காதல்
காலங்கள் கடந்த போதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்.........!
கவிதை எழுதிய போதும்
கற்பனை மட்டும் உன்னிடத்தில்.....!
உதடுகள் அசைந்த போதும்
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்....!
கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்...!
நான் இறக்கும் போதும்
என் இதயம் மட்டும் உன்னிடத்தில்...
என் கண்களில் நீரில்லை எழும்பி கீழே வருமுன்னர்
இதயதுடிப்பால் தீயாக எரிக்கப்படது
ஆவியாக என் நாவில் சொல்லில்லை சொல்லிவிட
எண்ணுமுன்னர்நெஞ்சுத் தணல் நெருப்பாக நீக்கிவிட்டது
மௌனமாக என் காலில் இயக்கமில்லை எழுந்து நடக்க முயலுமுன்னர்
உளத்தில் உள்ள உஷ்ணம் உருக்கிவிட ஊனமுற்றது
உண்மையாக என் இதழில் சிரிப்பில்லை மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட மங்கி மறைந்தது மந்தமாக
என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
இதயம் நிறைந்தது நீயாக!!!
லேடீஸ் அண்ட் ஜென்ட்லேமேன் Im glad to share my friends and my poem as well... First half is my friends and the rest of them is done by me... etho ennaku therinjatha ezuthi iruken....
பிரிஎண்ட்ஸ் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
காதலுடன் ,
யுரேஷ் குமார் .....
