சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்படி ஒரு சாதனையை செய்து சத்தமில்லாமல் செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து இருகிறார் நம் சாதனை சஹானா .
சஹானாவின் சாதனையை பார்பதற்கு முன்னாள் சஹானாவை பற்றி ஒரு சிறு அறிமுகம் . சஹானா
tamilrockzs chat zone இன் தவிர்க்க முடியாத உறுப்பினர் . இந்த
chat zone இல எல்லாருக்கு புடித்த உறுப்பினர் . சும்மா சஹானா நுழைந்தாலே சாட் களைகட்டும் .
எனக்கு சஹானாவை அறிமுகபடுத்திய பெருமை சந்தியாவையும் ,
Angel ளையுமே சாரும் . அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு . ஒரு நாள் நான் வழக்கம் போல் சாட் ஜோன்னில் சந்தியாவுடன் சாட் செய்தது கொண்டு இருக்க அப்போது சாட் ஜோன் மற்றும் என்னுடையை மடிகணினி லேசாக அதிர நான் மிரட்சியோடு சந்தியாவிடம் என்ன ஆச்சு எண்டு கேட்க "அது ஒன்னும் இல்லை இது சஹானா வருவதற்கான அறிகுறி என்று சொல்ல அடுத்த சில வினாடிகளில் சஹானா அதிரடியாக சாட் ஜோன்இல் நுழைய நான் சற்று நிலை குலைந்துதான் போன்னேன் . ஆனால் ஆட்டம் அதோட நிற்கவில்லை , சஹானாவின் அதிரடி வரவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் சந்தியா, சஹானாவிடம் கேட்ட அந்த கேள்வி என்னை கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் ஆளத்தான் செய்தது . அதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கதான் செய்கிறது . அந்த கேள்வி " சஹானா ராஜேஷ்சை கட்டிகிறியா? " இது சந்தியா . இதை கேட்ட சஹானா கண்ணிமைக்கும் நேரத்தில் சற்றும் தயங்காது களவாணி படத்தில் கதாநாயகி மகேஷ் (ஓவியா ) சொன்னது போல " கட்டிக்கிறேன்ன்ன் ன் ன் ன் ன் ன் . . . . "ன்னு சஹானா சொல்ல . எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போனதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. என்னுடைய கால்கள் தரையில் நிற்க மறுத்த கணங்கள் . மனசு ஆகாயத்தில் இறக்கை கட்டி பறக்க தொடங்கின . வானம் வசப்பட்டது . அதே சந்தோஷத்தில் நான் சஹானாவுடன் எனது கன்னி சாட்டை தொடங்க , கொஞ்சம் நேரம் தான் ஆகி இருக்கும் சாட் ஜோன் இல் ஒரே புகை மண்டலம் வேறு ஒன்றும் இல்லை சந்தியாவின்
stomach burning (வயித்தெரிச்சல் ) மற்றும் காதில் வந்த புகையும்தான் அதற்க்கு காரணம் . நான் சுதாரிபதற்குள் சும்மா இருக்காத நயவஞ்சக சந்தியா " சஹானா ராஜேஷ் யையே கட்டிக்க போறியா ? கட்டிக்கோ கட்டிக்கோ , ராஜேஷ்க்கு லட்டு மாதிரி ஐந்து குழந்தைகள் இருக்கு , நீ ரொம்பா குடுத்து வச்சவா" ன்னு ஒரு அணுகுண்டை போட , என் இதயத்தில் இடியை இறக்கினாள் சந்தியா .
|
வடை போச்சே! ! ! |
இதை கேட்ட சஹானா "ஐயோ அம்மாடின்னு நான் இல்லன்னு " ஒடுனதுதான் திரும்ப அந்த பக்கமே வரல . எனக்கு வந்தது பாருங்க கோவம் , அடிப்பாவி வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல இப்படி உடைச்சிடியேன்னு அப்படியே சந்தியா மண்டைல நாலு போட்டேன் .
|
சந்தியா என்னிடம் அடி வாங்கியா காட்சி |
அப்புறம் சந்தியாவை குமுற குமுற அடிச்சு உண்மைய சஹானா கிட்ட கக்க வைக்குரதுகுள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு .
