம்வந்து பையன்
 முதுகில் ஓங்கி நாலு அடி வைத்தார். அப்ப
அந்த வாண்டு இதைத்தான் அம்மா டெய்லி
 கொடுப்பாங்க அப்பதான் எனக்கு தூக்கமே வரும்னுசொல்லி  திரும்ப படுத்துண்டு தூங்கினான். மிஸ்டர்எக்ஸோ தலையில் கை வச்சுண்டூ கட்டில் ஓரமாக உக்காந்தார்.


அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


நந்தவனம்


என் அழகிய ரோஜா
கை நழுவி நிலத்தில் விழவில்லை
நெருப்பில் விழுந்து விட்டது
எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை- சுறாவளி
என் சுகந்தமான தென்றலை இழுத்து சென்றது...

அன்று இன்பம் வீட்டினில் தவழ்ததால் துன்பம் இல்லை...
இன்று துன்பம் வீட்டில் குடி அமர்ந்ததால் இன்பத்தை நெருங்க முடியவில்லை...

அன்று என் கண் எதிரே உலவிய தெய்வம்
இன்று நிழலாய் போனதேன்?
கனவுகள் மட்டுமே என் வாழ்க்கையா?

வாழ்க்கை எனும் சுவட்டில் காலம் ஒரு தொடர் கதை
பாதி எழுதுவதற்குள் கதையின் கரு தொலைந்து விட்டது

உயிர் கொடுத்து அன்பை சமைத்து ஊட்டியவளே
நான் அம்மா சொன்ன போது என் உச்சி முகர்ந்தவளே
உன் விரல் பிடித்து நடந்த போது தேர் வடம் பிடித்த பெருமை எனக்கு
இன்று தெய்வம் இல்லா கோவில் ஆனேன்

மலரினும் மெல்லிய உன்னை தீ தான் தழுவியதோ?
அன்று நிலா காட்டி எனக்கு சோறு ஊட்டினாய்
என் பசி திரும் முன் நீ எங்கே சென்றாய்
நான் கேக்கிறேன் நிலவே என் தாய் எங்கே?
என் வாழ்வில் என்றும் அமாவாசை தானோ

என்ன தான் செய்தாலும்
இதயம் ஆற மறுக்கிறது

வாழ்கையின் கண்ணா மூச்சி விளையாட்டு இறப்பு தானே
மரண தூதன் வந்து அழைத்து விட்டான் நீயும் சென்று விட்டாய்.

அல்லல் படுகிறேன் நான் இங்கு தனியாக அம்மா
யாரிடம் ஓடுவேன் கடவுளிடம் ஒடுவேனா,
இல்லை கதறி தான் அழுவேனா என்ன செய்ய முடியும்.
உன் கருவறை மட்டும் உலகம் என கொண்டவளே இங்கு
தனியாக விட்டு எங்கே சென்றாய்.
நாட்கள் ஓடி விட்டன இப்பொழுதும் உதடுகள் கேட்கின்றன
எங்கே என் அம்மா என்று...??????

சூல் கொண்ட உன் கருவில் நான் மீண்டும் பிறப்பது எப்போது?
என் வசந்தம் திருமபுமா?
உன் கல்லறை சுமக்கும் பூக்கள் எல்லாம் எந்தன் இதய வலியே
உன் தோட்டத்தில் நான் மலர்வது எப்போது அம்மா


வலியுடன் , 

ஜெஸ்சி . . 

 

தேவ் லாலி

 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters