Followers

பிரிவு...


விரல் பிடித்து "அ" எழுத
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை"  வேண்டாம் என்று
நினைத்தே!

"அம்மா"  என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம்  நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!

கேளடி என் தாயே!!!!!!!!

புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....


அன்புடன் , 
ரேணு ....

"அப்பா" - சிறுகதை

hai Friends,

                      இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச்சுட்டு உங்க மனசுல ஒரு நல்ல பாதிப்பு ஏற்பட்ட அது நம்ம சமூகத்துக்கு கிடைச்ச வெற்றியா இருக்கும் இப்ப கதைய படிங்க .


அப்பா,


                           இன்று அப்பா திருச்சி செல்வதால் கொஞ்சம் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன் வீட்டுக்கு. வீட்டுக்கு போற வரைக்கும் என் குடும்பத்த நபர்களை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன். அப்பா , 60 வயது ஆனவர். அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து போன வாரம் தான் பணி ஓய்வு பெற்றார்.வீட்டில் ராஜேஷ் தான் ( என் மகன்) அவருக்கு ரொம்ப செல்லம். அவன் கூட தான் அவர் மனசு விட்டு சிரிச்சு பேசுவார். அவர் தான் அவனுக்கு வீட்டில்குரு.அம்மா திருச்சிக்கு போன பிறகு கொஞ்சம் தடுமாறி தான் போய் விட்டார். இப்பொழுது திருச்சியில் இருக்கும் அம்மாவை பார்க்க போகிறார். அம்மா போன வருடம் சுமதியிடம் ( என் மனைவி ) ஒரு சின்ன சண்டையில் கோவப்பட்டு திருச்சிக்கு போனாங்க. நான் தான் போய் விட்டு வந்தேன்.எப்பொழுதும் பொறுமையாக போகும் அம்மா, அன்று கொஞ்சம் கோவபட்டாங்கனு தான் சொல்லணும்.சுமதி கொஞ்சம் சிடு சிடு குணம்,பொறுமை கிடையாது. வீடு வந்துடுச்சு.


                    அப்பா தயாராகி என் வருகைக்காக மெளனமாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.அப்பா இன்னைக்கே போகனுமா? என்ற என் கேள்விக்கு விரக்தியான சிரிப்புடன் அம்மாக்கு என்ன விட்ட யாரும் இல்ல நான் தான போய் பாத்துக்கணும் என்றார். அதுவும் சரி தானங்க அத்தையும் தனிய என்ன பண்ணுவாங்க, அதுவும் இல்லாம இந்த மாசத்தில் இருந்து அவர்க்கும் சம்பளம் இல்லை, இருக்குற விலை வாசிக்கு பணம் குடுக்காம இருக்க அவர்க்கும் ஒரு மாதிரியா இருக்காத? நேரம் காலம் தெரியாம சுமதி கடுகடுத்தாள்.வேறு வழி இல்லாமல் நான் மௌனமாய் நின்றேன்.அப்பா முகத்தில் மீண்டும் விரக்தி புன்னகை. அப்பா நீங்க ட்ரெயின்ல போக வேணாம், நான் கால் டாக்ஸி சொல்லி இருக்கேன். 50 நிமிசத்தில திருச்சி போய்டலாம் என்றேன். அப்பா சரிப்பா என்றார்.


                           ராஜேஷ் தான் இன்னும் சமாதனம் ஆகவில்லை. அறையில் சென்று கதவை மூடி கொண்டான். டாக்ஸி வந்துடுச்சு அப்பாவின் பொருட்களை எல்லாம் டாக்ஸி யில் ஏற்றினேன்.கடைசியாக அப்பாவும் ஏறி அமர்ந்து விட்டார்.நான் டிரைவ்ரிடம் சென்று சொன்னேன் "அண்ணே கொஞ்சம் பார்த்து பொறுமையா போங்க. கரெக்டா அன்னை முதியோர் இல்லத்துல விட்டுருங்க "


                  ராஜேஷ் சத்தமாக படித்து கொண்டிருந்தான் " தாயிற் சிறந்தொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை".


அன்புடன் ,
டேவிட் . . .

**** **** காதல் கொண்டேன்**** ****


  **** **** காதல் கொண்டேன்**** ****
என் சுவாசக்காற்றே ,,பூ எல்லாம் உன் வாசம்,,, உன்னை தேடி
வண்ணக்கிளி ,,உள்ளம் உருகுதே
, வசீகரா,,உன்னை கண் தேடுதே ,,உனக்காக
உலகம் விலை பேசவா
நீ ,, எப்படி மனசுக்குல் வந்தாய் ??
என்னை பார்!!!,என்னை தெரயுமா,,??
உன் மேல ஆசை வச்சேன் ,
உனக்கென்ன பிறந்தேன் ,,உனக்காக மட்டும்!!!!!!!

36_4_13.gif யார் நீ ?? சொல்லட்டுமா !!! 36_4_16.gif
உயிரே !!சொந்தம் ,பந்தம் _ எல்லாமே என் ராசாதான் !!
திருடன்_ "உள்ளம் கவர்ந்த கள்வன் "
மன்னன்_ 'காதல் மன்னன்' !!!!!

amour
வல்லவன்_"ஆசை மன்மதன் "
ராவணன்_ "என் இதய திருடன்" "எங்கிருந்தோ வந்தவன்
ரட்சகன் _ஆண் அழகன் !!
மச்சக்காரன் _"என்னை ஆளப்பிறந்தவன் "
amour

என் ஆசை மச்சான் _"ஆயரத்தில் ஒருவன் ,
அடடா என்ன அழகு!!!!
நாயகன் _காவிய தலைவன் !!
அரும்பு மீசை குறும்பு காரன்
amour

என்னமோ பிடிச்சிருக்கு _"அதே கண்கள்" ,"ஸ்டைல்" "",தில்"
,குறும்பு "அப்பாவி "கம்பீரம் ' சிங்கம்
ஜென்டல் மென் "வீரா" சாக்லேட் பையா
ஏன் இப்படி மயக்கினாய்????
amour

"என்னமோ நடக்குது "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
அன்புள்ள துரோகி ,எதரி , நீ வேணும்டா செல்லம்
என் அருகே நீ இருந்தால் ,, ஆனந்தம் ஆனந்தம்
என் உயிர் நீதானே , என்னை விட்டு போகாதே

amour
ஓ லா லா ,,ஒரு முறை சொல்லிவிடு ,, ஐ லவ் உ,  நேசிப்பாயா???அன்பே அன்பே !!!

நினைத்து நினைத்து பார்த்தேன் , மனம் விரும்புதே உன்னை
நான் பேச நினைப்பதெல்லாம்
அன்பே வா ,
கண்ணால் பேசவா !!
amour

amour என் உயிரும் மேலான , காதலா காதலா ,,
ஒரு வெள்ளை புறா ஒன்று ,, நீ வரும் பாதையெல்லாம்,
, ஆசை ஆசையாய்,,அன்பே உனக்காக
காலமெல்லாம் காதிருப்பேன்!

"ப்ரிண்ட்ஸ்"!
"இது எப்படி இருக்கு" !!!
"என்றும் அன்புடன்"
"அன்பு தோழி
ஷகிரா!!!!


குறிப்பு : இவை அனைத்தும் சினிமா படத்தின் பெயர்கள் !!!!!!!!
இந்த ப்ளாக்amour பிடிச்சி இருந்தா "whistle " போடுங்க wink wink amour
                                                         
Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters