காலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோயின் படிச்சா காலேஜ்ளையும் ஒரு கேங் இருந்தது. அதுல சில பசங்க சில பொண்ணுங்க. அந்த கேங்ல Commit ஆகாம இருந்தது ஒரு பையனும் ஒரு பொண்ணும்தான் அவங்கதான் நம்ப கதையின் ஹீரோ, ஹீரோயின் பூஜா மற்றும் சஞ்சய். சும்மா சொல்ல கூடாது நம்ப கேங் போட்ட ஆட்டத்துல காலேஜ் கொஞ்சம் ஆடித்தான் போச்சு . இருந்தாலும் அவங்களுக்கும் தங்களோட கல்லூரி ஆட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்தது. அவங்களோட காலேஜ் வாழ்கை முடியபோது. அவங்க எல்லாரும் பரீட்சை முடிச்சிட்டு அவங்களோட விடுமுறைய அவங்க லவ்வர் கூட சந்தோஷமா ஸ்பென்ட் பண்றாங்க. அந்த கேங் அடிகடி வெளில ஒண்ணா சேர்ந்து போவாங்க. அப்படி ஒரு நாள் எல்லாரும் பார்க்க்கு போனாங்க.கொஞ்ச நேரத்துல எல்லாரும் அவங்க அவங்க லவ்வர் கூடதனியா எஸ் ஆகா . சஞ்சய் , பூஜா மட்டும் தனியா இருந்தாங்க. அப்போ நம்ப சஞ்சய் , பூஜாகிட்ட பேச ஆரம்பிச்சான் .
சஞ்சய் : ஹாய்
பூஜா : ஹாய்
சஞ்சய்: நம்ம கேங்ல எல்லாரும் கமிடெட், நாம ரெண்டு பெற தவிர
பூஜா : ஆமா
சஞ்சய்: சிங்கிளா இருக்குறது ரொம்ப போர்ல?? அதுவும் ஹோலிடேஸ்ல.
பூஜா: ஆமா நானும் அதான் நினைச்சேன். நாம தான் இந்த உலகத்துலேயே நம்ம
வாழ்க்கைல ஸ்பெஷலா யாரும் இல்லாம இருக்கோம்
(பூஜாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. ஆனா சஞ்சய் அவ கிட்ட காதல
சொல்லனும்னு அவ ஆச படுறா (என்ன பண்ணுறது எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரிதானே) )
சஞ்சய்: நாம ஏதாவது பண்ணும்.
பூஜா: ஓ பண்ணலாமே . . . வேணும்ன்ன பிரியாணி பண்ணலாம? ஹி ஹி
சஞ்சய்: என்ன கிண்டலா ? . ஆனா நான் அடுத்த மாசம் US போறேன் என்னோட higher studiesக்கு ... அதுக்குள்ள நான் ஒரு பொண்ணு பாக்கணும்... அவளை லவ் பண்ண வைக்கணும் . எப்புடி ?
(சஞ்சய் ஒரு அனாதை.. அதனால சஞ்சய் வாழ்க்கைல இந்த அளவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டான்.. அதனால அவனுக்கு லவ் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அவனும் ஒரு சராசரி பையன்தானே . அவனுக்கும் சில சாராசரி ஆசைகள் இருக்கத்தான் செய்தது. இத்தனை நாள்தான் அநாதை என்கிற உணர்வோட வாழ்க்கைல முன்னேறவேண்டும் அப்படிங்கிற வெறியோடு எந்தவித சராசரி கொண்டாட்டங்களும் இல்லாம வாழ்க்கை வாழ்த்துட்டான். அதனால அவனுக்கு இருக்கிற ஒரு மாசம் ஒரு நல்ல நட்பையும் மீறி , அன்யோன்னியமாக பழகவும் , கொண்டாடவும் ஒரு நல்ல பெண் தேவை பட்டா )
பூஜா: சஞ்சய் சும்மா சொல்ல கூடாது என்ன ஒரு வாழ்க்கை லட்சியம் வச்சு இருக்க நீ , சபாஷ் .
