Followers

படிப்பு அனுபவம்.

                    
                    ஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும்
பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரும், குழந்தைகள் படிப்புச்செலவு, வீட்டுச்செலவு அதிகமா இருந்தாலும் கூட, எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தனும் என்று மாதம் 300 ரூபா செலவு செய்து, எல்லாதமிழ் புக்ஸும் வாங்கி வந்துடுவர்.லெண்டிங்க் லைப்ரரியோ, அக்கம் பக்கம் ஷேர்பண்ணிக்கும் படியோ எதுவும் சவுரியங்கள் இல்லாத கால கட்டம். அப்போ புக் படிக்க ஆரம்பித்தபழக்கம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத்தூண்டியது. எப்பபாத்தா
லும் சரஸ்வதி தேவிமாதிரி கையில் புக்கோடயே இருப்பேன். சமைக்கும்போதும் சாப்பிடும்போதும்கூட கயில் புக் இருக்கும்.

எந்தபுக் கயில எடுத்தாலும் முதல் அட்டைதொடங்கி கடைசி அட்டை வரை
படிச்சாகணும். விளம்பரங்களைக்கூட விட்டு வைக்கமாட்டேன். அப்படி ஒரு
 வெறித்தனமான படிப்பு.ஒருசமயம் படிப்பு எழ்த்துன்னா என்னன்னே தெரியாம
இருததது ஒருகாலம். இப்ப இங்க பாம்பே அம்பர்னாத் வந்து21-வருஷம் ஆகுது.
அந்தபட்டிக்காட்டு ஊர்களில் கூட எல்லாபுக்சும் கிடைத்தது. இங்க வந்ததும்
 நாங்க இருந்தது ஊருக்கு 5- கிலோமீட்டர் உள்ளதள்ளி இருந்தது. பக்கத்தில்
 ஒருகடையோ எதுவுமோ கிடையாது. எல்லாத்துக்கும் 5 கிலோமீட்டர்தள்ளி
 போகணும். நாங்க இருப்பது அம்பர் நாத் ஈஸ்ட்.

ஸ்டேஷனுக்கு மறுபுறம் வெஸ்டுன்னு சொல்வாங்க. அங்க ஒரு தமிழ்காரர்
புக் கடை வைத்திருந்தார். 6-கிலோமீட்டர் டெய்லி போயி புக் வாங்க முடியாது.
 அந்தக்கடைக்காரரிடம் எங்களுக்கு தமிழ்புக்ஸ், வாராந்திரி, மாசாந்திர, 15 நாளுக்கு ஒருமுறை வரும் புக்ஸ்,என்று மாசாமாசம் நிறைய புக் வேணும்
 நாங்க டெய்லி வரமுடியாது. எங்களுக்கு புக் தனியா எடுத்துவைக்கமுடியுமா?
 நாங்க 10 நாளுக்கு ஒருமுறை வந்து வாங்கிண்டு போரோம்னு கேட்டோம்.
அப்படில்லாம் முடியாதுங்க யாரு முதல்ல வராங்களோ அவங்களுக்கு கொடுத்துடுவோம்.தனியாஎடுத்தெல்லாம்வைக்கமுடியாதுன்னுசொல்லிட்டார்.

  நாங்கவேணா அட்வான்சா பணம் கட்டிடரோம். தமிழ்க்காரங்களே தமிழ்க்காரங்களுக்கு ஹெல்ப் பண்ணலைனா எப்படிங்க என்ரோம்.அவர் அதுக்கு சரி நீங்க தமிழ் பேப்பர் மும்பை டைம்ஸ் வாங்குங்க.அப்ப வீட்டுக்கே
 புக் அனுப்பரோம் என்றார்.சரி இப்படியாவது ஒருவழி இருக்கேன்னு நினைச்சு
 சரி நாளைலேந்து பேப்பர், புக்ஸ் எல்லாம் அனுப்புங்கன்னு சொன்னோம்.
 அந்த தமிழ்பேப்பர் எங்களுக்குத்தேவையே இல்லை. நாலு பக்கப்பேப்பர் அது
வும் சாணிப்பேப்பர், அதுக்கு ரெண்டுரூபா ஐம்பது காசு. ஆனாலும் புக்ஸ் வீடு
 தேடி வருமேன்னு சரி சொன்னோம்.

 சொன்னபடி அடுத்த நாள் பேப்பர் கல்கி, விகடன் வந்தது. அப்பாடான்னு இருன்
தது.சரி இன்மேல புக் எல்லாமே வீட்டுக்கே வந்துடும்னு சந்தோஷமா இருந்தது.ஆனா, அந்தசந்தோஷத்துக்கு அற்ப ஆயுசு. ஒருவாரம் ஒழுங்கா
 பேப்பர்வந்தது, பிறகு பேப்பரும் வல்லை, புக்கும் வல்லை. திரும்ப கடை படை எடுப்பு.என்ன சார் பேப்பர் புக் 10 நாளா வல்லியேன்னோம். சார் ஒரு பையன்
கூட அவ்வளவுதூரம்லாம் பேப்பர் போட வரமாட்டேங்கரான். நாங்க என்ன
செய்ய. நீங்க ஏன் அவ்வள்வு தூரமா வீடு எடுத்தீங்கன்னுஎங்களையே கேக்க
ரான். சரி இது சரி வராதுன்னு வீடு வந்து என்னபண்ணலாம்னு யோசனை.

 சென்னைக்கே வர்டாந்திர சந்தா அனுப்பி புக்போஸ்ட்லவரவழைக்கலாம்ன்னு
முதலில் மங்கையர் மலருக்கு ஒருவருட சந்தா அனுப்பினோம். அடுத்தமாதம்
கரெக்டா புக் வந்தது.ரெண்டு மாதம்சரியாவந்தபுக்அடுத்தடுத்துவரவேஇல்லை.
 இங்க நாங்க இருப்பது மூணாவதுமாடி. இங்க உள்ள போஸ்ட் மேன் எல்லாம்
 மூனு மாடி ஏறி டோர் டெலி வரில்லாம் பண்ணமாட்டாங்களாம். கீழ உள்ள
 குட்டியூண்டு திண்ணையில் புக் போஸ்ட் எல்லாம் வச்சுட்டு போயிடு வாங்க.
வெத்தலை பெட்டி சைசில் ஒரு போஸ்ட் பாக்ஸ் கீழே இருந்தது. அதில் கார்ட்
கவர்மட்டுமே போடமுடியும். புக் எல்லாம் வெளில கீழயே வச்சுடராங்க.

 அதுவும் எங்கபில்டிங்க் கீழ ஆடு, மாடு, நாய் நடமாட்டம்லாம் நிரையவே
 உண்டு,மாடுகளுக்கு அசை போட நம்ம புக் தான் கிடைக்கும். சுவார்சியமா
 அசைபோட்டு ஒருபக்கம் கூட பாக்கி இல்லாம தின்னுடும்.அப்பரம் நமக்கு
புக் எப்படி கிடைக்கும்?வாச்மேனிடம் சொல்லி வச்சோம், போஸ்ட்மேன் வந்துட்டுபோனதுமே புக் மேல கொண்ட் தந்துடுன்னு.அவனும் காதுலயே
 வாங்கமாட்டான்.வெறுத்தே போச்சு.என்னபண்ணினாலும் ரெகுலரா புக்
கிடைக்கமாட்டேங்குதே என்னதான்பண்ண என்று.

ஜபல்புர்,சந்த்ரபுரில் இருக்கும்போது எல்லாபுக்ஸும் கரெக்டா கிடைச்சதால
 மங்கையர் மலர், அவள் விகடன், குமுதம் சினேகிதி,கலைமகள் எல்லா
புக்சிலும் கதைகள், கட்டுரைகள் எல்லாம் எழுதிண்டு இருந்தேன். 15-ம் தேதி
 படைப்புகளை அனுப்ப கடைசி தேதின்னு கொடுத்திருப்பாங்க. அதுக்கெல்லாம் அனுப்பினேன். இங்க வந்ததிலேந்து எல்லாமே ஸ்டாப் ஆச்சு.
முலுண்ட்ல சின்னபெண் இருந்தா. அவ வேலைக்கு போகரயில்வேஸ்டேஷன்
வருவா. அப்ப அங்க உள்ள புக்ஸ்டாலில் எல்லா தமிழ் புக்கு கிடைத்தது. அவ
 வாங்கி மாசா மாசம் கூரியரில் அனுப்பி தந்தா. புக் 300 ரூபான்னா கூரியர்
செலவு 150-ஆச்சு. அந்தகாசுக்கு இன்னமும் வேரபுக்ஸ் வாங்கலாமென்னு
தோணும்.

அப்பவும் ஒருமாதம் கழிச்சு புக் கிடைப்பதால் எந்தபுக்குக்கும் எதுவும் எழுதி
 அனுப்பமுடியலை. அப்பரம் சின்ன பையன் தாணா என்னுமிடத்தில் இருந்து
 எல்லா புக்கும் வாங்கி மூணூ மாசத்துக்கு ஒருமுறை யாரிடமாவது கொடுத்து
அனுப்புவான். புக்ஸ் லேட்டா கிடைப்பதால் புக்கு எழுதர பழக்கமே ஸ்டாப்
ஆச்சு.லேட்டா கிடைச்சாலும் புக் கிடைக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். இப்ப சமீபமா ஒருவருடமாகத்தான் கம்ப்யூட்டர் அறிமுகம்.
நெட்ல புக் படிச்சா திருதியா இருப்பதில்லை. ரொம்ப நேர ம் நெட்லலாம் உக்கார முடியாது.கையிலபுக் வச்சுண்டு சேர்லயோ, படுத்துண்டே படிச்சாதான் திருப்தி.எல்லாபுக்கும் ஃப்ரெஷ்ஷா கிடைக்காது. பரவால்லை.
கிடைக்குதே அதேபோதும்.அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                               2 .)  தமிழ்விரும்பி


பதிவுலகில் பெண்கள் ......

பதிவுலகில் பெண்கள் ......

            Tamilrockzs  இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும் படலம் கோலாகலமாக ஆரம்பம் .

                         வாழ்கையில் எப்பவும் மனிதனுடைய போராட்டம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டிதான் . அங்கீகாரம் கிடைக்க எப்பவும் ஒரு அறிமுகம் தேவை . அதன் அடிப்படையில் உருவான எண்ணம் தான் இந்த அறிமுக படலம் .
          
                                    பொதுவாகவே எழுத்து துறையில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாவே இருக்கும் , ஆனால் பெண்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணம் தான் இந்த பதிவு . யாரை முதலில்  அறிமுகம் படுத்துவது என்ற எண்ணம் வந்த போது வழக்கம் போல் பெண்களுக்கு முதலிடம் . வலைபூ பதிவுலகில் உள்ள பெண் பதிவர்களை  அறிமுகப்படுத்த போகிறோம் . இது ஒரு ஆரம்பமே . தொடர்ந்து பல நல்ல பதிவர்களை அறிமுக படுத்த உள்ளோம் .

                                      இங்கே அறிமுக படுத்த படும் பதிவர்கள் , நமது வலைபூ தளத்திலும் எழுத அழைக்க படுகிறார்கள் .நமது இந்த வலைபூவில் எழுத விருப்ப படுபவர்கள் இந்த ஈமெயில் க்கு ஒரு விருப்பம் தெரிவித்து மெயில் அனுப்பினால் உடனே அவர்களுக்கான அனுமதி லிங்க் அனுப்ப படும் .
ஈமெயில் : tamilrockzs@gmail.comNote : இங்கு ஒவ்வொரு அறிமுகத்திலும் குறிபிட்டுள்ள பெயரில்லும் , வலைப்பூ பெய்யரில்லும் அவர்களது வலைபூ தளங்கள் லிங்க் இணைக்க பட்டுள்ளது அதனால் அவர்களின் வலைப்பூவுக்கு( blog ) செல்ல அதன் பெயர் மீது சொடுக்கினால் (click )  போதும் அந்த தளம் திறக்கும் . நன்றி

அறிமுகம் - 1 

வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                  2 .)  தமிழ்விரும்பி

       முதல் அறிமுகமே தாயை போல இருக்கும் லக்ஷ்மி அம்மா , இவரை அம்மா என்று அழைக்கவே நான் ஆசைபடுகிறேன் . லக்ஷ்மி அம்மாவை நமது வலைப்பூவில் முதல் அறிமுகமாக அறிமுகம் படுத்துவதில் நாம் பெருமைபடுகிறோம் . 

                   லக்ஷ்மி அம்மா மிகவும் கண்ணியமான பதிவர் , நல்ல தெளிவான எழுத்துக்கள் . எனக்கு மிகவும் பிடித்த வலைபூக்கள் இவர் வலைப்பூவும் ஒன்று  . இவர் பெண் என்பதால் வெறும் பெண்மையை மட்டும் போற்றி எழுதாமல் எல்லா விஷியங்களையும் எழுத கூடியவர் .
        மிகவும் முக்கியமான ஒன்று , இவர் ஒரு சிறிய வட்டத்துக்குள் இல்லாமல் , இன்றைய இளைஞர்கள் எழுதும் பெருவாரியான  பதிவுகளை படிக்க கூடியார் , பின்னோட்டம் இட கூடியார் .

நன்றி லக்ஷ்மி அம்மா ... வாழ்த்த வயது இல்லை வணகுகிறோம் .


அறிமுகம் - 2

பெயர் : இந்திரா

                       இந்திரா , ஜனரஞ்சகமான , நகைசுவை ததும்ப எழுத கூடிய பெண் பதிவர்களில் இவர் மிக முக்கியமானவர் . இவர் பல்பு என்கிற தலைப்பில் எழுதிய பதிவுகள் கண்டிப்பாக நகைசுவைகளுக்கு பஞ்சம் இருக்காது .
இந்திரா பெருமையுடன் வாங்கிய பல்புகள் : நான் வாங்கிய பல்பு..தேடிப்போய் வாங்குன பல்பு...  ,   போன் பண்ணி பல்பு குடுக்குறானுக...
தன்னுடைய அனுபவங்களை சுவரசியமுடன் சொல்ல கூடியார் .

வாழ்த்துக்கள் இந்திரா ....

அறிமுகம் - 3  


பெயர் : Ananthi Subbiah
வலைப்பூ  :  1.) அன்புடன் ஆனந்தி
                     

       ஆனந்தி  சுப்பியா , நிறைய கவிதைகள் , அனுபவங்கள் பல , சமையல் என்று எல்லாம் எழுதும் ஒரு பெண் பதிவர் , ரொம்ப எளிமையான , எதார்த்தமான எழுத்துக்கள் . படிபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்  ஒரு வலைப்பூ . நிறைய எழுதுங்கள் ஆனந்தி ..

வாழ்த்துக்கள் ஆனந்தி ....
 அறிமுகம் - 4

பெயர் : தோழி பிரஷா
வலைபூக்கள் :  1 .)  ரோஜாக்கள்
                                  2 .)  தகவல் தொழில்நுட்ப செய்திகள்
                                  3 .)  படத்துடன் கவிதைகள்.

         தோழி பிரஷா , வலைப்பூக்களில் கவிதை எழுதுபவர்களை பார்த்து இருக்கிறோம் ஆனால் வலைபூவையே கவிதையாய் வைத்து இருபவரை பார்த்து இருகிறோம? அதுதான் இவரின் வலைப்பூக்கள் .   இவர் கவிதை பதிவு இடுபவர் மட்டும் இல்ல இவரின் வலைபூக்கள் எல்லாமே கவிதையாகத்தான் இருக்கும் . அதிலும் இவரின் ரோஜாக்கள் வலைபூ கண்ணை பறிக்கும் ரோஜாகளினால் அலங்கரிக்க பட்டு , ஒரு ரோஜா தோட்டம் போல் ஜொலிக்கும் . மனதை வருடும் கவிதைகள் மட்டும் அல்லாது , தகவல் தொழில்நுட்பத்திலும் கலக்கும் பெண் பதிவர் .

வாழ்த்துக்கள் தோழி பிரஷா .

அறிமுகம் - 5  


பெயர் :  சக்தி ( sakthi )
வலைப்பூ  :  வீட்டுப்புறா

            சக்தி , இவரும் ஒரு கவிதை பதிவர் தான் . அருமையான கவிதைகளுக்கு தகுந்த படங்களை தேடி பிடித்து ஒவ்வொரு பதிவுவிளையும்  சேர்த்து இருப்பார் . நல்ல கவிதைகள் இவரது பதிவில் கொட்டி கிடக்கின்றன ..கண்டிப்பாக படிக்க வேண்டிய வலைபூ .

வாழ்த்துக்கள் சக்தி ...

அறிமுகம் - 6  


பெயர் : ரீனா
             ரீனா, கவிதை , தொடர் கதை , சினிமா , அனுபவம்  மற்றும் பல என்று எல்லா பக்ககளையும் தொட கூடிய பல்சுவை பெண் பதிவர் . நல்ல பொழுதுபோக்கு வலைபூ . நடுவில் கொஞ்சம் நாள் பதிவிடாம இருந்து இப்போது மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டார் . தொடர்ந்து எழுதுங்கள் ரீனா .

வாழ்த்துக்கள் ரீனா . .

அறிமுகம் - 7  

வலைபூக்கள் :  1 .)  மனச்சாரல்கள்
                                  2 .)  FOREVER LOVE


         என்றும் அன்புடன்!! , பெயர் வெளிட விரும்பாத இந்த நண்பி இந்த வருடம் தான் புதியதாக பதிவுலகிருக்கு  வந்து இருக்கிறார் , புதியவர்களை ஊக்க படுத்தினால்தான் அவர்களுக்கு ஒரு தனம்பிக்கை கிடைக்கும் அந்த வகையில் இந்த அறிமுகம் . . இன்னும் நிறைய எழுதுங்கள் .   மனச்சாரல்கள் லில் கவிதைகளும் , FOREVER LOVE  வலைப்பூவில் படங்களுக்கு அழகான வரிகளையும்  இணைத்து பதிவிடுகிறார் , தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்!! . . .அறிமுகம் - 8  


வலைபூக்கள் :  1 .)  வாசல்
                                  2 .) மனதோடு  மட்டும் 


                கௌசல்யா  , மிகவும் திறமையான பதிவர் , வாசல் வலைபூவில் கவிதைகளையும் , மனதோடு  மட்டும்  வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளிலும் சுவாரசியமான பல பயன் உள்ள பதிவுகளை இட்டுள்ளார் .அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வலைப்பூ .

வாழ்த்துக்கள் கௌசல்யா. .
 
அறிமுகம் - 9  


வலைப்பூ :  Chitra Amma's Kitchen

                சித்ரா , பதிவுலகில் மணக்க மணக்க ஒரு வலைப்பூ , அதாங்க சமையல் ஸ்பெஷல் வலைப்பூ , Chitra Amma's Kitchen திறந்திங்கினாவே சும்மா சமையல் மணக்கும் அந்த அளவுக்கு பல்வேறு வகையான சமையல் குறிப்புகளையும் , செய்முறைகளையும் விளக்கி இருக்காங்க , சும்மா கல்யாண வீடு போல களைகட்டுது இவங்க வலைபூ .
               புதியதாய் கல்யாணம் ஆனா பெண்களுக்கும் , கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும் இனி கவலையே இல்லை , இவங்க வலைபூ வை படிச்சாலே பொது சும்மா உங்க வீட்டுல சமையல் பின்னிடலாம் ... கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டிய வலைபூ . .

நன்றி சித்ரா அம்மா , வாழ்த்துகளும் . ....


அறிமுகம் - 10  


வலைபூக்கள் :  1 .)  Geethas Womens Special
                       2 .) News
                       3 .) Tech Blog


                கீதா  அஞ்சலி , மொத்தம் மூன்று வலைபூக்கள் , மூன்றும் மூணு விதம் . அழகான template உடன் ஒரு வலைப்பூ என்றல் , நியூஸ் என்று செய்திகளை தரும் ஒரு வலைப்பூ . Tech Blog  என்று தொழிநுட்ப பல பயனுள்ள ஆலோசைனைக்களை அள்ளி வழங்குகிறார் . கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூக்கள் ...


வாழ்த்துக்கள் கீதா அஞ்சலி ...
பிரபலத்தின் வலைப்பூ -1 


                  வலைப்பூ எழுதி பிரபலம் அடைந்தவர்கள் பல பேர் உண்டு , அவர்களை பிரபல பதிவர் என்று அழைகிறார்கள் . ஆனால் பிரபலங்களும் பதிவுலகில் உண்டு அதாவது ஏற்கனவே ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருக்க கூடியவரும் இங்கு பதிவுலகத்தில் பங்களிபதுண்டு , அது போல் ஒரு பெண் பிரபலத்தின் வலைப்பூ தான் இங்கு  இப்போது  அறிமுகம் .
                
