Mr. X | |
இது மிஸ்டர் எக்ஸ் குளுருக்கு வாங்குன டிரஸ் , ஆனா ஆபீஸ் போகும் போது வேட்டி சட்டைலதான் போவாரு, யாரும் சிரிக்க படாது . . |
நம்ம மிஸ்டர் எக்ஸ் இருக்காங்களே அவங்க் வேலை பார்த்த ஆபீசு
13-வது் மாடியில் இருந்தது. அவரு எப்பவுமே நம்ம தமிழ் கலாச்சாரப்படி
வேஷ்டி சட்டை போட்டுத்தான் வேலைக்குப் போவார். ஒரு நாளு அ ந்த
கட்டிடத்தில் எதிர்பாராவிதமாக நெருப்பு பிடித்துவிட்டது. உடனே தீ அணைக்கும்
ஆபீசுக்கு போன் பண்ணி நெருப்பணைக்கும் வண்டி எல்லாம் வந்து வேலையை
சுறு சுறுப்பாக ஆரம்பித்தார்கள்.ஒவ்வொரு மாடியிலும் உள்ள வர்களை காப்பாற்ற
கிழே அவர்கள் பெரிய ஸ்பிரிங்க்வலையை விரித்து ஒவ்வொருவரையாக மெதுவாக
குதிக்கவைத்து காப்பாற்றினார்கள். எல்லாரும் வெளியேறிய பிறகுதான் குழாய் மூலமாக
தண்ணீரை முழு வேகத்தில் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க வேண்டும் என்று
நினைத்தார்கள். மிஸ்டர் எக்ஸையும் மெதுவாகக்குதியுங்க சார்னு கீழேந்து கத்தினார்கள்.
அவருக்கோ 13-வது மாடிலேந்து குதிக்க ஒரே பயம். கீழ உள்ளவங்க பயப்படாதீங்க வலை
இருக்கு இல்லியா ஒன்னும் ஆகாதுன்னு தைரியம் கொடுத்தாங்க. அவரும் எல்லா
கடவுள்களையும் வேண்டிக்கொண்டு வேகமாக குதித்தார். குதித்தவேகத்திலேயே ஸ்பிரிங்க்
வலை அவரை திரும்ப மேலே அனுப்பி 10-வது மாடியில் தூக்கி எறியப்பட்டார். ஏதுடா இது
எல்லாரும் சரியா குதித்து பாதுகாப்பாக கீழ போயிட்டா. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு
யோசித்து, கீழே பார்த்து சார் வலையை கெட்டியா பிடிங்க நான் இப்ப குதிக்கரேன் என்றார்.
திரும்பவும் மிகவும் வேகமாகவே குதித்தார்.
திரும்பவும் ஸ்பிரிங்க் வலையால் தூக்கி எறியப்பட்டு 11- வது மாடியில் போய் விழுந்தார்.
கீழே உள்ள தீயணைப்பு படை வீரர்களும் இவரை மெதுவாக குதிக்க ச்சொன்னா கேக்காம
வேகமா குதிக்கராரேன்னு, கீழே வலையில் பூராவும் பெவிக்காலை தாராளமாக தடவி வைத்து
இப்ப குதிங்க என்றார்கள்.அவரும் வழக்கம்போலவே வேகமாககுதித்தார். குதித்தவேகத்தில்
வலையில் தடவி இருந்த பெவிக்கால் உதவியால் அவரின் வேட்டிமட்டும் வலையில்
ஒட்டிக்கொண்டது. எக்ஸ் திரும்பவும் 13-வது மாடியிலேயே போய் விழுந்தார். எல்லாருக்கும்
ஒரே சிரிப்பு. எக்ஸோ நான் மாடி படி வழியே இறங்கி வந்துடரேன்னு மூச்சுவாங்க இறங்கி
வந்தார். கீழே வந்தபிறகுதான் அவருக்கு இடுப்பில் வேட்டியே இல்லை என்பது தெரிய வந்தது.
வழ்க்கம்போல தன் அசட்டுத்தனத்தால் எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி
பரிதாபமாக திருதிரு என்று விழித்துக்கொண்டு நின்றார்.
மிஸ்டர் எக்ஸுக்கு ஒருமுறை பல்லில் கூச்சம் ஏற்பட்டது. எந்த
ஸ்வீட் சாப்பிட்டாலும், ஐஸ்தண்ணி குடித்தாலும் பல்லில் ஒரே
கூச்சம் இருந்தது. டெண்டிஸ்ட்டிடம் போனார். அங்கு காத்துக்
கொண்டிருக்கும்போது சுற்றி உள்ளவர்களை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தார். ஏ அப்பா இவ்வளவு பேருக்கா பல்லில் அவஸ்தை
இருக்கு. பல்டாக்டர் ஒரொரு பல்லுக்கும் சார்ஜ் பண்ணிடுவாரே.32 பல்
ட்ரீட்மெண்டுன்னா என்ன வரும்படி வரும்னுகண்டபடி யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அவரின் முறைவந்து உள்ளே போனார். டாக்டர்
இவரிடம் என்ன ப்ராப்ளம் என்று கேட்டார். அப்போதான் எக்ஸுக்கு
பல்கூச்சத்துக்கு இங்க்லீஷில் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலியே
என்றொ தோன்றியது. சட்டென்று டாக்டரிடம் மை டீத்ஸ் ஆர் ஷையிங்க்.
என்றார். யாராவது கூச்ச சுபாவம் உள்ளவர்களை ஷை டைப் என்றுதானே
சொல்வாங்கன்னு அப்படி சொன்னார். டாக்டருக்கோ அடக்கமுடியாமல் சிரிப்பு
வந்தது.
எப்பல்லாம் உங்க பல்லு ஷை பண்ணுதுன்னு அவரும் ஜோக்காகவே கேட்டார்.
உடனே மிஸ்டர் எக்ஸுக்கு ஆஹா, நாம கரெக்டாதான் சொல்லி இருக்கோம்
என்று குஷி ஆச்சு.ஸ்வீட் சாப்பிடும்போது, ஐஸ்வாட்டர்மாதிரி கூலா எதுவும்
சாப்பிடும்போது ரொம்ப ஷை ஆகுது என்றார். டாக்டரும் தமிழில் கேட்டார்.தமிழ்ல
சொல்லுங்க பல்லு என்ன பண்ணுது? என்றார். ரொம்ப கூசுது என்றார். ஓ, அதுக்குத்
தான் ஷையிங்க்னு சொன்னீங்களா. அப்படி சொல்லக்கூடாது டீத்ஸ் ஆர் சென்சிடிவ்
ஆக இருக்குனு சொல்லணும் என்று டாக்டர் சொல்லவும் பின்ன நீங்க கூட என்கிட்ட
எப்பல்லாம் பல் ஷை பண்ணுதுன்னு ஏன் கேட்டீங்கன்னு பரிதாபமாக கேட்டார் எக்ஸ்.
உங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி சொன்னேன் சார். டேக் இட் ஈசி என்றார்.
எக்ஸும் வழக்கம்போல பரிதாபமாக திரு, திரு முழியுடன் வெளியேறினார்.
அன்புடன் ,
லக்ஷ்மி
2 .) தமிழ்விரும்பி