சஞ்சய் : ஏய் , நீ வேற , நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் , ஆனா உனக்கே தெரியும் எனக்குன்னு யாரும் இல்லன்னு இத்தனை நாள் படிப்பு அது இதுன்னு இருந்துட்டேன் ஆனா , இப்போதான் ஏதோ தனிய இருக்குற மாதிரி ஒரு உணர்வு , எனக்கு ஒரு துணை தேவபடுது . பசங்கனா நிறைய பேரு இருக்காங்க , ஆனா ஒரு நல்ல பெண் தோழி , நடப்பையும் மீறி ஒரு உறவு . ஹ்ம்ம் சரி பார்க்கலாம் .
பூஜா: (பூஜா மனதுக்குள்: நான் இந்த வாய்ப்பை தவற விட கூடாது)
டேய் நான் சும்மா கிண்டல் பண்ணினேண்டா. சரி நான் வேன்னும்ன்ன ஒரு ஐடியா சொல்லவா ? (தயக்கத்தோடு கேட்டாள்)
சஞ்சய்: அப்படியா??? என்ன அது??? சொல்லு
பூஜா: நாம வேனும்னா ஒரு கேம் விளையாடலாமா?.
சஞ்சய்: என்ன சொல்ற நீ??
பூஜா: நீ இங்க இந்தியால இருக்கிற இந்த முப்பது நாளைக்கும் உன் லவ்வரா நான் இருக்கேன், நீ எனக்கு லவ்வரா இரு. அப்புறம் நீ சந்தோசம கிளம்பி US போய் உன்னோட படிப்ப முடிச்சுட்டு வா .
(அவ மனசுகுல்ல : .... இது தான் எனக்கு கிடைச்ச சரியான வாய்ப்பு..நான் என்னொட காதல சஞ்சய்க்கு புரிய வைக்கணும் .. சஞ்சய் இதுவரைக்கும் பார்க்காத அன்பையும் , பாசத்தையும் அவனுக்கு
குடுக்கணும்.. கடவுளே சஞ்சய் இதுக்கு ஒத்துக்கணும்……….. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
சஞ்சய்: ஹே பூஜா இது ஏதோ கேப்ல கோல் போடுற மாதிரி இருக்கு ? ஹி ஹி ஹி
பூஜா: அடப்பாவி உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு , ஏதோ சின்ன பையன் ஆச்சே போனா போகுது கம்பெனி குடுக்கலாம்ன்னு பார்த்த ரொம்பதான் பேசுற? ஆள விடு நீ தனியாவே ஊரை சுத்து , நான் கிளம்புறேன் .
சஞ்சய்: ஹ ஹ ஹ , . . ஹே சும்மா சொன்னேன் , நீ வேற கோவிச்சுகாதே.
இதுவ்வும் நல்ல யோசனையாதான் இருக்கு.. எனக்கும் இந்த ஒரு மாசத்துல எந்த ப்லானும் இல்ல.
பூஜா: அப்படிங்கிற ? சரி அப்போ நாளைல இருந்து நாம, நம்ம கேம்மை ஸ்டார்ட் பண்ணலாம் . சரியா ? (நாலைல இருந்து
நீ உன்மையான அன்பை பார்க்க போர.. கடவுளே இவன் 30 நாளுக்குள்ள சஞ்சய்
காதலை என் கிட்ட வந்து சொல்லனும்..)
சஞ்சய்: எனக்கு டபுள் ஓகே .
அப்புறம் அவங்க அடுத்த 30 நாளைக்கும் ப்ளான் போட்டாங்க.
நாள் 1:
தொடரும்...............
( இந்த கதையை முதல் முறை பதிவிட்ட போது நமது நண்பர்கள் நிறைய, நிறை குறைகளை அக்கறையோடு சொன்னாங்க , அதுஎல்லாம் தான் கீழ உள்ள கமெண்ட்ஸ்ல இருக்கு . நிறைவான விசியங்கள நிறைய இருந்தாலும் , குறைகள் அதைவிட கொஞ்சம் தூக்கலாய் இருந்ததால் , அதையெல்லாம் முடிந்த வரை நிவர்த்தி செய்து மீண்டும் பதிவிட்டு இருக்கேன் . இதுலயும் குறைகைகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டி காட்டுங்கள் . தங்கள் அன்பை அன்போடு எதிர் பார்கிறேன் . . . )
அன்புடன் ,
maggi