               
பிரபலத்தின் வலைப்பூ அறிமுகம்


பெயர் : கவிதாயினி தாமரை .
வலைப்பூ  :   கவிதாயினி தாமரை

                           தாமரை , திரைப்படங்களில் காதல் கவிதையால் ஏற்கனவே தமிழ் மக்களை  தாக்கிய கவிதை புயல் , ஆயிரகணக்கான ரசிக உள்ளங்களை கொள்ளை அடித்தவர் , திரைப்பட பாடல் ஆசிரியர் தமிழ் கவிஞர் தாமரை ...............
 இவரின் கவிதை தொகுபுகளைதான் இந்த வலைப்பூவில் காணலாம் . திரைப்பட பாடல்களில் நம் மனதை கொள்ளை அடித்தவர் , இங்கு பதிவுலகத்திலும் தன்னுடைய கவிதையல் நம்மை கொள்ளை அடிக்க வந்து இருக்கிறார் . இவரை பெருமையுடன் அறிமுக படுத்துகிறோம் .

நன்றி கவிஞர்  தாமரை அவர்களே ......

                     


          அறிமுக படலம் எனபது இத்துடன் முடிய போவதில்லை இது ஒரு தொடக்கமே , இனி வரும் காலங்களில்லும் குறிப்பிட்ட கால  இடைவெளியில்  அறிமுக படலலங்கள்  தொடரும் ஒவ்வொரு பிரிவின் கீழ் .

இங்கு அறிமுகபடுத்திய  அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் ...

              இங்கு நமது வலைப்பூ குழுமத்திலும் பதிவு இடும் இளம் பதிவர்களுக்கும் தங்கள் ஆதரவையும் , அங்கீகாரத்தையும்  தந்து ஊக்கம் அளிக்குமாறு வேண்டும்  அன்பு உள்ளம் ......

மீண்டும் சந்திக்கும் வரை ,

நன்றி , 

அன்புடன் ,

Admin http://tamilrockzs.blogspot.com/
Category: 10 comments

Air india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது!. .

      
Air india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது!. .