அப்புறம் ஒரு வழிய சஹானாவை என்னுடைய ப்ரெண்ட்ஸ் லிஸ்ட் ல சேர்த்ததுக்கு அப்புறம் தான் சஹானாவின் சாதனை எனக்கு தெரிய ஆரம்பிச்சது . பொதுவாவே சஹானா
chat zone ல
spam பண்ண கூடிய ஆளு .
spam ஐயும கூட சாதாரணமா பண்ணாம ரொம்ப கிரியேடிவ்வா பண்ண கூடிய திறமைசாலி.
spam சிறு குறிப்பு :
spam என்பது ஒரே வார்த்தையோ அல்லது ஒரே வாக்கியதையோ பல முறை தொடர்ந்து டைப் செய்து chat இல் அல்லது மெயிலில் அனுப்புவது . ( மேலும் விவரங்களுக்கு சஹானாவை தொடர்பு கொள்ளவும் . . தொடர்புக்கு : spamsahana@spam.com )
அது எப்படினா,
chat zone ல எல்லாரும் இருக்கிற நேரத்துல சஹானா வந்து ஆட்டம் போட்டாலும் , சஹானாவுக்கு புடிச்ச நேரம் நைட் பேய் எல்லாம் கண்ணு முழிக்கிற நேரம் அதாவது பகல்ல இருந்து நைட் வரைக்கும் எல்லாரும்
chat zone ல ஆட்டம் போட்டுட்டு ஒவ்வொருதரா போனதுக்கு அப்புறம் கடைசியா இருக்கிற ஒரு ஆளும் யாரும் இல்லையா , யாராவது வாங்கன்னு தொண்டை தண்ணி வற்ற கத்தி , அட போங்கடா யாரும் இல்லாத கடைல நான் யாருக்குடா டீ ஆத்துறது மனசு உடைஞ்சு , நானும் போறேன்னு சொல்லிட்டு போறதை கூட சஹானா சத்தம் இல்லாம சைலேன்ட்டா பார்த்துகிட்டு இருந்துட்டு அந்த கடைசி ஆளும் போனதுக்கு அப்புறம் சஹானா தன்னுடைய கச்சேரியை தொடங்கும் . என்ன கச்சேரியா? வேற என்ன கச்சேரி? ஸ்பாம் கச்சேரி தான் . சும்மா தன்னுடைய பெயர்ல ஆரம்பிச்சு , தனக்கு புடிச்சவங்க பெயர் ,
chat zone பெயர்ன்னு சும்மா டிசைன் டிசைன்னா ஸ்பாம் கச்சேரியை தனி ஒரு ஆள களைகட்ட வைக்கும் . அட அட அதை பார்பதர்க்கு கண்கோடி வேண்டும் . இதெல்லாம் தெரியாத நான் என்னோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்ந்த சஹானா நான் ஆன்லைன் இல்லைனா கூட வந்து என்னோட பெயரை ராஜேஷ் ,ராஜேஷ் ,ராஜேஷ்ன்னு ஸ்பாம் பண்ணி வச்சுட்டு போய்டும் . நான் எப்போ எல்லாம் என்னோட ID ஓபன் பன்னுறேன்னோ அப்போ எல்லாம் சஹானாவோட
spam நிறைஞ்சு கிடக்கும் . ஆஹா இந்த சஹானாவுக்குத்தான் நம்ப மேல எவ்வளவு பாசம்ன்னு எனக்கு ஒரே சந்தோசம், ஆனா நான் இல்லாத போது வந்து offline ல spam பண்ணுறது மட்டும் நிக்கல , எப்ப பாரு வந்து
offlineல
spam பண்ணிட்டு போய்டவேண்டியது. என்னடா இது இந்த சஹானா ஆன்லைன்லையே சிக்க மாடிங்குது வரட்டும் இன்னைக்கு, எப்படியாவது புடிச்சுடன்னு கைல வலையோட வலைத்தளத்துல காத்திருந்தேன் . மிக நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் ஆன்லைன் வந்த சஹானாவை காபால்ன்னு புடிச்சு , கப்புன்னு ஒரு கேள்வி கேட்டேன் . " ஏய் , சஹானா என்ன இது? நான் இல்லாத நேரத்துல வந்து இப்படி
offline ல
spam பண்ணிவசுட்டு போயிடுற? " இது நானு .
"எனக்கு spam பண்ணுறதுன்ன ரொம்ப புடிக்கும் ராஜேஷ்" அப்படினா சஹானா .
"என்னாது spam பண்ணுரதுன்னா ரொம்ப புடிக்குமா ?
oh my god , அப்படினா நீ என்ன மேல இருக்க பாசத்தால என்னோட பெயரை ஸ்பாம் பண்ணலையா ? " ன்னு கேட்டேன் . "இல்ல ராஜேஷ் நான் ஸ்பாம் மேல இருக்க பாசத்துலதான் ஸ்பாம் பண்ணினேன் " அப்படினா சஹானா
என்ன கொடுமை சார் இதெல்லாம்? என்னமோ இட்லி , தோசை புடிக்கும்கிற மாதிரி ஸ்பாம் பண்ணுறது புடிக்கும்ன்னு சொல்லுது இந்த பொண்ணு .
இது கூட பரவா இல்ல அதோட நிக்காம ," எனக்கு
spam பண்ண புடிக்கும் , எனக்கு
spam பண்ண புடிக்கும் " ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு . கடுபாகிட்டேன் . ஏய் நிறுத்து நிறுத்து ன்னு சொன்னாலும் நிறுத்த மாட்டின்குது . சரி இதை விட்டுதான் புடிக்கனும்ன்னு எவ்வளவுதான் பண்ணுற பாக்கலாம்ன்னு கம்முன்னு இருந்தேன் . ஒரு வழியா ஸ்பாம் பண்ணி முடிச்சுட்டு "ஹி ஹி " ன்னு ஒரு சிரிப்பு வேற . நான் பொறுமையா கேட்டேன் " என்ன முடிச்சாச்சா? "ன்னு . அதுக்கும் " ஹி ஹி " ன்னு ஒரு சிரிப்பு . இரு உனக்கு சரியான பாடம் கத்து குடுக்குறேன்னு , அதுக்கு அப்புறம் நான் அடிச்சேன் பாருங்க ஸ்பாம் " சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு , சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு " , ன்னு . சும்மா மிரண்டுடா சஹானா , நடுவ நடுவ கெஞ்சுரா , கதறா ராஜேஷ் போதும் , போதும் ன்னு . நான் விடவே இல்லையே சும்மா 10 நிமிஷத்துக்கு ஸ்பாம் பண்ணிகிட்டே இருக்கேன் . அப்புறம் வருது புரியுது ராஜேஷ் , ப்ளீஸ் போதும் ன்னு . அப்படி வா வழிக்கு ன்னு அப்புறமா நான் நிறுத்தினேன் . அப்புறம் பொறுமையா கேட்டேன் " என்ன புரியுது? " ன்னு .
"இல்ல ராஜேஷ் எனக்கு புரியுது , சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒருத்தர் இப்படி ஸ்பாம் பண்ணா அடுத்தவங்களுக்கு எவ்வளவு கடுப்பாகும் , கோவம் வரும்ன்னு இப்போ என்னகு புரியுது ராஜேஷ் " அப்படினா சஹானா .
" ஹ்ம்ம் அது , அந்த பயம் இருக்கணும் . இனிமே இங்க இல்ல எங்கயுமே நீ ஸ்பாம் பண்ண கூடாது . என்ன புரியுதா? " அப்படின்னு நான் கேட்டேன் .
"ஹம் . புரியுது " ன்னு சஹானா சொன்ன .
அப்படின்னா " இனிமே ஸ்பாம் பண்ண மாட்டேன்னு சொல்லு " அப்படின்னேன்
" சரி ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " அப்படின்னு பவ்வியாமா சொன்னா சஹானா . ஸ்ஸ்பா....... ஒரு வழியா நிறுத்தியாச்சுன்னு பெரு மூசுதான் விட்டு இருப்பேன் . அதுக்குள்ள பார்த்தா .
"ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுட்ட இந்த சஹானா .
ஸ்ஸ்பா முடியலடா சாமி , இந்த அகில சாட் உலகத்துலயே ,
"இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " ன்னு ஸ்பாம் (
spam ) பண்ணது சஹானா மட்டுமாதான் இருக்க முடியும் . இதென்னாடா உலக கொடுமையா இருக்குன்னு அப்போ முடிவு பண்ணினேன் . இப்படி சாட் உலகில் சாதனை செய்த சஹானாவை பெருமை படுத்தியே ஆகணும் . சாதாரண சஹானாவை இனிமேல் இந்த சாட் உலகம் இனிமே ஸ்பாம் சாஹனா (
Spam Sahana ) என்றுதான் அழைக்கணும் .
|
" Spam Sahana the Great " |
வாழ்க சஹானா ,
வளர்க சஹானாவின் ஸ்பாம். . .
என்று அன்புடன் வாழ்த்தும் ,
ராஜேஷ் .
பின்குறிப்பு : 1
கூடிய விரைவில் சஹானாவின் சாதனைகள் பார்ட் -2 பதிவு வெளிவரும் .
சஹானாவின் சாதனைகளை தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் . அதுவும் சஹானாவின் சாதனைகள் பட்டியலில் சேர்க்கபடும் .
எச்சரிக்கை :
இங்க வந்து வெறுமனே பதிவ படிச்சுட்டு வயிறை புடிச்சு சிரிச்சுட்டு கமெண்ட்ஸ் போடாம போறவங்க மெயில் ID யை சஹானாவிடம் குடுக்க படும் . அப்புறம் சஹானா அப்படி கமெண்ட்ஸ் போடாம போறவங்களை மெயில் ID ல ஸ்பாம் பண்ணி கொடுமை படுத்தத்துவார் என்று தாழ்மையுடன் எச்சரிக்க படுகிறார்கள் .
( தக்காளி யாராவது கமெண்ட்ஸ் போடாம போங்க இருக்கு உங்களுக்கு..... )