         என் சோக கதைய கேளு தாய் குலமே! அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வைக்கணும்,அப்படி ஒரு சோக கதை நான் இந்த தடவை இந்தியா போன கதை. ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு Dec 1 எனக்கு லீவ், ஓகே ஆச்சுங்க. சரி இதுக்கு மேலயும் delay பண்ண வேணாம்னு அன்னைக்கே credit card ல ticket a book பண்ணேன். திருச்சி கு air india Express தான் அடிக்கடி இருக்கு. so அதுலயே டிக்கெட் புக் பண்ணேன். அப்பதான் பிரச்சனை ஆரம்பிச்சுச்சு, 6 மணிக்கு flight. 3 மணிக்கு Check in. 2.30 மணியாகியும் நான் arrange பண்ண கார் வரல சரி னு என் friend கு phone பண்ணி வர சொன்னேன் அவரும் இதோ 5 நிமிசத்துல வரேன் டா நண்பா னு சொன்னாரு. நானும் நம்பி புது t tshirt புது shoe( ஊருக்கு போறோம் ல ) போட்டுக்கிட்டு ஜம் னு wait பண்ணேன் 5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு 15 நிமிஷம் ஆச்சு, ஆள காணோம் waiting. சரி னு போன் பண்ண , நண்பா ஒரு அர்ஜென்ட் மீட்டிங் ல மாட்டிகிட்டேன் டா நீ டாக்ஸி பிடிச்சு போய்டு டா plz னு ரொம்ப பாசமா சொல்லிடாரு ( நண்பேண்டா ). நானும் டாக்ஸி பிடிச்சு ஒரு வழிய ஏர்போர்ட் கு போய் சேர்ந்தேன்.. ஷ்...... அப்பா டா னு ஒரு பெரு மூச்சு விட்டு கிட்டே உள்ள போனா அங்க என்னோட client நிக்கிறாரு. என்னை பார்த்ததும் அவருக்கு அப்படி ஒரு சந்தோசம்.. ஏன் னு கேக்றீங்கள ஏன்னா நான் அவ்ளோ நல்லவன் . இருங்க இப்பவே சிரிக்காதீங்க இன்னும் டைம் இருக்கு . இவரு ஏன் டா நம்பள பார்த்து சந்தோஷ படுறாரு னு மனசுக்குள்ள mild அ ஒரு doubt வந்துச்சு ,இருந்தாலும் நானும் சிரிச்சு கிட்டே அவரு பக்கத்துல போனா , டேவிட் எனக்கு ஒரு சின்ன உதவி னு கேட்டாரு , நானும் என்ன உதவி sir கேக்க , எனக்கு luggage ல 7kg கூடி போச்சு நீ adjust பண்ணி கொண்டு போறிய னு ஒரு குண்ட தூக்கி போட்டாரு பாருங்க நானும் இப்படி தலைய ஆட்டுனேன். இதுக்கு தான் சொன்னேன் நான் ரொம்ப நல்லவன் னு . இப்ப சிரிங்க என் luggage லாம் packed open பண்ண முடியாத நிலமை. So ஒரு carry bag வாங்கி luggage அ போடுங்க sir னு சொன்னேன். 3kg glucose biscuit, 3 kg local dates அதாங்க பேரீச்சை பழம் னு கொடுத்தாருங்க . எனக்கு வந்துச்சு பாருங்க கோவம், grrr என்ன பண்ணேன் தெரியும் ல இப்படி சிரிச்சுகிட்டே அவரு கூட போய்ட்டேன் luggage counter கு. அங்கயும் கொஞ்சம் பிரச்சனை அதையும் சமாளிச்சு ஒரு வழிய flight கு போய்ட்டேன். அழகான air hostel ( ஷகிரா வ விட கொஞ்சம் கம்மி தான் அழகுல wink) welcome னு பார்த்து சிரிக்க நான் விட்டு வழிய போய் seat அ பிடிச்சு உட்கார்ந்த்துட்டேன் . எல்லாம் நல்ல படிய முடிஞ்சு flight take off ஆச்சு. அப்படியே லைட் அ கண்ண மூடி ஒரு குட்டி தூக்கம் போட்டேன் 1sleep அப்ப தான கனவு வரும் கனவுல இந்தியா jolly ல இருக்கலாம் But பாழா போனா கனவுல கூட flight ல போற மாதிரிதான் வருது . சரி னு பக்கத்துல உள்ள ஆளு கிட்ட பேச்சை குடுத்தேன். அப்ப தாங்க திடீர்னு pilot அறிவிப்பு னு சொன்னாரு. அன்பான பயணிகளே flight ல ஒரு சின்ன technical problem அதுனால நான் flight அ திருச்சி வரைக்கும் கொண்டு போக முடியாது, நான் மும்பை ல எப்படியாவது land பண்றேன் அங்க problem solve பண்ணிட்டு நம்ம அப்பறமா திருச்சி கு போகலாம் னு cool அ சொல்றாரு. இதுல வேற யாரும் பய பட வேணாம் relax அ இருங்க னு சொல்றாரு . அவ்ளோ தாங்க அதுக்கு அப்பறம் ஒரு பய புள்ள கூட தூங்கல எல்லாம் பீதி (பேதி இல்லங்க) ஆகி கத்த ஆரம்பிச்சுடாங்க. Flight ல மூணு important passanger இருந்தாங்க
NO 1 ஒரு lady 8 month preganent இங்க மெடிக்கல் problem நாலா இந்தியா கு போறாங்க emergency la
No 2 ஒரு பையனோட அப்பா இறந்துட்டாரு, already அவனுக்கு லீவ் கிடைக்கதானால ஒரு நாள் late தான் அவன் இந்தியா கு போறான்
No 3 இன்னொரு பையனுக்கு dec 3 rd marriage இன்னும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கு. இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன் பிறந்த குழந்தைய கூட பாக்க முடியாம 3 மாசம் கழிச்சு தான் இந்தியா கு போறேன் . எல்லாரும் air hostel அ பிடிச்சு என்ன ஆச்சு என்ன ஆச்சு னு கேக்க அவங்க எல்லார் கிட்டேயும் தெரியல தெரியல னு சொல்ல , பாதி பேரு போய் pilot ரூம் கதவ தட்ட ஒரே கலவரமா இருந்துச்சு flight. திரும்பவும் pilot சொன்னாரு யாரும் கவலை படாதீங்க நம்ம safe அ மும்பைக்கு போய்டலாம் னு. நாங்களும் நம்பி அமைதியா இருந்தோம் . மும்பை airport கு போனா அங்க flight கு clearance கிடைக்கல. எங்க pilot ஆளு சிங்கம் ல மேலேயே சுத்தி சுத்தி 8 லாம் போட்டு காமிச்சாரு. ஒரு வழியா ரொம்ப கஷ்டப்பட்டு land பண்ணிட்டாரு நம்ம சிங்கம் . இப்பதாங்க எல்லார்க்கும் உயிரே வந்துச்சு. இப்ப நம்ம pilot சொன்னாரு 15 min ல problem solve ஆகிடும் நம்ம போலாம் னு . ஆனா 45 min ஆச்சு ஒன்னும் நடக்கல இப்ப எல்லாரும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க . நம்ம pilot சிங்கம் திரும்பவும் இன்னும் 15 min ஆகும் wait பண்ணுங்க சொன்னாரு . அடுத்த 45 min ஆச்சு இப்பவும் ஒன்னும் நடக்கல . 1.5 hrs fight குள்ளவே இருக்கோம் A/C off, door உம் closed எல்லாருக்கும் மூச்சு விடவே கஷ்டமா போச்சு. அந்த lady வேற ரொம்ப கஷ்ட படுறாங்க . ஒரு வயசான uncle போய் ( அவர்க்கு ஒரு அழகான பொண்ணு இருந்துசுல) air hostel கிட்ட கேக்க அது “we will give some thing to eat go and eat” னு சொல்ல எல்லாரும் கோவ பட்டு அந்த air hostel ல திட்ட, அந்த air hostel அழுதுகிட்டே எல்லார் கிட்டேயும் sorry கேட்டுச்சு. 2 hrs ஆச்சு இன்னும் flight ready ஆகுற மாறி தெரியல. எல்லார்க்கும் மூச்சு விட இன்னும் கஷ்டமா போச்சு. அப்புறம் எல்லாரும் door தட்டி window வ தட்டி கலாட்ட பண்ணி பிரச்சனை பண்ணோம். கடைசியா door திறக்க வைச்சோம் . எல்லாரும் கீழ இறங்கி flight முன்னாடி போய் வருசையா உட்கார்ந்துடோம். நம்ம தான் போரட்டாதுல பெரிய ஆள் ஆச்சே. இதுல air india express ஒழிக ஒழிக னு சவுண்ட் வேற. மும்பை chief security officer வர அவர நம்ம பசங்க ஹிந்திலேயே பேசி ஓட வைச்சுட்டாங்க. ஒரு வழியா எல்லாம் சரி ஆகி எல்லா பிரச்சனயும் solve ஆகி again flight take off. Air hostel வந்து safety instruction கொடுக்க நாங்க ஜோரா அ கை தட்டுனோம் பாருங்க அந்த air hostess   தாங்க முடியாம சிரிச்சுடுச்சு அதும் என்ன பார்த்து இப்படி தாங்க நான் இந்த தடவ இந்தியா போனேன்

இதெல்லாம் கூட நான் மறந்துடேங்க ஆனா இந்தியா ல இருந்து வரப்ப நடந்துச்சு பாருங்க ஒரு மேட்டர். நானே கவலய ஏன்டா போறோம்னு சோகமா வந்தா, நம்ம ரொம்ப வேகமா போய்கிட்டு இருக்கோம் அதுனால 20 min சீகிரமவே துபாய் கு போய்டலாம் னு சொல்லி வைச்சாரு பாருங்க ஆப்பு .


அன்புடன் ,
டேவிட் . . .


Category: 9 comments

" LOVE FOREVER "


                 One nite a boy and a girl was sitting inside the car. A boy want to reveal something to his girl friend. ( means he decided to leave her, going to marry other girl). Both maintained silence for some time. A girl gave a letter to her lover. He took the letter from her and kept with him. That guy told her am going to leave you. When he was about to finish his words an accident occurred, that girl died in that spot. After some time, the boy opened the letter which she given to him. A drops of tear came from his eyes.
Can u guess friends? What was in that letter.
A girl written a single sentence      “I will die if u leave me”*************************************************************************************
"Love is Blind "

A boy and a girl was there. Both loved each other (enna friends boy n girl na lovers thanu thiduringala. Wait am coming, not to ur home to the matter). That guy loved a blind girl.


They both hold each other hands n walking on the road. The girl asked him will u marry me or drop me?.


The boy replied “surely I marry you because I love ur heart not of your physical appearance and he promised her”. The girl felt happy and lye on his shoulder.
Days passed, The girl undergone eye operation and she was able to see everything. Yes, she got her eyesight. she was so happy . . .


The guy came and asked her " shall we marry now?"

The girl replied "how I can marry u?  don’t play".   The guy maintained silence and started from that place. After walked out some distance,     he turned back  and told her .....


“please take care of eyes”


“Love is blind”


With Love, 
Sruthi ட்சுனாமி

எந்த மொழியில் சொல்லி அழ?
என்ன சொல்ல என்ன சொல்ல
எந்த வார்த்தைகளில் சொல்ல?
ட்சுனாமி அலை பேரழிவை
எந்த மொழியில் சொல்லி அழ?

பால் குடித்த சிசு வாயை மூடுவதற்குள்
பால் தந்த அன்னை விழி இமைபதற்குள்
அத்தனையும்  அழிவாட்சே ,
அரும்புகளும் பினாமட்சே!

தென்னைமர உச்சி வரை
சீறி வந்த பேரலையால்
தெருவென்ன, ஊரென்ன
திசை எல்லாம் பினாமாட்சே !

உயிர் கொடுத்த பெற்றோர்கள்
உடன் பிறந்த சகோதரர்கள்
செய்திட்ட பாவமென்ன
சீற்றம் கொண்ட பேரலையே!

கடல் தன்னை தாயக
களம் எல்லாம் தொழுதவர்கள்
கடல் சிதைத்திட்ட சவங்கலேன
கரை ஒதுங்கி போனதென்ன?

அன்னை ஆவல் மடியாக
அரவணைத்து வளர்த்து விட்டு
ஆர்பரித்து அலை கரத்தால்
அழித்து ஏன் பெருங்கடலே?

ஜப்பானில் உயர் ஈழந்தவர்களுக்கு இதை சமர்பிகின்றேன்

கண்ணீருடன்,

யுரேஷ் !!

அன்புத் தோழி


தேடினேன் தேடினேன் எனக்கு ஒரு தோழி
தேவதையாக நீ வந்தாயடி தோழி
உன்னுடன் சிரித்தேன் சிரித்தேன் மகிழ்ந்தேன் உறவாடி
துன்பங்கள் பல இருந்தன என்னுள் !
உன்னிடம் பகிர்ந்த போது அவை
மறைந்து இன்பமாக நின்றேன் தோழி!
என்னுள் இளம் தென்றலை வீச செய்தவள் நீ
அன்பு தோழி என் அன்பு தோழி
என் உள்ளம் உருகியது உன் அன்பில் தோழி
வேண்டும் தோழி நீ வேண்டும் தோழி
வாழ்நாள் முழுதும்!

காலம் கடந்தும் உந்தன் நெஞ்சில் நான்
காலம் எல்லாம் இருக்க வேண்டும் தோழி
நட்பானேன் தோழி நான் நட்பானேன் தோழி
வெல்வோம் தோழி நம் வெல்வோம தோழி
விதியை ஒரு நல நம் வெல்வோம் தோழி
இருப்போம் தோழி நம் இருப்போம் தோழி
ஒருவர் மனதில் ஒருவர்
உயர்ந்து நிற்போம் தோழி !


என்றும் நட்புடன்
உங்கள் அன்புத் தோழன் ,
யுரேஷ் !!!

துள்ளி திரிந்த காலம்யசு எட்டு  ,பேச்சு செம லட்டு!!,


ண்ணுறே விஷமம்மோ செம அராத்து!!  
அதுக்கு வாங்குவோம் பாருங்க செம மொத்து !!!

நாங்க ஒரு 10 பேரு இருப்போம் ,சும்மா கில்லி மாதிரி துரு துருன்னு இருப்போம் !!
வாரத்துலே 2 நாள் ஏன்டா வருதுன்னு இருபாங்க எங்க ஏரியலே ஹி ஹி ..
சனி ,ஞாயறு அந்த நாள்லே எங்களே, கைலே பிடிக்க முடியாது !!!

அவுத்து விட்ட மாடு போல,  உண்மையே சொல்லிட்டோமோ ,பிளட் மாத்தி போடு ஷகிரா
சுகந்தாரமானே கொசு இசை அது இல்ல , சிறகுஅடிக்கும் பட்டாம்பூச்சி போல !!!

நாங்க எல்லாம் ஒன்றா சேர்ந்தோம்னா பசி , தூக்கம் , எல்லாம் மறந்துருவோம் ,ஆனால் பாவம் தெருவாசிகள் ரணகளம் ஆயிடுவாங்க !!!

என்ன என்ன பண்ணுவோம் தெரயுமா ?இப்போ நினைச்சா கூட சிரிப்பு தான் வருது ,,ஹிஹி

ஒவ்வரு வீட்டுக்கும் போயி அழைப்பு மணி (calling bell )அடிச்சிட்டு ஓடிடுவோம் !

அஞ்சல் பெட்டி லே (போஸ்ட் பாக்ஸ் ) புடி புடியா மண் அள்ளி போடுவோம் !!!
காய வச்சி இருக்க மாங்காய் வற்றல் எல்லாம் ஆட்டைய போட்டுருவோம் !!
நாங்க ஒவ்வொருத்தரு ,ஒரு பொம்மை வச்சி இருப்போம் ,அதுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் !!

ஒவ்வொருத்தர் வீடுலேயும் , கொஞ்சம் கொஞ்சம் பருப்பு ,அரிசி ,எண்ணெய்-னு ஆட்டைய போட்டு ,கூட்டாஞ்சோறு செய்வோம் !!அப்படி ஒரு தடவை ,எண்ணையோடு மன்னண்ணை கலந்து முட்டை பொரிசேன்
செம காமெடி அது !! ஆனால் அப்பகூடே பாலபோனே எங்க பசங்க விடல அதையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமே சாபிட்டாங்க !!
கண்ணாமூச்சி விளையாட்டும் போது, நாய் இருக்கிறது தெரியாமே மறைஞ்சி இருக்க போயி, நாய் கடி வாங்கினது மறக்கமுடியாதே ஒன்று !!!!
வாசலில் சாய்வு நாற்காலியில் தூங்கிட்டு இருக்க தாதா காதுலே, ஓஓஓஒ - னு கத்திவிட்டு ஓடிடுவோம் !!!!

மிதிவண்டி(bicycle)பந்தையம்  நடக்கும், ஆனா எனக்கு மிதிவண்டி அப்போ மிதிக்க தெரியாது ,, அதுனாலே எண்ணெய் உப்புக்கு சப்பாணியின்னு பின்னாடி உக்காரே வச்சிடாங்க ,, சும்மா விடுவோமா நாங்க ,, டயர்லே காத்து பிடுங்கிடோம்லே,,,

பான்சி (fancy ) ஷோ பன்னது ,,நான் அப்போ எல்லார்க்கும் மேக் அப் போட்டது ,,
இப்படியே நான் சொல்லிகிட்டே போவேன் ,, 10 பதிவு கூட எழுதலாம் !!! அவ்ளோ சேட்டை !!ஆனா படிக்கிறே உங்க கண்களில் ரத்தம் வர கூடாதுன்னு நான் போறேன் !!!

என்னோடே எல்லாம் குறும்பு தனத்தையும் மூட்டைக்கட்டி பத்துகாலே வருஷமா பொதைச்சி வச்சி இருந்தேன் !!!ஆனா நம்போ தலைவா ,, ஆதான் நம்போ குரு ,, ஆதாங்க ராஜா ராஜா ராஜேஷ் !!!!!இப்படி ஒரு அற்புதமானே ஒரு வின்தளத்தை உருவாக்கி ,,என்னைபோன்று பலபேரின் குறும்போடு ,திறமையையும் வெளிக்கொண்டு வந்த ராஜேஷ்க்கு நன்றி !!

அன்புக்கு  நன்றி சொல்லி
குன்றின்  மேல் நின்றால் ஷகிரா !!!
சரி சரி பொறுமை எதுக்கு கோவம் இப்போ பாருங்க !! 
சிங்கத்துக்கு சலாம் போட்டு சிங்களா நின்றால் ஷகிரா !!! எப்புடி!!!

பதிவுக்கு கருத்து மட்டும் போடாமல் ,,மேலும் உங்களின் சின்ன வயதில் நடந்த குறும்பு ,சேட்டை,, அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!!
இறுதியில் குறும்புகளின் தலைவன்() தலைவி ,,(BEST OF KURUMBU ) விருது வழங்கப்படும் !!

மீண்டும்  ஒரு குறும்(பூ)பு பதிவோடு வருவேன் !!


உங்கள் அன்பு தோழி !!
ஷகிரா !!! 

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters